பொய் பேசுவது அழிவுக்கு வழி வகுக்கும்.






அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இன்று நம்மில் பலர் பொய் பேசுவதை சாதாரணமாக எடுத்துக் கொண்டுள்ளனர்பொய் பேசுவதனால் ஏற்படும் இம்மை,மறுமை இழப்புகளை அறிந்திருந்தால் பொய் பேசுவதை விபரீதமானகாரியம் என்று எடுத்துக் கொள்வார்கள்.

உலக வாழ்வை வளப்படுத்திக் கொள்வதற்காக பல நிலைகளில் பொய் பேசுவர் அவைகளில் சில:
  • பொய் பேசுவது வணிகத்தில் ஓர் அங்கம் போல் கருதி சிலர் பொய் பேசி வியாபாரம் செய்வர்,
  • பிறர் தன்னை உயர்வாக கருத வேண்டும் என்பதற்காக கடந்த கால சில நிகழ்வுகளை மிகைப்படுத்திப் பொய் பேசுவர் அல்லது நடக்காத ஒன்றையே நடந்தது போல் இட்டுக் கட்டுவர்,
  • தன்னை சுற்றி இருக்கக் கூடியவர்கள் சிரிக்க வேண்டும் என்பதற்காக தேவை இல்லாமல் பொய் பேசி சிரிக்க வைப்பர்,
  • சில தாய்,தந்தையர் பிள்ளகளை சமாதானப் படுத்த வேண்டும் என்பதற்காக செய்து கொடுக்க முடியாததை செய்து தருவதாகக் கூறி பொய் பேசுவர்
  • ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமனத்தை முடித்து வை என்று யாரோ சொன்னதை வேத வாக்கு போல் எண்ணி ஆயிரத்துக்கும் அதிகமான பொய்களை பேசி பொருத்தமில்லாதஜோடிகளுக்கு திருமனம் செய்து வைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர் பலர்.
  • தன்னைத் தவிற வேறு யாருக்கும் தெரியாது என்கின்ற தைரியத்தில் கணவில் காணாததைக் கண்டதாகக் கூறி பொய் பேசுவர் சிலர்,
  • சிலர் நெருக்கடியான நிலையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக பொய் பேசுவர்,
இது போன்று இன்னும் ஏராளமான சந்தர்ப்பங்களில் பொய் பேசுவதை வழமையாகக் கொண்டுள்ளதை அடுக்கிக்கொண்டேப் போகலாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொய் பேசி சமாளித்ததை திறமையாக நினைத்து பலர் சந்தோஷப்படுபவது உண்டு தன்னுடன் நெருக்கமானவர்களிடம் கூறி எப்படி சமாளித்தேன் தெரியுமா ? நான் பேட்டப் போட்டில் மேல்படியார் திக்குமுக்காடி விட்டார்செய்வதறியாது திகைத்துப் போய் விட்டார் என்றுக் கூறி மகிழ்வதும் உண்டுஆனால் இது அவர்களுடைய மனசாட்சியை அறவேஉறுத்துவதில்லை.

  • இதெல்லாம் ஒரு மேட்டரே அல்ல  என்று இவர்கள் நினைக்கின்றனரா ? !
  • அல்லது இதற்காக இறைவன் நம்மை குற்றம் பிடிக்க மாட்டான் என்றுக் கருதுகின்றனரா ?
  • அல்லது இது விஷயமாக இஸ்லாத்தில் பெரிய அளவிலான தடை எதுவும் இல்லை என்றுக் கருதுகின்றனரா ?
  • அல்லது இதற்கான மறுமை தண்டனை சொல்லும் அளவுக்கு பெரிதாக இல்லை என்றுக் கருதுகின்றனரா ?

பொய் பேசுவதை தடை செய்த அறிவிப்புகள் திருமறைக் குர்ஆனிலும்நபி(ஸல்அவர்களுடைய பொண் மொழிகளிலும் ஏராளமாக நிறைந்து காணப்படுவதை பூரணமாக ஒருவர் அறிந்தால்அவருடைய வாழ் நாளில் ஒரு தடவைக் கூட பொய் பேசத் துணிய மாட்டார்.

உலக வாழ்வில் ஏற்படும் இழப்புகள்.
ஒருவர் நெருக்கடியிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அல்லது அதிக அளவீலான லாபத்தை ஈட்டிக் கொள்வதற்காக, ஒருப் பொய்யை சொல்லிப் பெரும் தொகையை  அடைந்து கொள்ளலாம்.

பிறிதொரு காலத்தில் அல்லது அப்பொழுதே அது பொய் என்று மக்களுக்கு தெரிய வந்தால் அதன் பிறகு அவர் பல சந்தர்ப்பங்களில் நூற்றுக்கு நூறு உண்மையைப் பேசினாலும் அவன் ஒருபொய்யன் அவனைப் பற்றித் தெரியாதா ? என்று மக்கள் பேசும் நிலை உருவாகும்

அவர் உண்மை பேசும் போது அது  மக்களிடம் எடுபடாத நிலை உருவாகிப் போய் விடும்.

அவர் செல்வ செருக்குடன் வாழ்பவராக இருந்தாலும்உயர் பதவியில் அங்கம் வகிப்பவராக இருந்தாலும் பொய்யர் என்றப் பட்டம் அவருடைய இமேஜை உடைத்து நாசமாக்கி விடும்.

மதுமாதுசூது போன்ற இன்னும் ஏராளமான கெட்டப் பழக்கங்களிலிந்து மனிதன் தவ்பா செய்து திருந்தி வட்டால் அவர்  திருந்தி விட்டார் என்று மக்கள் அடையாளம் கண்டு கொள்வர்.

ஆனால் பொய்யர் திருந்தினாலும் மக்கள் பார்வையில் பொய்யராகவே அடையாளம் காணப்படுவார்.

இழந்த பின் திரும்பப் பெற முடியாததில் பொய் பேசியதால் இழந்த இமேஜை திரும்பப் பெறுவது கடினம்.

மறுமை வாழ்வில் ஏற்படும் இழப்புகள்.
நபி(ஸல்அவர்கள் தொழுது முடித்ததும் எங்களை நோக்கி, 'இன்றிரவு உங்களில் யாரும் கனவு கண்டீர்களா?' என்று கேட்கும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள்எவரேனும் கனவு கண்டுஅதைக் கூறினால், 'அல்லாஹ் நாடியது நடக்கும்எனக் கூறுவார்கள்.

இவ்வாறே ஒரு நாள், 'உங்களில் யாரும் இன்றிரவு கனவு கண்டீர்களா?' என்று கேட்டதும் நாங்கள் இல்லை என்றோம்அவர்கள், 'நான் இன்றிரவு ஒரு கனவு கண்டேன்அதில் இருவர் என்னிடம்வந்து என்னுடைய கைகளைப் பிடித்து என்னைப் புனித பூமியொன்றுக்கு அழைத்துச் சென்றனர்அங்கே ஒருவர் உட்கார்ந்திருந்தார்நின்றிருந்த இன்னொருவரின் கையில் இரும்பாலானகொக்கிகள் இருந்தனஅவர் அதைக்கொண்டு உட்கார்ந்திருப்பவரின் கீழ்த்தாடையின் ஒருபுறம் குத்த அது அவரின் பிடரி வழியாக வெளியேறியதுஇப்படியே தாடையின் இன்னொரு புறமும்செய்தார்இதற்குள் தாடையின் முதற் பகுதி ஒழுங்காகி விட்டதுபின்பு இது குத்தப்பட்டதும் அது பழைய நிலையை அடைந்ததுஉடனே நான் இது யார் என்று கேட்டேன்... அவர் பெரும் பொய்யர்.அவர் பொய் பேச அது பலர் வழியயாக உலகம் முழுவதையும் அடையும்நீர் பார்த்த அத்தண்டனை அவருக்கு மறுமை நாள் வரை  கொடுக்கப்படும்...1386. ஸமுரா இப்னு ஜுன்துப்(ரலி)அறிவித்தார்.

மேற்காணும் தண்டனை ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோடு மட்டும் நிறுத்தப்படுவதில்லை அல்லது ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்களோடு மட்டும் கொடுத்து விட்டுநிறுத்தப்படுவதில்லை அவ்வாறே தொடர்ச்சியாக மறுமை நாள் வரை நீடிக்கும் மறுமையின் மீது உறுதியான நம்பிக்கை கொண்ட மக்கள் பொய் பேசுவதைப் பற்றி இதன் பிறகாவது நிதானமாகசிந்துத்துக் கொள்ளட்டும்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவிதீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... 
நன்றி --மின்னஞ்சல் மூலமாக அதிரை ஏ.எம்.ஃபாரூக்

Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger