எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே............!!
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த எம்மா டெய்லர் இஸ்லாத்தை தழுவினார்............!!
எல்லாம் வல்ல இறைவனின் மாபெரும் கிருபையினால் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கிறித்தவ சகோதரியான எம்மா டெய்லர் புனிதமிக்க தூய மார்க்கமான இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்,
அவர் கூறிய வார்த்தைகளில் சில...
நான் எந்தவித குறிக்கோளும் இல்லாமல் மனம் போன போக்கில் வாழ்ந்துவந்தேன், எனது ஆடைகளை எப்பொழுதும் கவர்ச்சிகரமாக தான் அணிவேன், இந்நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னாள் இஸ்லாத்தை தழுவிய என்னுடைய தோழி ஒருவர் எனக்கு அவருடைய இல்லத்தில் விருந்துக்கு அழைத்திருந்தார்,
அப்பொழுது தான் நான் என்னையே அறியாமல் சிந்திக்க ஆரம்பித்தேன், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாத்தை தழுவிய எனது தோழியின் வாழ்வில் ஏற்பட்டுள்ள மன அமைதியும், தென்றலாய் வீசும் சந்தோசமும் என்னை சிந்திக்க தூண்டியது,
இது பற்றி எனது தோழியிடம் விசாரித்த போது தன்னுடைய அமைதிக்கும், சந்தோசத்திற்கும் ஒரே காரணம் இஸ்லாம் என்று அவர் கூறிய பதில் எனக்கு கூடுதல் தாக்கத்தையும், உத்வேகத்தையும் ஏற்படுத்தியது,
அதன் பின் நண்பர்களின் உதவியுடன் இஸ்லாத்தை தழுவினேன்,
இஸ்லாத்திலுள்ளவர்கள் என்னை மனநிறைவோடு வரவேற்றார்கள், நான் மன நிம்மதியோடு கண்ணியமான முஸ்லிமாக வாழ்ந்து வருகிறேன்,
நான் 13 வயதிலிருந்து மது அருந்தும் பழக்கம் கொண்டவள், ஆனால் இஸ்லாத்திற்கு மாறிய பின் மது அருந்துவதை முழுமையாக நிறுத்தி விட்டேன், கவர்ச்சிகரமாக ஆடையே அணிந்திருந்த நான், தற்போது இஸ்லாம் கற்று தந்த முறையான ஆடையை பேணி ஹிஜாப் அணிந்து தான் வெளியில் செல்கிறேன்....
தன்னுடைய குடும்பத்தினர் தன் மீது வருத்தத்தில் இருப்பதாகவும் கூறிய அவர் அருகிலுள்ள மசூதியில் தினமும் 5 வேளையும் தொழுகையில் ஈடுபட்டு வருகிறேன் எனவும் சந்தோசத்துடன் கூறினார்

சகோதரர் சங்கை ரிதுவான் அவர்களின் முக நூலில் இருந்து படித்தது,
Post a Comment