இந்து முன்னணி வெளியிட்ட நோட்டிஸ்:
கலவரத் தடுப்பு மசோதா என்று சொல்லப்படும் " PREVENTION OF COMMUNAL AND TARGETED VIOLENCE BILL, 2011" என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட மசோதா குறித்து சங்பரிவாரக் கும்பல்செய்யும் பிரச்சாரத்தில் கடுகளவும் உண்மை இல்லை.
கலவரத் தடுப்பு மசோதா என்று சொல்லப்படும் " PREVENTION OF COMMUNAL AND TARGETED VIOLENCE BILL, 2011" என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட மசோதா குறித்து சங்பரிவாரக் கும்பல்செய்யும் பிரச்சாரத்தில் கடுகளவும் உண்மை இல்லை.
இந்தமசோதா இந்துக்களைப்பழிவாங்கவோ முஸ்லிம்களைக் காப்பாற்றவோகொண்டுவரப்படவில்லை. அனைத்து சமுதாயங்களிலும் உள்ள பயங்கரவாதிகளிடமிருந்துஅனைத்து மத மக்களையும் காப்பாற்றவே இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த மசோதாவில் ஒரு இடத்தில்கூட முஸ்லிம் என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.சிறுபான்மை என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது.
கலவரங்கள் ஏற்படும்போது குறைந்த எண்ணிக்கையில் உள்ள சமுதாயம்தான் அதிகப் பாதிப்புக்குஉள்ளாகும். அதிக எண்ணிக்கையில் உள்ளவர்கள்தான் கலவரத்தைத் தூண்டவும் செய்வார்கள்.அவர்களுக்கு இழப்பு இருக்காது என்பதும், அப்படி இருந்தாலும் அது மிகக் குறைவாக இருக்கும்என்பதும் இதற்குக் காரணமாகும். அதிகார வர்க்கமும் சிறு கூட்டத்தை எளிதில் அடக்கலாம்.பெரிய கூட்டத்தை அடக்க முடியாது என்று பயிற்றுவிக்கப்படுவதால் கலவரங்களின்போதுசிறுபான்மை மக்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகின்றனர். இதன் காரணமாகவே இந்தியஅரசியல் சாசனம் வழங்கியுள்ள பாதுகாப்பை உறுதி செய்ய இந்தச் சட்டம் கொண்டுவரப்படஉள்ளது.
சிறுபான்மை என்பது ஊருக்கு ஊர் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடக் கூடியதாகும். காஷ்மீரிலும்,பஞ்சாப்பிலும் இந்துக்கள் சிறுபான்மையாக உள்ளதால் பெரும்பான்மை சமுதாயத்தினால் அவர்கள்பாதிக்கப்படாமல் இருக்க இந்த மசோதா துணை செய்யும்.
காயல்பட்டிணம், மேலப்பாளையம். கீழக்கரை,கடையநல்லூர், லால்பேட்டை போன்ற ஏராளமானஊர்களில் இந்துக்கள் சிறுபான்மையாக உள்ளனர். பெரும்பான்மையாக உள்ள முஸ்லிம்களால்அங்குள்ள இந்துக்கள் பாதிக்கப்படாமல் இருக்க இந்த மசோதா உதவும்.
கேரளாவிலும், கர்நாடகத்திலும் மகாராஷ்டிராவிலும் இன்னும் சில மாநிலங்களிலும் தமிழர்கள்தாக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு நீதி கிடைப்பதில்லை. இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் ஒருமொழி பெரும்பான்மையினரின் மொழியாகவும் மற்ற மொழிகள் சிறுபான்மயினரின் மொழியாகவும்உள்ளன. மொழி அடிப்படையில் சிறுபான்மையாக உள்ளவர்களையும் இந்தச் சட்டம் பாதுகாக்கும்.
சமஸ்கிருதம் பேசும் பிராமணர்கள்கூட நாடு முழுவதும் சிறுபான்மையாகத் தான் உள்ளனர்.அவர்களையும் இந்தச் சட்டம் பாதுகாக்கும்.
நாட்டின் பல பகுதிகளில் ஒரு மதத்தைச் சேர்ந்தவர்களில் ஒரு சாதியினர்பெரும்பான்மையாகவும், மற்ற சாதியினர் சிறுபான்மையாகவும் உள்ளனர். இதுபோன்றவர்களுக்கும்இந்தச் சட்டம் பாதுகாப்பாக அமையும்.
இந்த விபரங்கள் அந்த மசோதாவில் பின்வரும் சொற்களால் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது......
மசோதாவின் நோக்கம் :
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படை உரிமையை நிலைநாட்டவும், திட்டமிட்டுநடத்தப்படும் வன்முறைகளைத் தடுக்கவுமே இந்தச் சட்டம். இந்தியாவில் உள்ள தாழ்த்தப்பட்ட(ஷிசி) பழங்குடி இன (ஷிஜி) மக்களுக்கு எதிராகவும், சிறுபான்மையினருக்கு எதிராகவும், மொழிசிறுபான்மையினருக்கு எதிராகவும் நடத்தப்படும் திட்டமிட்ட வன்முறைகளைக் கட்டுப்படுத்த இந்தச்சட்டம் உதவும். பாதிக்கப்பட்ட மக்கள் வெளிப்படையாக நீதியைப் பெற்றுக் கொள்ளவும், தகுந்தநிவாரணம் பெறவும் இந்தச் சட்டம் வழிவகை செய்யும்.
சொல்லப்போனால் இந்துக்களிடையே நடக்கும் சாதிச் சண்டையை இந்தச் சட்டம் பெருமளவுக்குகட்டுப்படுத்தும். முஸ்லிம்கள் மத்தியில் இதுபோல் நடப்பதில்லை. வகுப்புக் கலவரங்களை விடசாதிக் கலவரங்களே அதிகம் நடக்கும் நமது நாட்டில் இந்த சட்டத்தினால் அதிகம் பயன் அடைவதுஇந்துக்கள்தான்.
இந்து முன்னணியின் பிரசுரத்தில் சொல்லப்பட்ட நன்மைகள் சிறுபான்மையினராக உள்ளபிராமணர்கள், ஒவ்வொரு பகுதியிலும் சிறுபான்மையாக உள்ள இந்துக்கள், ஒவ்வொருமாநிலத்திலும் சிறுபான்மையாக உள்ள மொழி சிறுபான்மை இந்துக்கள் ஆகிய அனைவருக்கும்பாதுகாப்பளித்து நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட உதவும்.
மகன் செத்தாலும் பரவாயில்லை. மருமகள் தாலி அறுக்கவேண்டும் என்ற மாமியார்மனப்பான்மையால் இந்தக் கும்பல் இப்படி நோட்டீஸ் போட்டுள்ளது.
முஸ்லிம்களைக் கொன்றுவிட்டு நாம் தப்பித்தால் போதும்; எத்தனை இந்துக்கள் மொழியின்பெயராலும் சாதியின் பெயரலும் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை என்ற மாமியார்த்தனம்காரணமாகவே இந்துத்துவ சக்திகள் இப்படி இந்துக்களை ஏமாற்றி நோட்டீஸ் போடுகின்றன.
கலவரம் செய்வதையே முழு நேர வேலையாகக் கொண்ட தாக்கரேக்களும், சங்பரிவாரபயங்கரவாதிகளும் தங்களை இது பாதிக்கும் என்பதற்காக கவலைப்படுகிறார்களே தவிரஇந்துக்களுக்காக அல்ல.
nantri - onlinepj
Post a Comment