பெண்களுக்கான பாலியல் வன்முறைகள் அதிகரிக்க அவர்கள் அணியும் ஆடைகள்தான் காரணம் என்பதை தற்போது அனைத்து தரப்பினரும் உணர்ந்து வரும் இவ்வேளையில், கிறித்தவப் பெண்களும் பர்தா அணிய வேண்டும் என்ற கருத்து அவர்களது பாதிரியார்களின் மத்தியில் உருவாகியுள்ளது
கிறிஸ்தவ பெண்களும் முஸ்லிம் பெண்கள் அணிவது போன்ற அடக்க ஒடுக்க மிக்கதும், எளிமையானதுமான ஆடைகளை அணிய வேண்டும் என எகிப்தில் காப்டிக் கிறிஸ்தவர்களின் பிஷப் பிஷாய் கூறியுள்ளார்
காப்டிக் கிறிஸ்தவ சபையின் உயர் பதவிக்கு முன்மொழியப்பட்ட பிஷப் பிஷாய் இவ்வாறு பரிந்துரைத்துள்ளார் என பிரிட்டனில் பிரபல பத்திரிகையான கார்டியன் கூறுகிறது
பரிசுத்தமானவரான கன்னிமேரி (மர்யம்) முடியை முழுமையாக மறைப்பதற்காக முழுமையான ஆடையை அணிந்திருந்தார். பின்னர் ஏன் நீங்கள் இவ்வாறு அணிவதில்லை என்று கிறிஸ்தவ பெண்களிடம் பிஷப் பிஷாய் கேள்வி எழுப்பியுள்ளார்
எகிப்தில் பெரும்பாலான பெண்கள் தலையை மறைப்பதுடன் உடலை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணிகின்றனர். குறைந்த அளவிலான ஆடைகளை அணியும் பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறைகள் அண்மையில் அதிகரித்துள்ளதாக கார்டியன் பத்திரிகை சுட்டிக்காட்டுகிறது ஆனால் இந்தப் பாதிரியார் இந்த அறிவிப்பை வெளியிட்டது தான் தாமதம் உடனே கிறித்தவப் பெண்கள் இவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். கன்னிமேரி முக்காடு போட்டது போல இவர்களே போட்டோ போட்டு வைப்பார்கள். அதை கிறித்தவ பெண்கள் செய்ய வேண்டும் என்று சொன்னால் மட்டும் அதைச் சொன்ன பாதிரியாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள் என்றால் இவர்கள் என்னதான் சொல்ல வருகின்றார்கள் என்பது நமக்குப் புரியவில்லை. கர்த்தருக்கே வெளிச்சம்
நன்றி - JESUSINVITES.COM
Post a Comment