கர்நாடக முஸ்லிம்ஸ் மாதமிருமுறை, நியூஸ் போர்ட்டல்
ஆகிய ஆங்கில பத்திரிகைகள் மற்றும் கர்நாடக முஸ்லிம்ஸ் டாட் காம் என்கிற மின்னிதழ்
ஆகியவற்றை நடத்தி வருகிறார் கர்நாடக பத்திரிகையாளரான தன்வீர் அஹ்மது.
இவரது பத்திரிகை துறை பங்க ளிப்பைப் பாராட்டி
இவருக்கு மத்திய அரசின் சாத்பாவ்னா விருது வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த விருது மத்திய அரசின் இளைஞர்கள்
விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறையினால் கலை, இலக்கியம், இதழியல், விளையாட்டு, திரைப்படத்துறை
உள்ளிட்ட பல துறைகளில் சிறந்து விளங்குகின்ற சாதனையா ளர்களுக்கு வழங்கப்பட்டு
வருகி றது.
இந்த வகையில் இதழியலில் சமூகப் பொறுப்புடன்
சிறப்பாக பணியாற்றியதற்காக இந்த விருது தன்வீர் அஹ்மதுக்கு வழங்கப்பட் டுள்ளது.
கர்நாடக முஸ்லிம்கள் மற்றும் இதர சமுதாயத்தினருக்கு மத்தியில் உள்ள இடைவெளியை
நிரப்பும் வகையில், இரு சமூகங்க ளுக்கு இடையே நல்லிணக்கம்
ஏற்படுத்தும் உயரிய நோக்கோடு இதழியல் பொறுப்பை ஆற்றியி ருக்கிறார் தன்வீர்.
அதற்காகத் தான் அவருக்கு இந்த விருதை வழங்கி கவுரவித்திருக்கிறது மத் திய அரசு.
நியூஸ் போர்ட்டல் ஏடு மூலம் மிகக் குறுகிய
காலத்தில் இரு சமூ கங்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்தும் செயல்பாடுகளை
முன்னெடுத்திருக்கிறார் தன்வீர் என நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் இவரை
பாராட்டியுள்ளனர்.
இந்த விருது பெறும் நிகழ்ச்சி யில்
"கர்நாடகா முஸ்லிம்ஸ்' என் கிற மாதமிருமுறை இதழையும்
அறிமுகப்படுத்தி அதன் துவக்க நிகழ்ச்சியையும் இதே மேடையில் அரங்கேற்றி இருக்கிறார்
தன்வீர்.
சுதந்திரப் போராட்ட வீரர்கள், கன்னட திரைப்பட
நடிகர்கள், இலக்கியவாதிகள், எழுத்தாளர் கள்
மற்றும் ஏனைய பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்வீர் அஹ்மதை
வாழ்த்திப் பேசியுள்ளனர்.
கர்நாடகாவின் ஸ்ரீபெலே சான்ஸ்தா மடத்தின்
மடாதிபதி யான ஷிவ்ருத்ரா மஹா சுவாமி தன்வீருக்கு சாத்பாவ்னா விருதை வழங்கி
தன்வீரின் சமூகப் பொறு ப்பை பாராட்டியுள்ளார்.
சமூகத்தை கட்டமைப்பதில் இதழியலின் உறுதியான
பங்க ளிப்பு குறித்த பிரபல கன்னட கவி ஞரான டாக்டர் நிசார் அஹ்மது வின்
கருத்துகளிலிருந்து மேற் கோள் காட்டி பேசிய ஷிவ்ருத்ரா மஹா சுவாமி, “இந்தியாவை சமூ
கப் பொறுப்புடன் கட்டமைப்ப தில் இன்றைய இளைஞர்கள் தங்களின் பங்க ளிப்பை செலுத்த
வேண்டும்...'' என்று கேட்டுக் கொண் டதுடன், “தன்வீர்
அஹ்மதைப் போன்ற மக்களையும் சமூகத்திற்கு அவர்கள் ஆற்றும் பணியையும் காணும்போது
சந்தோஷமாக இருக்கிறது...'' எனவும் தெரிவித் துள்ளார்.
சாத்பாவ்னா விருதைப் பெற் றுக் கொண்டு பேசிய
தன்வீர் அஹ்மது, “சமூகப் பிரச்சிûனைக ளுக்காக
பெரும்பாலான ஆங்கில ஊடகங்கள் சரியான இடத்தை கொடுப்பதில்லை. மாறாக, எதிர்ம றையான
பாதகமான விஷயங்க ளைத்தான் அவை முக்கியத்துவப் படுத்துகின்றன.
கர்நாடக முஸ்லிம்ஸ் பத்திரிகையின் இலக்கு
லட்சியம் எல்லாமே சமூக நிலையில்,
சாதக மான சூழல்களை ஏற்படுத்துவ தும், முஸ்லிம்
சமூகத்தின் பொறு ப்புணர்வு நடவடிக்கைகளை கட் டமைப்பதும்தான். அதற்கான களத்தை
இந்தச் சமூகத்திற்கு நாங்கள் ஏற்படுத்தித் தருகிறோம்.
குரலற்றவர்களின் குரலாக ஒலித்துக்
கொண்டிருக்கிறோம். கர்நாடக முஸ்லிம்ஸ் பத்திரிகை நாளுக்கு நாள் வளர வாசகர்கள்
ஆதரவு தந்து கொண்டிருக்கிறார் கள். எந்த விருதாக இருந்தாலும் எங்களை
உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கும் வாசகர்களுக்கும் அர்ப்பணிப்போடு செயல்படும்
எங்கள் பத்திரிகை குழுவிற்குமே அது உரியதாகும்...'' என தெரிவித்
துள்ளார்.
இஸ்லாமிய சமூகத்திற்கு மட்டு மல்ல...
இந்தியாவின் வளர்ச்சிக் கும் சமூகப் பொறுப்புள்ள அறிவு ஜீவிகள்தான் தற்போதைய தேவை.
- ஹிதாயா
நன்றி - கீற்று
Post a Comment