ஹைதராபாத் : ''சட்டத்தை மதித்து நடக்கா விட்டால் ராஜினாமா செய்யுங்கள்'' என தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரஸ் கவுன்சில் சேர்மன் மார்கண்டேய கட்ஜு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மதுரையில் நடைபெற்ற கிரானைட் முறைகேடுகள் குறித்த உண்மைகளை வெளிக் கொண்டு வந்த தினபூமி ஆசிரியர் மணி மாறனையும் அவரது மகனையும் வாரண்ட் இல்லாமல் கைது செய்து சித்ரவதை செய்ததாக மணிமாறன் புகார் தெரிவித்து இருந்தார்.
இது குறித்த விசாரணையின் போது '' கடந்த ஆண்டு இரு முறை உத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டும் இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் பட வில்லை. தவறு செய்த 30 காவல் துறையினரையும் உடனடியாக இடை நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும்.
தமிழக அரசு சட்டத்தை மதித்து நடக்க வில்லையெனில் முதல்வர் ராஜினாமா செய்து விட்டுப் போகட்டும் '' என்று கட்ஜு தெரிவித்துள்ளார்.
விசாரணையின் போது திமுக ஆட்சியில் தான் இச்சம்பவம் நடைபெற்றதாக தமிழக அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர் தெரிவித்தார்.அதற்கு பதில் அளித்த மார்கண்டேய கட்ஜு '' இந்த உத்தரவு எந்த கட்சிக்கும் எதிரானது அல்ல'' என்று பதில் அளித்தார்.

Post a Comment