தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 14வது மாநிலப் பொதுக்குழு 14.04.2013 ஞாயிறன்று தஞ்சை வடக்கு மாவட்டம் கும்பகோணத்திலுள்ள மகாமகம் கலையரங்கத்தில் காலை 10.30மணிக்கு கூடியது.
துவக்கமாக மேலாண்மைக்குழுத் தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி அவர்கள் உளத்தூய்மை என்ற தலைப்பில் சிறிய உரையுடன் மாநில நிர்வாகம் குறித்த மேலாண்மைக் குழுவின் அறிக்கையை தாக்கல் செய்தார்.
அதைத் தொடர்ந்து தணிக்கைக்குழு சார்பாக மாநிலத் தணிக்கைக்குழு உறுப்பினர் தவ்ஃபீக் அவர்கள் தணிக்கைக்குழுவின் அறிக்கையை தாக்கல் செய்தார்.
அதைத் தொடர்ந்து மாநிலப் பொதுச் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் தரணியெங்கும் தாவா பணிகள் என்ற தலைப்பில் கடந்த ஓராண்டுகளில் செய்யப்பட்ட தாவா பணிகளை தொகுத்து பட்டியலிட்டு ஆண்டறிக்கையை வாசித்தார்.
மாநிலச் செயலாளர் யூசுப் அவர்கள் பொதுசேவையிலும், போராட்டத்திலும் டிஎன்டிஜே கடந்த ஓராண்டுகளாக ஆற்றிய பணிகளை ஆண்டறிக்கையாக சமர்ப்பித்தார்.
மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் சையது இப்ராஹீம் அவர்கள் ஊடகங்களிலும், விவாதங்களிலும் தவ்ஹீத் எழுச்சி என்ற தலைப்பில் கடந்த ஓராண்டுகளில் ஊடகங்களில் தவ்ஹீத் ஜமாஅத்தின் எழுச்சியையும், டிஎன்டிஜே சந்தித்த விவாதங்களையும், ஏகத்துவ எதிரிகளிளை ஓடவிட்டு, அல்லாஹ் நமக்கு அளித்த வெற்றியையும் பட்டியலிட்டு ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார்.
அதைத் தொடர்ந்து கடந்த 2012 ஆம் ஆண்டு தாவா பணிகள் மற்றும் இரத்ததானத்தில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாவட்டம் மற்றும் கிளைகள், மண்டலங்கள் மற்றும் மண்டலங்களின் கிளைகள் ஆகியவற்றிற்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தாவா பணிகளில் அதிக புள்ளிகளைப் பெற்று முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாவட்டங்கள் :
1.தென்சென்னை மாவட்டம்
2.திருவள்ளூர் மாவட்டம்
3.வடசென்னை மாவட்டம்
தாவா பணிகளில் அதிக புள்ளிகளைப் பெற்று முதல் மூன்று இடங்களைப் பெற்ற கிளைகள் :
1.மதுரவாயல் கிளை (திருவள்ளூர்)
2.தரமணி (தென் சென்னை)
3.பாண்டி பஜார் (தென் சென்னை)
இரத்ததானத்தில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாவட்டங்கள் :
1.தென் சென்னை
2.திருவள்ளூர்
3.வடசென்னை
இரத்ததானத்தில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற கிளைகள் :
1.பாண்டிபஜார் (தென் சென்னை)
2.தரமணி (தென் சென்னை)
3.ஆவடி (திருவள்ளூர்)
அவசர இரத்ததானத்தில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாவட்டங்கள் :
1.மதுரை
2.திருச்சி
3.நெல்லை
தாவா பணிகளில் அதிக புள்ளிகளைப் பெற்று முதல் மூன்று இடங்களைப் பெற்ற மண்டலங்கள் :
1.ரியாத்
2.குவைத்
3.தம்மாம்
தாவா பணிகளில் அதிக புள்ளிகளைப் பெற்று முதல் மூன்று இடங்களைப் பெற்ற மண்டல கிளைகள் :
1.ஃபாஹில் (குவைத்)
2.நியூ செனைய்யா (ரியாத்)
3.மலஸ் (ரியாத்)
இரத்ததானத்தில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மண்டலங்கள் :
1.ரியாத்
2.தம்மாம்
3.குவைத்
தாவா பணிகளில் ஆறுதல் பரிசு பெறும் மாவட்டங்கள் :
4வது இடம் : மதுரை – 28 திருக்குர்ஆன் தமிழாக்கம்
5வது இடம் : நெல்லை – 26
6வது இடம் : திருவாரூர் – 24
7வது இடம் : கோவை – 22
8வது இடம் : புதுக்கோட்டை – 20
9வது இடம் : கடலூர் – 18
10 வது இடம் : காஞ்சி கிழக்கு – 16
11 வது இடம் : காஞ்சி மேற்கு – 14
12 வது இடம் : இராமநாதபுரம் – 12
13 வது இடம் : விழுப்புரம் மேற்கு – 10
ஆறுதல் பரிசு பெறும் கிளைகள் :
4வது இடம் : பட்டாபிராம் (திருவள்ளூர் மாவட்டம்) 23 திருக்குர்ஆன் தமிழாக்கம்
5வது இடம் : எம்.எம்.டி.ஏ.காலணி (தென் சென்னை மாவட்டம்) 21
6வது இடம் : புதுப்பேட்டை (வடசென்னை) 19
7வது இடம் : அரக்கோணம் (திருவள்ளூர் மாவட்டம்) 17
8 வது இடம் : பேட்டை (நெல்லை மாவட்டம்) 15
9 வது இடம் : துறைமுகம் (வடசென்னை மாவட்டம்) 13
10 வது இடம் : சேப்பாக்கம் (தென்சென்னை மாவட்டம்) 11
11 வது இடம் : அம்மாபட்டிணம் (புதுக்கோட்டை மாவட்டம்) 9
12 வது இடம் : ஆவடி (திருவள்ளூர் மாவட்டம்) 7
13 வது இடம் : மேலப்பாளையம் (நெல்லை மாவட்டம்) 5
விருதுகள் வழங்கியதைத் தொடர்ந்து நிர்வாகத் தேர்தல் நடைபெற்றது.
இந்த நிர்வாகத்தின் பதவிக்காலம் இந்த ஆண்டு இறுதியில் முடிவதைத் தொடர்ந்து சில நிர்வாக வசதிகளுக்காக சில மாதங்களுக்கு முன்பே நிர்வாகத்தேர்தல் வைப்பதற்கு உயர்நிலைக்குழு முடிவு செய்ததையடுத்து நிர்வாகத் தேர்தல் இப்பொதுக்குழுவில் நடைபெற்றது.
புதிய நிர்வாகிகளாக கீழ்க்கண்டவர்கள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர் :
மாநிலத் தலைவர் : பீஜே
மாநிலப் பொதுச் செயலாளர் : ரஹ்மத்துல்லாஹ்
மாநிலப் பொருளாளர் : எம்.ஐ.சுலைமான்
மாநில துணைத் தலைவர் : சையது இப்ராஹீம்
மாநில துணைப் பொதுச் செயலாளர் : முஹம்மது யூசுப்
மாநிலச் செயலாளர்கள் :
1.எக்மோர் சாதிக்
2.கோவை ரஹீம்
3.அப்துல் ஜப்பார்
4.அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி
5. தொண்டி சிராஜ்தீன்
6.ஆவடி இப்ராஹீம்
7.இ.முஹம்மது
8.பத்ருல் ஆலம்
9. நெல்லை யூசுப் அலி
10.திருவாரூர் அப்துர்ரஹ்மான்
நிர்வாகத் தேர்தலையடுத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன :
தமிழகத்தில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை 3.5 சதவிகிதத்திலிருந்து ஏழு சதமாக உயர்த்த மாநில அரசை வலியுறுத்தியும் இந்திய அளவில் முஸ்லிம்களுக்கு தனியாக பத்து சதவிகிதம் இட ஒதுக்கீட்டை சட்டாமாக்க மத்திய அரசை வலியுறுத்தியும் வரும் அக்டோபர் 8 ஆம் தேதி அன்று மாபெரும் அறப்போராட்டத்தை மாநிலம் தழுவிய அளவில் சென்னையில் நடத்துவது என்பது உள்ளிட்ட முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் மற்றும் புகைப்படங்களுக்கு குடந்தையில் நடைபெற்ற TNTJ வின் 14 வது மாநிலப் பொதுக்குழு!
நன்றி - TNTJNET
Post a Comment