லோக் ஆயுக்தா என்றால் நமெக்கெல்லாம் தெரியும், தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள், அது ஊழலுக்கு எதிராக விசாரணைசெய்யும் ஒரு மாநில நீதியமைப்பாகும்.
லோக் ஆயுக்தாவின் சட்டப்படி புதிய லோக் ஆயுக்தா குழுவுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்து நியமிக்கும் அதிகாரம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மாநில ஆளுநர் வசம் இருந்தது. இதன் அடிப்படையில்தான் அனைத்து மாநிலங்களிலும் லோக் ஆயுக்தா செயல்பட்டு வருகிறது.
ஆனால் குஜராத் முதல்வர் பயங்கரவாதி மோடி, மாநில அரசியல்வாதிகளின் ஊழல்கள் குறித்து விசாரிக்கும் லோக் ஆயுக்தா குழுவை நியமிக்க மறுத்து வந்தார். இதனால் கடுப்பான மாநில ஆளுநர் கமலா நீதிபதி R.மேத்தா என்பவரை லோக் ஆயுக்தவாக நியமித்தார். இதை எதிர்த்து மோடியின் மாநில அரசு உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்தது.
உயர் நீதி மற்றும் உச்ச நீதிமன்றங்களால் அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும் லோக் ஆயுக்தா நியமனம் தொடர்பாக ஆளுநர் மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்தே இறுதியானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை மதிக்காத மோடி சர்வாதிகாரி போல் தன் ஊழல்கள் வெளிவந்து விடகூடாது என்று தன்னை காப்பற்றி கொள்ள தானே ஒரு புதிய மசோதாவை சட்ட மன்றத்தில் அறிமுகம் செய்துள்ளார்.
மோடி கொண்டு வந்த போலியான புதிய மசோதாவின் படி மாநில ஆளுநர் மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரின் அதிகாரம் பிடுங்கப்பட்டு அது மாநில அரசின் கைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதவாது இனி லோக் ஆயுக்தா நியமனங்களை அவர்கள்செய்ய முடியாது. இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால் இந்த புதிய மசோதாவின்படி எந்த அதிகாரிக்கும் லோக் ஆயுக்தா விசாரணை வரம்பில் இருந்து விதி விலக்கு அளிக்க மாநில அரசுக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது.
மேலும், லோக் ஆயுக்தா வழக்கு விசாரணை தொடர்பாக எவராவது பத்திரிகையில் செய்தி வெளியிட்டாலோ அல்லது பொதுமக்களுக்கு தெரிவித்தாலோ 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கவும் இந்த புதிய மசோதாவில் வகை செய்யப்பட்டுள்ளது. மாநில அரசின் ஊழல் மற்றும் மொள்ளமாரிதனத்தை வெளிப்படுத்தவே லோக் ஆயுக்தா அமைப்பு ஏற்ப்படுத்தப்பட்டது. ஆனால் அதை முற்றிலும் மாற்றி அமைத்து ஒரு சர்வாதிகாரி போல செயல்பட்டுள்ளார் மோடி. குஜராத்தை பொறுத்தவரையில் லோக் ஆயுக்தா செத்த பாம்பு மாதிரி.
நன்றி - சிந்திக்கவும்
Post a Comment