நபிவழியில் ஜனாஸாவை அடக்கம் செய்தவர்களை தாக்க முயற்சி – கப்ரு வணங்கிகள் அட்டகாசம்!


தவ்ஹீத் ஜமாஅத் முத்துப்பேட்டை கிளை-1 தலைவர் அவர்களின் மகன் வழி பேரக்குழந்தை 28.11.12 அன்று இரவு வஃபாத்தாகிவிட்டது. [இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்]
அதை நபிவழிப்படி அடக்கம் செய்ய அவர்கள் குடும்பத்தார் ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு இருந்தபோது அவர்கள் சார்ந்த அரபு சாஹிப் பள்ளி முஹல்லா நிர்வாகத்திடம் இருந்து, எங்கள் பள்ளி இமாம்தான் தொழுகை நடத்துவார். மய்யித்துக்கு உடையவர்கள் தொழுகை நடத்த அனுமதியில்லை என தகவல் வந்தது.
முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் வாரிசுகள் தொழுகை நடத்த அனுமதி இருந்தும் இவர்கள் மட்டும் மறுப்பது என்ன நியாயம்? நாம் நம் உரிமையை நிலை நாட்டுவோம் என நினைத்தாலும், நம் வீட்டிலேயே தொழுகை நடத்த மார்க்கத்தில் அனுமதி இருப்பதாலும், கப்ரு கட்டிவைத்துள்ள பள்ளிவாசலை விட தொழுகை நடத்த வீடே சிறந்தது என்பதாலும் அவர்கள் வீட்டின் முன்பே சம்மந்தப்பட்ட பாட்டனார் தொழுகை நடத்தி சிறப்பாக ஜனாஸா தொழுகை முடிந்தது.
இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத கப்ரு வணங்கிகள் உடனே புதிதாக ஒரு செய்தியை அனுப்பினார்கள். அதாவது எங்கள் பள்ளியில் தொழுகை நடந்த ஜனாசாவை மட்டும்தான் மையவாடியில் அடக்கம் செய்ய விடுவோம். உங்களுக்கு அனுமதி கிடையாது என்றனர்.

இது உரிமைப் பிரச்சனை. பள்ளிவாசல்களில் நமக்கு உரிமை இருந்தாலும் அங்கே ஷிர்க் என்ற இணைவைப்பு நடப்பதால் நாம் தனியாக பள்ளியை உருவாக்கி நபிவழிப்படி தொழுகிறோம். ஆனால் கப்ருஸ்தானில் நமக்கு உள்ள உரிமையை விடக் கூடாது என்பதால் முறையாக இதை எதிர் கொள்வது என முடிவு செய்து, காவல்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துவிட்டு, முன்னாள் மாவட்டத் தலைவர் அன்சாரியை இதற்கு தலைமையேற்க வைத்து அவர் தலைமையில் ஜனாசாவைக் கொண்டு சென்றோம்.

சம்பந்தப்பட்ட அரபு சாகிப் பள்ளிவாசலுக்கு நாம் சென்று எந்தத் தடையும் இன்றி நல்லபடியாக ஜனாசாவை அடக்கம் செய்தோம். கடைசியாக மண்ணைத் தள்ளி குழியை சமன் செய்து கொண்டு இருக்கும்போது, சுமார் 50 பேர் கொண்ட கும்பல் வந்து, கேட்டைப் பூட்டி விட்டு, “இவன்களை விடாதீர்கள்!” எனக் காட்டுக் கூச்சல் போட்டனர். இது மட்டுமல்லாமல் பள்ளிவாசலில் பாங்கு சொல்ல பயன்படுத்தும் ஒலி பெருக்கியை பயன்படுத்தி, “இவன்களை தாக்க பொது மக்களே! திரண்டு வாருங்கள்” என கலவரத்தை தூண்டும் அறிவிப்பும் செய்யப்பட்டது.

பூட்டிய கேட்டை போட்டோ எடுத்ததும் உடனே கேட் திறக்கப்பட்டது. நாம் ஜனாசாவை அடக்கி முடித்துவிட்டு கப்ருக்கு அருகிலேயே ஒரு மசூரா செய்து, யார் என்ன பேசினாலும் பதில் தலைவர் மட்டும் கொடுப்பார். அனைவரும் பொறுமையைக் கையாளுங்கள் என ஆலோசனை செய்து கப்ருஸ்தானைவிட்டு வெளியேறினோம்.

வாய்கூசும் வகையில் கெட்ட வர்த்தைகளால் நம்மைத் திட்டியும், அதை அல்லாஹ்வுக்காக பொறுத்துக் கொண்டு நாம் பொறுமையாக வெளியே வந்தோம். அதே நேரம் கடைசியாக வந்த முத்துப்பேட்டை கிளை-2 தலைவரை சட்டையைப் பிடித்து இழுத்தவனையும், மேலும் நம்மை தாக்க செங்கலோடு வந்தவனையும் நம் சகோதரர்கள் பிடித்து திருப்பி அனுப்பினார்கள்.

இதைத் தொடர்ந்து இதில் கலவரம் செய்ய வேண்டும் என்றே ரவுடித்தனம் செய்தவர்கள், பள்ளிவாசலில் பாங்கு சொல்ல வைத்துள்ள ஒலி பெருக்கியை கலவரத்திற்கு பயன்படுத்தியவர்கள் ஆகியோர் மீது காவல்துறையில் புகார் கொடுத்துள்ளோம்.

காவல்துறை சரியான நடவடிக்கை எடுத்து ஊரில் அமைதியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கிறோம்

நன்றி - tntj,net 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger