தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த இலவசப் பயிற்சி...


தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த இலவசப் பயிற்சியை ஆன்லைன் வழியாக வழங்குகிறது மத்திய அரசு :கவல் அறியும் உரிமைச் சட்டத்தை அனைத்து மக்களும் தெரிந்து கொள்ளும் வகையில்,  மத்திய அரசு, ஆன்லைனில் அந்தச் சட்டம் குறித்த சான்றிதழ் பயிற்சிகளை இலவசமாக வழங்குகிறது.

 
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTIம் 2005 ம் ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்டதுஇந்தச் சட்டத்தின்மூலம் அரசுடைய செயல்பாடுகளைப் பற்றியும்அரசு அதிகாரிகளின் அலுவல் பற்றிய தகவல்களையும்,இச்சட்டத்தைப் பயன்படுத்தி  பெற்றுக் கொள்ளலாம்மேலும் அரசின் சில துறைகளில் மட்டும் இச்சட்டத்தைப்பயன்படுத்த  சில வரம்புகளும் விதிவிலக்கும் உள்ளன.
இந்த இலவச ஆன்லைன் பயிற்சி, 7 நாட்கள் மற்றும் 15 நாட்கள் என  இரண்டு வகைகள் உள்ளன. 7 நாட்கள்கொண்ட பயிற்சியில் மொத்தம் 7 பிரிவுகள் இருக்கும்ஒவ்வொரு பிரிவிலும் தலா 4 கேள்விகள் கேட்கப்படும்.அந்தக் கேள்விகளில் 3 கேள்விகளுக்கு சரியான விடையை அளித்தால் மட்டுமே அடுத்த பிரிவிற்குச் செல்லமுடியும்மேலும்இந்த 7 நாட்கள் கொண்ட பயிற்சியில் வெற்றி பெற்றால் மட்டுமே, 15 நாட்கள் கொண்டபயிற்சியில் சேர முடியும்.

 
இந்தப் பயிற்சியில் சேர்வதற்காக சில தகுதிகள் இருக்கின்றனபயிற்சியில் சேரும் ஆண்/பெண் இந்தியக்குடிமகனாக இருத்தல் வேண்டும்இந்தப் பயிற்சியின் முடிவில் நடத்தப்படும் தேர்வுகள் அனைத்தும் ஆங்கிலத்தில்இருக்கும் என்பதால்அதனைப் படித்து புரிந்துகொள்ளும் அளவுஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டியதுஅவசியமான ஒன்றாகும்.


தகவல் உரிமைச் சட்டத்தின் இலவச ஆன்லைன் பயிற்சியில் சேர விரும்புபவர்கள், அதனுடைய தளத்திற்குச் சென்று பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின்னர், பதிவு செய்தவர்களுக்கென கடவுச்சொல் (password)  மற்றும் பயனாளர் ஐ.டி. (user id) குறித்த தகவல்கள் மெயிலில் தெரிவிக்கப்படும். அந்த விவரங்களைக் கொண்டு ஆன்லைன் பயிற்சித் தளத்தில் நுழைந்தால், பயிற்சியை தொடங்கலாம்.
மேலும் இந்தப் பயிற்சியைப் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தில் சென்று பார்க்கலாம். http://rtiocc.cgg.gov.in


பி.எஸ்.என்.எல் தொலைப்பேசி நிறுவனம்  இரண்டு மாத கால ஆன்லைன் சான்றிதழ் படிப்பை புதிதாக அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஆன்லைன் படிப்பின் மூலம், இன்டர்நெட் போர்ட்டல், நெட்வொர்க்கிங் மற்றும் சைபர் பாதுகாப்பு, மொபைல் தகவல்தொடர்பு, , ஆப்ட்டிகல் ஃபைபர் சிஸ்டம்ஸ், அகண்ட அலைவரிசை தொழில்நுட்பம், டிஜிட்டல் ஸ்விட்சிங் மற்றும் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம்ஸ், தொலைத்தொடர்புக்குத் தேவையான உள்கட்டமைப்பு என்பன உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த ஆன்-லைன் சான்றிதழ் படிப்பை இந்த நிறுவனம்  வழங்குகிறது.


சென்னை மறைமலை நகர் பெரியார் சாலையில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் இருக்கும்  சென்னை தொலைபேசியின் மண்டல பயிற்சி மையத்தில்   பயிற்சிகள் நடத்தப்படும். இந்த படிப்புக்கான குறைந்த கட்டணம் ரூ. 5,000. படிப்பு அறிமுகச் சலுகையாக இந்த கட்டணத்தில் 20 சதவீத தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இந்த படிப்பின் முதல் பேட்ச் வரும் 25-ம் தேதி முதல் தொடங்குகிறது. மேலும் விவரங்களை அறிய www.learntelecom.bsnl.co.inஎன்ற இணையதளத்தில் தொடர்பு கொள்ளலாம்.


மாணவர்களும், தொலைத்தொடர்புத் துறையில் வேலைவாய்ப்பைத் தேடும் இளைஞர்களும்  இந்தப் படிப்புகளில் சேர்ந்து பயன்பெற முடியும். செய்முறை பயிற்சியும் இந்த படிப்பில் அடங்கும். வார விடுமுறை நாள்களில்  இந்த செய்முறைப் பயிற்சிகள் அளிக்கப்படும்.

thanks - tntjsw
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger