இப்படி தடாவை எதிர்த்து ஒரு போர் நடந்து கொண்டிருக்கும்போதே மீண்டும் ஒரு போர் முழக்கம் செய்ய வேண் டிய புது சோதனை உருவெடுத்தது.
பாபரி மஸ்ஜித் உடைக்கப்பட்டபின்இ உடைந்து கிடந்த சமுதாயத்தை மேலும் உடைப்பதற்கு ஒரு புதுப்பிரச்சினை பூதாகரமாகக் கிளம்பியது. புயலாகப் புறப்பட்டது. அதுதான் பொது சிவில் சட்டம்.
சமுதாயம் மரண மவுனத்தில் கிடந்த சந்தர்ப்பத்தில், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும்படி சுப்ரீம் கோர்ட், மத்திய அரசைக் கேட்டுக் கொண்டது.
இப்படி ஒரு உத்தரவை உச்ச நீதி மன்றம் வெளியிட்ட மாத்திரத்திலேயே அதைச் சமுதாயம் மிருக பலம் கொண்டு எதிர்த்தாக வேண்டும். அவ்வாறு எதிர்க்க வேண்டுமென்றால் சமுதாயம் அதன் தீமையை நன்றாக விளங் கியிருக்க வேண்டும்.
பொது சிவில் சட்டத்தின் பூதாகரமான பாதகங்களை சமுதாயத்திற்குப் புரிய வைக்கும் பணியை யாரும் செய்ய வில்லை. இந்த சமயத்தில் தமிழகத்தில் இந்தப் பணியை தவ்ஹீத் ஜமாஅத் தான் செய்தாக வேண்டிய நிலை.
அரசியல் பண்டிதர்கள், அரசியல் ஞானம் பெற்றவர்கள்இ அரசியல் சட்ட மேதைகள் என்று யாரும் அன்று தவ் ஹீத் ஜமாஅத்தில் இல்லை. அதிலும் பீ.ஜே. களமிறங்கினார். அதன் ஆக்கம் தான் பொது சிவில் சட்டம் ஓர் ஆய்வு என்ற கட்டுரை!
அல்ஜன்னத்தில் அன்று வெளியான இந்த ஆக்கம் ஏகத்துவ அழைப்பாளர்கள், பொது சிவில் சட்டத்தின் பாதகங்க ளைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கிலும், சமுதாயப் பிரச்சினையில் நமது பங்களிப்பு எத்தகையது என்பதை இளைய சமுதாயத்திற்கு எடுத்துக் காட்டும் வகையிலும் தனியாக வெளியி டப்பட்டுள்ளது.
சட்டம் படித்த வழக்கறிஞர்களும் விளக்குவதற்குத் தாளம் போடும் இந்தப் பொது சிவில் சட்டத்தைப் பாமரனுக்கும் விளங்கும் வகையில் மிக எளிய பரிமாணத்தில் சகோதரர் பீ.ஜே. அளித்திருந்தார்.
இது எழுத்தளவில், ஏட்டளவில் நின்று விடாமல் பொதுக் கூட்டங்களிலும் பீ.ஜே. உரை நிகழ்த்தினார். பொது சிவில் சட்டத்தைப்பற்றி விழிப்புணர்வுக் கூட்டங்களில் கலந்து கொண்ட மக்கள் வியக்கின்ற அளவில் அவரது உரை அமைந்திருந்தது. இந்த உரை ஒளி, ஒலி நாடாக்களில் பதிவு செய்யப் பட்டு உலகெங்கும் வாழும் தமிழ் முஸ்லிம்களைச் சென்றடைந்தது.
இந்தப் பணியை அன்று எந்த இயக்கமும் செய்யவில்லை. தமிழக மக்களிடம் கொண்டு செல்லவில்லை. தவ்ஹீத் ஜமாஅத்தான் இதை மக்களிடம் கொண்டு சேர்த்தது.
பொது சிவில் சட்டம் என்பது முஸ்லிம்களின் பிணத்தின் மீதுதான் அமலாகும் என்ற பேச்சு மத்திய அரசின் காதில் விழுந்தது. அதனால் உச்ச நீதி மன்றத்தின் உத்தரவுக்கு அது செவி சாய்க்கவில்லை.
இப்படிப் பொது சிவில் சட்டத்தைப் பற்றிய ஒரு பொது விழிப்புணர்வை அன்று மக்களிடம் ஊட்டியதும் உணர்த் தியதும் தவ்ஹீத் ஜமாஅத்தான். பொது சிவில் சட்டத்திற்கு எதிரான இந்தப் போர் முழக்கம், முஸ்லிம்களை தவ்ஹீதின் பக்கம் ஈர்த்தது.
இதுபோன்ற சூழல்கள்தான் நம்மை சமுதாயப் பிரச்சினைகளைக் கையில் எடுப்பதற்குத் தள்ளியது என்பதற்கு இது மற்றோர் எடுத்துக்காட்டு!
ஜெயலலிதா ஆட்சியின்போது, ஒரு காலகட்டத்தில் தமிழகத்தில் இந்துத் துவா சக்திகளின் இஸ்லாமிய விரோதப் போக்கு ஓர் எல்லையைக் கடந்து சென்றது. காமத்தில் மிஞ்சியது கன்னி மேரியா? கதீஜாவா? மணியம்மையா? என்று பட்டிமன்றம் நடத்தும் அளவுக்கு அந்தத் தீய சக்திகள் விஷம் கக்க ஆரம் பித்தன. அப்போதும் சமுதாயம் மயான அமைதியில்தான் இருந்தது. அதற்கும் ஆக்கப்பூர்வமான எதிர்ப்புகளைத் தெரிவிக்க வேண்டியவர்கள் தவ்ஹீத்வா திகள்தான் என்ற நிலை ஏற்பட்டது.
ராஜகோபாலன் கொலை
இப்படிப்பட்ட அக்கினிப் பிரவேசத்தின்போது மதுரையில் இந்து முன்னணி தலைவராக இருந்த ராஜகோபாலன் என்பவர் கொலை செய்யப்படுகின்றார். அதில் ஜாக் இயக்கத்தைத் தொடர்புப டுத்தி செய்திகள் வெளியானது. அதற்கு மறுப்பும் கொடுக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாகத்தான் எஸ்.எம். பாக்கர் தடாவில் கைது செய்யப்பட்டார். அப்போது அவர் அமைப்பு ரீதியாக ஜாக்கில் இல்லாவிட்டாலும் சமுதாயப் பிரச்சனைகளுக்குக் குரல் கொடுத்து வந்ததால் பீ.ஜே.யுடன் சேர்ந்து சமுதாயக் களப்பணியாற்றினார்.
அவர் தடாவில் கைது செய்யப்பட்டது தவ்ஹீத்வாதிகளுக்கு ஓர் எச்சரிக்கை மணியானது. அப்போதுதான் ஓர் ஆழமான சிந்தனை தோன்றுகிறது. இன்று பாக்கர்! நாளை பீ.ஜே. என்று இந்தக் கைதுப் படலம் தொடரும். எனவே இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதை முளையிலேயே கிள்ளி விட வேண்டும். அதற்கு வழி என்ன?
அப்போது வமையாக இருந்த ஜமாஅத் அமைப்பு ஜாக்தான். ஆனால் ஜாக்கின் தலைவர் கமாலுத்தீன் மதனி, இன்னும் சில செல்வந்தர்கள் இது போன்ற விஷப்பரீட்சைக்கு வரமாட் டார்கள்.
உளவுத் துறையின் ஆந்தைப்பார் வைக்கு அல்ஜன்னத் ஆளாகியிருக்கின்றது என்று தெரிந்த மாத்திரத்திலேயே பேர்ணாம்பட்டைச் சார்ந்த ஒரு செல்வந்தர் தலைதெறிக்க ஓட்டமெடுத்தார். அதில் ஒருபோதும் ஓட்டமெடுக்காத, ஆட்டம் காணாத செல்வந்தர் அதே பேர்ணாம்பட்டைச் சார்ந்த அன்வர் பாய் மட்டுமே!
இவரைத் தவிர்த்து கமாலுத்தீன் மதனி உட்பட செல்வந்தர்கள் இதற்கு இசைய மாட்டார்கள். இதற்கு என்ன செய்வது? இதற்கான ஆலோசனை அல் ஜன்னத் அலுவலகத்தில்தான் நடைபெற்றது. விடை கிடைத்தது. விடிய விடியப் பேசி ஒரு விடை கிடைத்தது. கூட இருந்தவர் குணங்குடி ஹனீபா அவர்கள். அவர்தான் நமக்கு அரசியல் குரு என்ற உண்மையை இங்கு ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். அவர் ஆலோசனை மட்டும் தர வில்லை. ஒரு அமைப்பையும் சேர்த்தே தந்தார். அதுதான் தமுமுக.
இப்போது தமுமுகவின் தலைவர்களாக வலம் வரக் கூடியவர்களுக்கு இந்த அமைப்பை உருவாக்குவதில் பெரிய பங்களிப்பு ஏதும் இல்லை. இதற்கு ஆதரமாக தமுமுக முதல் வெளியிட்ட பைலாவின் முதல் பக்கத்திலேயே காணலாம்!
தமுமுக துவங்கும்போது ஜவாஹிருல்லாவோ, ஹைதர் அலியோ மக்களால் அறியப்பட்டவராக இருக்க வில்லை. இவர்களது அழைப்பை ஏற்று வரக் கூடிய ஐம்பது பேர்கூட தமிழகத்தில் இருக்கவில்லை. மக்களை ஈர்க்கக் கூடிய சொல்லாற்றலும் இவர்களிடம் இருக்கவில்லை. கடந்த காலங்களில் சமுதாயத்துக்கு தியாகம் செய்த வரலாறும் இருக்கவில்லை.
பீ.ஜே. அவர்கள் பதினைந்து ஆண்டுகள் அடி உதைபட்டு கொள்கைச் சகோதரர்களையும், பிரச்சாரகர்களையும் உருவாக்கியிருந்ததால் - அவரே தமுமுகவின் தூணாகவும், முதல் நிலை தகுதி யுடையவராகவும் இருந்தார்.
நெருக்கடியான காலங்களில் எந்தப் போராட்டத்திலும் அதன் தற்போதைய தலைவர் கலந்து கொண்டதில்லை. பின் வாங்கி விடுவார். இப்போது கருணா நிதியின் சிறுபான்மைப் பிரிவாக ஆன பின்பு போராட்டத்தில் கலந்துகொள் ளும் துணிவு (?) அவருக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்போதைய பொதுச்செயலாளர் 6வது இடத்திலும், இப்போதைய தலைவர் 76வது இடத்திலும் இருப்பதைக் காண்க!
இப்பேதைய தமுமுக தலைவவரின் பொதுச்செயலாளரின் அன்றைய நிலை தெரியும். பாக்கரைக் கைது செய்த காவல்துறை, மற்றவர்களையும் வேறு ஏதேனும் வழக்கில் தூக்கிப் போட்டு விடக் கூடாது. அதற்கு உடனே ஒரு தற்காப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாக்கரின் கைதைக் கண்டித்தாக வேண்டும். அதற்கு மக்கள் கூட்டம் திரள வேண்டும்.
50 பேர் திரண்டால் காவல்துறை யிடம் அதற்கு ஒரு பார்வை! 100 பேர் திரண்டால் அதற்கு ஒரு பார்வை! 200 பேர் என்றால் காவல்துறையின் பார்வையில் ஒரு மாற்றமிருக்கும். 500 பேர் என்றால் அதற்கு ஒரு மரியாதை! மக்கள் நினைத்ததைச் சாதிக்கலாம். நாம் நான்கு பேர் கூடிக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் என்ன பேசினாலும் அது காவல்துறையிடம் எடுபடாது. நமது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கைதான் பேசும். அந்தப் பேச்சுதான் எடுபடும் என்ற அரசியல் அடிச்சுவட்டைப் போதித்தவர் குணங்குடி ஹனீபா அவர்கள்.
அவரது ஆலோசனைப்படி அந்தப் பேரணி சென்னை மன்றோ சிலைக் கருகில் திரண்டது. அங்கிருந்து கிளம்பி தலைமைச் செயலகம் நோக்கிப் புறப்பட்டது. இடையில் பாரிமுனை சிக்ன ல் நிறுத்தப்பட்டது. தமுமுகவின் முதல் பொதுச்செயலாளர் பொறியாளர் அப்துஸ்ஸமது, தலைவர் குணங்குடி ஹனீபா மற்றும் சிலர் தலைமைச் செயலாளரிடம் மனு அளித்து விட்டு வந்தனர்.
இதுதான் தமுமுகவின் முதல் பேரணி! இப்பேரணியில் மக்கள், வெள்ளம்போல் குவிந்தனர். தவ்ஹீத் மக்கள் தான் இதில் வந்து குவிந்தனர். அவர்களைப் பார்த்து மற்ற பொதுமக்களும் வந்து கலந்து கொண்டனர்.
குணங்குடி ஹனீபா அவர்கள் கூறியது போன்று இந்தப் பேரணியில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை, காவல்துறையின் பார்வையில் கண்ணியத்தை மட்டுமல்ல! ஒரு கலக் கத்தையும் ஏற்படுத்தியது.
இங்கு உறுதியாக ஒரு கருத்தைப் பதிவு செய்து கொள்கிறோம். அன்று தமிழகத்தில் வலிமை பெற்ற அமைப்பு, இன்னும் சொல்லப்போனால் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருகின்ற மக்கள் சக்தி கொண்ட அமைப்பாக ஜாக் என்ற தவ்ஹீத் அமைப்புதான் இருந்தது. அந்தத் தவ்ஹீத் மக்களை முதலீடாக, மூலதனமாகக் கொண்டுதான் தமுமுக என்ற அமைப்பு துவங்கியது என்பதை அழுத்தமாக மீண்டும் பதிவு செய்ய விரும்பு கிறோம்.
பீ.ஜே.வின் மதிப்பு என்ன? என்பதை அந்த மக்கள் விளங்கி வைத்திருந்தார்கள். காவல்துறையின் அடுத்த குறி, அக்னிப் பிரவேசம் மேற்கொண்டிருக்கும் பீ.ஜே.வை நோக்கித்தானே என்ற கவலைதான் அந்த தவ்ஹீத் மக்களை இயக்கியது. அதுதான் அவர்களை அங்கு வந்து குவித்தது.
பாக்கருக்காக இப்படியொரு ஆர்ப்பாட்டத்தைச் செய்து விட்டு அமர்ந்த ருப்போம். அதற்குள்ளாக ஒரு சில மாத இடைவெளியில் அடுத்தகட்ட நடவடிக்கை ஆரம்பித்தது. காரைக்கால் ஜாக்கின் கட்டுப்பாட்டில் இருந்த ஜாமிஆ புஷ்ரா பெண்கள் மதரஸாவில் பணியாற்றிக் கொண்டிருந்த ஜே.எஸ். ரிபாயி கைது செய்யப்பட்டார்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
நன்றி - துபாய் tntj
Post a Comment