Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label முக்கியச் செய்திகள். Show all posts
Showing posts with label முக்கியச் செய்திகள். Show all posts

கில்மா நடிகரின் பரவச முத்தம்!


விஜய் TVயில் நடிகர் பிரகாஷ்ராஜ் வழங்கும் "நீங்களும் வெல்லலாம்' நிகழ்ச்சியில் அந்நிய பெண்களுக்கு முத்தம் கொடுத்து சாதனை படைத்தார் உலக நாயகன். 

கமல்ஹாசன் கவுதமியோடு LIVING TOGETHER அதாவாது கல்யாணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது என்கிற மேற்கத்திய கலாசாரத்தில் வாழ்ந்து வருகிறார்.

முறைப்படி திருமணம் செய்யாமல் கவுதமியை சேர்த்து வைத்திருக்கும் இந்த முறையை நம் தமிழர் கலாச்சாரத்தில் வைப்பாட்டி வைத்திருக்கிறான் என்று கேவலமா சொல்வார்கள். 

ஆனால், இதையே விஷயத்தை கமல்ஹாசன் செய்தால் அவருக்கு அங்கீகாரம் கொடுக்கிறது ஒரு கூட்டம். இது போதாதென்று இவரது இந்த வாழ்க்கை முறையை இலவசமாக விளம்பரம் செய்கின்றன சில கேடுகெட்ட தொலை காட்சிகளும், பத்திரிக்கைகளும். 

இன்னும் சில கிறுக்கு கூட்டம் இவரை உலக நாயகன், காதல் மன்னன், எங்களின் உயிரினும் மேலானான தலைவன் என்று போற்றுகின்றன. தலைவர்கள் என்றால் யார்? தலைமை துவத்துக்கு உண்டான பண்புகள் என்ன? என்பதை கூட தெரியாத ஒரு கூட்டம் ரசிகர்கள் என்ற பெயரில் அலைகின்றது. இந்த கூட்டத்தினர் தன்னை பெற்ற தாயை உயிரினும் மேலானவர் என்று போற்றியதில்லை.

படிக்காத, பொது அறிவு இல்லாதவர்கள்தான் இப்படி என்றால் படித்த மக்களும், வெகுஜன ஊடகங்களும் கூட இப்படி கேவலமான விசயங்களை பரப்புகின்றன. புன்னகை மன்னன் படத்தில் உதட்டோடு உதடு வைத்து ஆங்கில படம் போல நிஜமாகவே நடிகை ரேகாவின் உதட்டை உறிஞ்சியவர்தான் நமது கில்மா நாயகன். ஒரு பெண்ணை அவளது அனுமதி இல்லாமல் முத்தம் கொடுத்து தனது ஆணாதிக்க மேலாண்மையை நிரூபித்தவர்தான் இந்த உலக நாயகன்.

நடிகைகள் எல்லாம் பாடல் காட்சிகளில் வேறு வழியில்லாமல் இவரது சில்மிசங்களை பொறுத்து கொள்ள வேண்டும். இப்படி கில்மா நாயகனாக வலம் வந்த கமலகாசன் இப்பொழுது குடும்ப பெண்களையும் கில்மா செய்ய ஆரம்பித்து விட்டார். நிர்வாண நடிகர் பிரகாஷ் ராஜ் கூட்டி கொடுக்கும் வேலையை செய்திருக்கிறார். பிரகாஷ் ராஜ் தனது  பொண்டாட்டியை இந்த நிகழ்ச்சிக்கு கூட்டி வந்து கமலுக்கு முத்தம் கொடுக்க வைத்திருக்கலாம். 

அதை விட்டு அடுத்தவன் வீட்டு பெண்களிடம் இப்படி கேள்வி கேட்பதும் அவர்களது அறியாமையை பயன்படுத்தி கில்மா நாயகனுக்கு முத்தம் கொடுக்க வைத்திருப்பது அருவருப்பை உண்டாக்குகிறது. அதிக உடல் உழைப்பு இல்லாமல் இலகுவாக கிடைக்கும் பணம் இவர்களை இதுபோன்ற கில்மா வேலைகளில் இறங்க வைக்கிறது. எழை, எளிய உழைக்கும் மக்களின் பிரச்சனைகளை உணராதவர்களே இதுபோன்ற கேவலமான வக்கிர செயல்களில் ஈடுபடுகிறார்கள். 

வறுமையின் காரணமாக விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களை கைது செய்யும் காவல்துறை பணக்கார திமிரில் கொழுப்பெடுத்து மேல்தட்டு வர்க்கம் செய்யும் விபச்சாரங்களை கண்டு கொள்வதில்லை. பார்டி என்கிற பெயரிலும், சுற்றாலா தளங்களில், கடற்கரை பீச் ஓரங்களில் கட்டி வைத்திருக்கும் உல்லாச பங்களாக்களிலும் இதுபோன்ற ஆயிரம் வக்கிரங்கள் அரங்கேறுகின்றன. வசதி படைத்தவன் தவறிழைக்கும் பொழுது இந்த சமூகம் அதை அங்கீகரிக்கிறது அதே நேரம் ஏழை தவறு செய்தால் அதை உலகமகா தீமை போல் சித்திகரித்து எழுதுகிறது, அவர்களை சமூகத்தில் இருந்து ஓதுக்கி வைக்கிறது.  

இது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்! இந்த செயலை சிந்திக்கவும் வன்மையாக கண்டிக்கிறது! தமிழ் கலாசாரத்தை கெடுக்கும் இதுபோன்ற கயவர்களை சமூகம் புறம் தள்ள வேண்டும்! 
நன்றி - சிந்திக்கவும் 
0 comments

அடைக்கலம் கேட்ட மக்களுக்காக உயிர் துறந்த எம்பி!


குஜராத் இனப்படுகொலை வழக்குகளில் மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டதை எதிர்த்து கொலைச் செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி இஹ்ஸான் ஜாஃபிரியின்  மனைவி ஸாகியா ஜாஃப்ரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 
2002 இல் குஜராத் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்தை காரணம் காட்டி நரேந்திர மோடி தலைமையில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக இனப்படுகொலை ஒன்றை திட்டமிட்டு நடத்தினர். 
குஜராத் மாநில அஹ்மதாபாத்தில் உள்ள குல்பர்கா ஹவுசிங் சொசைட்டி பகுதியில் வைத்து காங்கிரஸ் முன்னாள் எம்.பி.இஹ்ஸான் ஜாஃப்ரி உள்பட 69 பேர் வெட்டியும், எரித்தும் கொல்லப்பட்டனர். குல்பர்க் கூட்டுப் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த பத்து வருடங்களாக நீதி கேட்டு போராடி வருகிறார்கள். 
இதில் பாதிக்கப்பட்டவர்களில் இம்தியாஸ் பதான் என்பவரும் ஒருவர். இவர் தன்னுடை எட்டு குடும்ப உறப்பினர்களை தன் கண்முன்னே பலி கொடுத்தவர். குஜராத் முதல்வர் நர மோடிக்கு எதிராக சாட்சி சொன்னவர்களில் இவரும் ஒருவர். கொலை செய்யப்பட்ட காங்கிரஸ் முன்னாள் எம்பி இஹ்சான் ஜாஃப்ரி நரேந்திர மோடியை தொலைபேசியில் அழைத்து உதவி கேட்டதை நேரில் பார்த்தவரும் இவர்தான். 
இஹ்சான் ஜாஃப்ரி முன்னாள் எம்பி என்பதால் அவரது வீட்டில் பாதுகாப்பு கிடைக்கும் என்று அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் அவரது வீட்டில்  அடைக்கலம் புகுந்திருந்தனர். அதில் பெரும்பான்மையோர் பெண்களும்  குழந்தைகளுமே. இந்நிலையில் இவரது வீட்டை சுற்றி ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கூடுகின்றனர். உடனே இஹ்சான் ஜாஃப்ரி மாநில முதல்வர் நரேந்திர மோடியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களை காப்பாற்றுமாறு உதவி கேட்கிறார். 
ஆனால் மோடியோ உதவி செய்வதற்கு பதிலாக குற்றம் சாட்டும் விதத்தில் பேசுகிறார்.  அதனால் மனம் உடைந்து போன ஜாஃப்ரி  ஹிந்துத்துவா பயங்கரவாதிகளிடம் தன்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் ஆனால் பெண்களையும் குழந்தைகளையும் மட்டும் விட்டு விடுங்கள் என்று கெஞ்சி கேட்டார், ஆனால் கொடியவர்கள் அவரை முதியவர் என்றும் பாராமல் வெட்டி கொன்று தீயில் போட்டனர். அது மட்டுமல்லாது அவரது வீட்டில் அடைக்கலம் புகுந்திருந்த பெண்களை, குழந்தைகளை, வெட்டியும் எரித்தும் கொன்றனர். 
இந்தக் கலவரத்தை முதல்வர் மோடி உள்ளிட்ட 59 பேர் தூண்டியதாக கொல்லப்பட்டஇஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஸாகியா ஜாஃப்ரி வழக்கு தொடர்ந்தார். அதைத் தொடர்ந்து, குல்பர்க் சொசைட்டி கூட்டுப்படுகொலை குறித்து விசாரிக்க சிபிஐ முன்னாள் இயக்குநர் ராகவன் தலைமையில் சிறப்பு விசாரணை குழுவை (எஸ்.ஐ.டி.) அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திய எஸ்.ஐ.டி. “இந்தக் கலவரத்தில் மோடி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குத் தொடர்பு இல்லை’ என்று கூறி, அவர்களுக்கு நற்சான்றிதழ் அளித்தது.
இதை எதிர்த்து, ஸாகியா ஜாஃப்ரி, அஹ்மதாபாத் பெருநகர நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், இந்தக் கலவரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தும் பொறுப்பை எஸ்.ஐ.டி. அல்லாத வேறொரு சுயேச்சையான அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரியிருந்தார். அவரது மனுவை மாஜிஸ்திரேட் பி.ஜே.கணத்ரா விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார். இவ்வழக்கு விசாரணை இம்மாதம் 24ஆம் தேதியில் இருந்து, நாள்தோறும் நடைபெறும் என்று நீதிபதி அறிவித்துள்ளார், மனித நேயம் அற்ற இந்த கொடியவர்கள் தண்டிக்கப்படுவார்களா? 
சிந்திக்கவும் 
0 comments

புத்துணர்வூட்டிய டிஎன்டிஜே பொதுக்குழு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 14வது மாநிலப் பொதுக்குழு 14.04.2013 ஞாயிறன்று தஞ்சை வடக்கு மாவட்டம் கும்பகோணத்திலுள்ள மகாமகம் கலையரங்கத்தில் காலை 10.30மணிக்கு கூடியது.
துவக்கமாக மேலாண்மைக்குழுத் தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி அவர்கள் உளத்தூய்மை என்ற தலைப்பில் சிறிய உரையுடன் மாநில நிர்வாகம் குறித்த மேலாண்மைக் குழுவின் அறிக்கையை தாக்கல் செய்தார்.
அதைத் தொடர்ந்து தணிக்கைக்குழு சார்பாக மாநிலத் தணிக்கைக்குழு உறுப்பினர் தவ்ஃபீக் அவர்கள் தணிக்கைக்குழுவின் அறிக்கையை தாக்கல் செய்தார்.
அதைத் தொடர்ந்து மாநிலப் பொதுச் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் தரணியெங்கும் தாவா பணிகள் என்ற தலைப்பில் கடந்த ஓராண்டுகளில் செய்யப்பட்ட தாவா பணிகளை தொகுத்து பட்டியலிட்டு ஆண்டறிக்கையை வாசித்தார்.
மாநிலச் செயலாளர் யூசுப் அவர்கள் பொதுசேவையிலும், போராட்டத்திலும் டிஎன்டிஜே கடந்த ஓராண்டுகளாக ஆற்றிய பணிகளை ஆண்டறிக்கையாக சமர்ப்பித்தார்.
மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் சையது இப்ராஹீம் அவர்கள் ஊடகங்களிலும், விவாதங்களிலும் தவ்ஹீத் எழுச்சி என்ற தலைப்பில் கடந்த ஓராண்டுகளில் ஊடகங்களில் தவ்ஹீத் ஜமாஅத்தின் எழுச்சியையும், டிஎன்டிஜே சந்தித்த விவாதங்களையும், ஏகத்துவ எதிரிகளிளை ஓடவிட்டு, அல்லாஹ் நமக்கு அளித்த வெற்றியையும் பட்டியலிட்டு ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார்.
அதைத் தொடர்ந்து கடந்த 2012 ஆம் ஆண்டு தாவா பணிகள் மற்றும் இரத்ததானத்தில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாவட்டம் மற்றும் கிளைகள், மண்டலங்கள் மற்றும் மண்டலங்களின் கிளைகள் ஆகியவற்றிற்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தாவா பணிகளில் அதிக புள்ளிகளைப் பெற்று முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாவட்டங்கள் :
1.தென்சென்னை மாவட்டம்
2.திருவள்ளூர் மாவட்டம்
3.வடசென்னை மாவட்டம்
தாவா பணிகளில் அதிக புள்ளிகளைப் பெற்று முதல் மூன்று இடங்களைப் பெற்ற கிளைகள் :
1.மதுரவாயல் கிளை (திருவள்ளூர்)
2.தரமணி (தென் சென்னை)
3.பாண்டி பஜார் (தென் சென்னை)
இரத்ததானத்தில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாவட்டங்கள் :
1.தென் சென்னை
2.திருவள்ளூர்
3.வடசென்னை
இரத்ததானத்தில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற கிளைகள் :
1.பாண்டிபஜார் (தென் சென்னை)
2.தரமணி (தென் சென்னை)
3.ஆவடி (திருவள்ளூர்)
அவசர இரத்ததானத்தில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாவட்டங்கள் :
1.மதுரை
2.திருச்சி
3.நெல்லை
தாவா பணிகளில் அதிக புள்ளிகளைப் பெற்று முதல் மூன்று இடங்களைப் பெற்ற மண்டலங்கள் :
1.ரியாத்
2.குவைத்
3.தம்மாம்
தாவா பணிகளில் அதிக புள்ளிகளைப் பெற்று முதல் மூன்று இடங்களைப் பெற்ற மண்டல கிளைகள் :
1.ஃபாஹில் (குவைத்)
2.நியூ செனைய்யா (ரியாத்)
3.மலஸ் (ரியாத்)
இரத்ததானத்தில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மண்டலங்கள் :
1.ரியாத்
2.தம்மாம்
3.குவைத்
தாவா பணிகளில் ஆறுதல் பரிசு பெறும் மாவட்டங்கள் :
4வது இடம் : மதுரை – 28 திருக்குர்ஆன் தமிழாக்கம்
5வது இடம் : நெல்லை – 26
6வது இடம் : திருவாரூர் – 24
7வது இடம் : கோவை – 22
8வது இடம் : புதுக்கோட்டை – 20
9வது இடம் : கடலூர் – 18
10 வது இடம் : காஞ்சி கிழக்கு – 16
11 வது இடம் : காஞ்சி மேற்கு – 14
12 வது இடம் : இராமநாதபுரம் – 12
13 வது இடம் : விழுப்புரம் மேற்கு – 10
ஆறுதல் பரிசு பெறும் கிளைகள் :
4வது இடம் : பட்டாபிராம் (திருவள்ளூர் மாவட்டம்) 23 திருக்குர்ஆன் தமிழாக்கம்
5வது இடம் : எம்.எம்.டி.ஏ.காலணி (தென் சென்னை மாவட்டம்) 21
6வது இடம் : புதுப்பேட்டை (வடசென்னை) 19
7வது இடம் : அரக்கோணம் (திருவள்ளூர் மாவட்டம்) 17
8 வது இடம் : பேட்டை (நெல்லை மாவட்டம்) 15
9 வது இடம் : துறைமுகம் (வடசென்னை மாவட்டம்) 13
10 வது இடம் : சேப்பாக்கம் (தென்சென்னை மாவட்டம்) 11
11 வது இடம் : அம்மாபட்டிணம் (புதுக்கோட்டை மாவட்டம்) 9
12 வது இடம் : ஆவடி (திருவள்ளூர் மாவட்டம்) 7
13 வது இடம் : மேலப்பாளையம் (நெல்லை மாவட்டம்) 5
விருதுகள் வழங்கியதைத் தொடர்ந்து நிர்வாகத் தேர்தல் நடைபெற்றது.
இந்த நிர்வாகத்தின் பதவிக்காலம் இந்த ஆண்டு இறுதியில் முடிவதைத் தொடர்ந்து சில நிர்வாக வசதிகளுக்காக சில மாதங்களுக்கு முன்பே நிர்வாகத்தேர்தல் வைப்பதற்கு உயர்நிலைக்குழு முடிவு செய்ததையடுத்து நிர்வாகத் தேர்தல் இப்பொதுக்குழுவில் நடைபெற்றது.
புதிய நிர்வாகிகளாக கீழ்க்கண்டவர்கள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர் :
மாநிலத் தலைவர் : பீஜே
மாநிலப் பொதுச் செயலாளர் : ரஹ்மத்துல்லாஹ்
மாநிலப் பொருளாளர் : எம்.ஐ.சுலைமான்
மாநில துணைத் தலைவர் : சையது இப்ராஹீம்
மாநில துணைப் பொதுச் செயலாளர் : முஹம்மது யூசுப்
மாநிலச் செயலாளர்கள் :
1.எக்மோர் சாதிக்
2.கோவை ரஹீம்
3.அப்துல் ஜப்பார்
4.அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி
5. தொண்டி சிராஜ்தீன்
6.ஆவடி இப்ராஹீம்
7.இ.முஹம்மது
8.பத்ருல் ஆலம்
9. நெல்லை யூசுப் அலி
10.திருவாரூர் அப்துர்ரஹ்மான்
நிர்வாகத் தேர்தலையடுத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன :
தமிழகத்தில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை 3.5 சதவிகிதத்திலிருந்து ஏழு சதமாக உயர்த்த மாநில அரசை வலியுறுத்தியும் இந்திய அளவில் முஸ்லிம்களுக்கு தனியாக பத்து சதவிகிதம் இட ஒதுக்கீட்டை சட்டாமாக்க மத்திய அரசை வலியுறுத்தியும் வரும் அக்டோபர் 8 ஆம் தேதி அன்று மாபெரும் அறப்போராட்டத்தை மாநிலம் தழுவிய அளவில் சென்னையில் நடத்துவது என்பது உள்ளிட்ட முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் மற்றும் புகைப்படங்களுக்கு குடந்தையில் நடைபெற்ற TNTJ வின் 14 வது மாநிலப் பொதுக்குழு!
நன்றி - TNTJNET 
0 comments

லகட பாண்டிகளை பிடிக்க SPY கேமரா!


 மும்பையில் 36 போலீஸ் அதிகாரிகள் லஞ்சம் வாங்கும் காட்சி படம் பிடிக்கப்பட்டு வெளியானதை  தொடர்ந்து அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  
மும்பை போலீசார் குர்லா பகுதியில் உள்ள நேரு நகரில் பல்வேறு இடங்களில் லஞ்சம் வாங்குவதை சமூக நல ஆர்வலர் காசிம் கான் என்பவர் ரகசியமாக கேமராவில் பதிவு     செய்துள்ளார்.. 
இதை காசிம் கான் காவல்துறை ஆணையர் சத்யபால் சிங்கிடம் ஒப்படைத்துள்ளார். இதையடுத்து 36 போலீஸாரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து லஞ்ச ஒழிப்பு பிரிவு மூலமும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 
தனி நபராக 36 போலீஸ் அதிகாரிகளின் லஞ்ச லாவண்யத்தை வெளிக்கொண்டு வந்த காசிம் கானின் முயற்சி பாராட்டத்தக்கது. லஞ்சத்தை ஒழிக்கிறோம் பேர்வழி என்று சொல்லும் அரசியல் கட்சிகளும் தனி நபர்களும் இதுபோன்று லஞ்சத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் துணிந்து இறங்க வேண்டும்.
இதை தமிழகத்திலும் மக்கள் கடைபிடிக்க வேண்டும். இப்பொழுது ஸ்பை (SPY) கேமராக்கள் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கிறது. ebay.com  மற்றும் amazon.com  போன்றவற்றில் 800 முதல் 2000 ரூபாய்க்குள் வாட்ச், பேனா, கோர்ட் பட்டன், டைம் பீஸ், சன் கிளாஸ், கி செயின் போன்ற மாடல்களில் spy கேமராக்கள் கிடைகின்றன. இதை வாங்கி மக்கள் உபயோகிக்கலாம். 
ஒவ்வொரு மனிதனும் ஒரு மாதத்தில் குறைந்தது ஒரு முறையாவது ஏதாவது ஒரு வகைக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழல் இந்தியாவில் நிலவி வருகிறது. அந்த அளவுக்கு லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. இப்படி லஞ்சம் வாங்கும் லகட பாண்டிகளை spy கேமராக்கள் மூலம் படம் பிடித்து தண்டனை வாங்கி கொடுத்தால் ஏழை மக்கள் லஞ்ச கொடுமையில் இருந்து சிறிதளவாவது விடுபடுவார்கள்.
நன்றி - சிந்திக்கவும்
0 comments

செல்பேசியினால் ஏற்படும் பாதிப்புகள்!


உள்ளங்கையில் அடங்கும் ‘செல்’பேசி உயர்ந்த பணக்காரர் முதல் தாழ்ந்த ஏழைவரை தாராளமாய் பயன்படுத்தும் தகவல் தொடர்புக் கருவியாகிவிட்டது.  ‘செல்பேசி இல்லாதவன் செல்லாக் காசு’ என்று சொல்லும் அளவிற்கு செல்பேசி நம்முடன் இரண்டறக் கலந்துவிட்டது.
செல் பேசியைக் காட்லும், செல்பேசிக்காக நிறுவப்படும் ஊசிக் கோபுரங்கள், இயல்பான மனித வாழ்க்கையை ஏராளமாய் நாசப்படுத்துகின்றன;  அவை வெளிப்படுத்தும்  கதிர்வீச்சின் பாதிப்புகள் செவிப்புலன்களை மழுங்கடிக்கின்றன.
செல் பேசியிலிருந்து வெளியேறும் மின்காந்த கதிர்வீச்சு செவிமடுக்கும் போதெல்லாம், காதையொட்டி அமைந்துள்ள திசுக்களை நசுக்கிவிடுகிறது.  இதனால் கேட்கும் திறனைக் ‘காது’ மெதுவாக இழந்துவிடுகிறது.  செல்பேசியும், வானொலி போன்ற ஓர் ஒலிபரப்புச் சாதனமே.  இவற்றிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சை கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தைகள் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.  பதினாறு வயதுக்குக் குறைந்த சிறுவர்கள் அதிக நேரம் செல்பேசியைப் பயன்படுததும்போது பாதிப்பு பன்மடங்கு பெருகும்,  படிக்கும் நேரமும் பாதியாய் குறையும்.
இதய நோய் உள்ளவர்கள் செல்பேசியை பயன்படுத்தினால் செவிப்புலன் மட்டுமல்ல உடல் நலமும் கெடும்; காதோடு பேசும் கதிர்வீச்சின் வெளிப்பாடு அதிகமாகும் போதெல்லாம், அது, காலனுக்கு விடும் அழைப்பாக மாறிடும்; காத்திருக்கும் மரணத்தை நாளைக்கே தழுவ நேரிடும்; புற்றுநோயும், மலட்டுத் தன்மையும் ஏற்படுகிற அபாயம் கூட இல்லாமல் இல்லை என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
செல்பேசியிலிருந்து கதிர்வீச்சுகள் வெளியேறுகின்றன.  அக்கதிர்வீச்சுகளிலிருந்து நிறைய நோய்கள் உடலில் குடியேறுகின்றன.  அவை:- தோலில் தடிப்புகள் உண்டாதல் - தலைமுடி கொட்டுதல் - மூளையில் உள்ள நரம்புச் செல்கள்  பாதிப்படைதல் - இரத்த நாளங்கள் அழிதல் - தைராயிடு சுரப்பிகள் கெடுதல் - தொற்று நோய்த் தாக்குதல் -‘லுக்கேமியா’, ‘லிம்போமா’ போன்ற புற்று நோய்கள் ஏற்படுதல் - இன்னும், லிம்போசைட் செல்களின் எண்ணிக்கை குறைதல் போன்றவை! 
மக்கள் அதிகம் கூடும் இடங்கள், குடியிருப்புகள், பெட்ரோல் நிலையங்கள், கல்லூரிகள், பள்ளிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றின் அருகில் செல்பேசி கோபுரங்களை நிறுவக் கூடாதென நடுவணரசு தடைவிதித்துள்ளது.  காரணம்:- செல்பேசி கோபுரம் நிறுவப்பட்டுள்ள இடத்திலிருந்து 500 மீட்டர் சுற்றளவில் வசிப்பவர்களுக்கு மூளைப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம்.
பெட்ரோல் நிலையங்களில் செல்பேசியைப் பயன்படுத்தினால், அதிலிருந்து வெளியேறும் வெப்பத்தின் மூலம் விரைவாக, பெட்ரோலில் தீ பிடித்து எரியும்! அதனால் பெட்ரோல் நிலையங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அங்கெல்லாம் செல் பேசியை இயக்கக் கூடாதென்று அறிவிக்கப்பட்டுள்ளது.  ஆனால் யாரும் அதை கடைபிடிப்பது இல்லை;  இது சோதனைக்குத் தூதுவிடும் வேதனைக்குரியது.
செல்பேசியில் பேசிக்கொண்டே வாகனங்கள் ஓட்டுவதால் அதிகளவு விபத்துகள் நடைபெற்று உயிர் இழப்புகள் ஏற்படுகிறது.  எனவே, செல்பேசியில் பேசிக்கொண்டு வாகனங்கள் ஓட்டுவதைக் கண்டிப்பாக தவிர்க்கவேண்டும்.
இந்தியாவில் தற்போது செல்பேசி பயன்படுத்துவோர் எண்ணிக்கை இருபத்தி ஓர் கோடி.  இது 2010-ஆம் ஆண்டில் ஐம்பது கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  தற்போது செல்பேசி பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கையில் உலகில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.  அதனால் தான் வெளிநாட்டு நிறுவனங்கள் செல்பேசி தயாரிப்பு மற்றும் சேவையில் அதிக முதலீடுகளை அள்ளி வந்து கொட்டுகின்றன.  பலமடங்கு லாபத்தைத் தள்ளிக்கொண்டு போகின்றன.
செல்பேசிகள், மைக்ரோவ்வேவ் அடுப்புகள், கணினிகள், தொலைக் காட்சிப் பெட்டிகள், மின்சாரக் கடிகாரங்கள், குக்கர்கள், எக்ஸ்ரே கருவிகள், ஸ்கேனர்கள் போன்றவை கதிர்வீச்சை அதிகம் உமிழும் தன்மையுடையவை.  மக்கள் மேற்கண்ட மின்சாதனங்கைளப் பயன்படுத்தும்போது அதிக விழிப்புடன் இருப்பது அவசியம்.
செல்பேசி மற்றும் செல்பேசிக் கோபுரங்களிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சைத் தடுக்கும் புதிய கருவிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டியது உடனடித்தேவை.    
‘செல்பேசி’ கோபுரங்கள் விதிமுறைகளுக்குப் புறம்பாக அமைக்கப்பட்டுள்ளனவா என்பதை அரசு கண்காணிக்க வேண்டும்.  விதிமுறைகளுக்குப் புறம்பாக நிறுவப்பட்டுள்ளவற்றை அகற்றிடவும் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
செல்பேசிகளாலும், செல்பேசி கோபுரங்களாலும் ஏற்படும் பாதிப்புகள் குறித்துப் பாமர மக்களுக்கும் எடுத்துரைக்க வேண்டும்.  விழிப்புணர்வு ஏற்படும் வகையில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்.  செல்பேசியில் குறைந்த நேரத்தில் சுருங்கப் பேசி விளங்க வைக்கப் பழகிட வேண்டும்.  அப்போது கட்டணமும் குறையும், கதிர்வீச்சின் பாதிப்பும் குறையும்.
நன்றி - கீற்று 
0 comments

உண்மையை மறைக்கும் ஊடகங்கள்: முஸ்லிம்களுக்கு எதிராக விஷம் கக்கும் அவலம்!


சவூதி அரசாங்கம் தங்களது நாட்டினருக்கு சலுகை வழங்கி அங்கு வேலை செய்ய
வரும் பிறநாட்டினரையும், பிற மதத்தினரையும் துன்புறுத்தி கொடுமைப்படுத்தி
வருகின்றது என்று பல அவதூறு செய்திகளை நம் நாட்டு ஊடகங்கள் பரப்பி வருவது
நாம் அனைவரும் அறிந்ததே!
இலங்கைப் பெண் ரிசானா 4மாத குழந்தையை கழுத்து நெறித்துக் கொலை செய்த
வழக்கில் சவூதி அரசாங்கம் அப்பாவி(?) ரிசானாவை தூக்கிலிட்டது. அதே
நேரத்தில் தனது மகளையே கொன்ற அல்காம்தி என்ற சவூதி நாட்டைச்
சேர்ந்தவருக்கு 4மாதமே சிறைதண்டனை வழங்கி மன்னித்துவிட்டுவிட்டது என்று
நாக்கூசாமல் பொய்யைப் பரப்பினர். இந்த விஷயத்தில் இவர்களது
பித்தலாட்டங்களை ஏற்கனவே உணர்வு இதழ் தோலுரித்துக்காட்டியது. உணர்வின்
வாதங்களுக்கு எவருமே பதில் சொல்லவில்லை
சவூதியில் தங்களது நாட்டினருக்கு ஒரு சட்டம், அடுத்த நாட்டினவருக்கு ஒரு
சட்டம் என்று அநியாயமான சட்டம் உள்ளது என புளுகித்தள்ளினர். ஆனால்
இதுபோன்ற அவதூறுகளையெல்லாம் தகர்த்து தவிடு பொடியாக்கி வரும் நிகழ்வுகள்
அன்றாடம் சவூதி அரேபியாவில் நடந்து வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு
நிகழ்வுதான் சென்ற இரு வாரத்திற்கு முன் நடந்துள்ளது. அது குறித்த
செய்தியைக் காண்போம்.
இந்திய நாட்டு இந்து சகோதரரை ஏமாற்றிய சவூதி முதலாளி:
களமிறங்கிய தபூக் டிஎன்டிஜே!
கடந்த 01-03-2013 அன்று தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையைச் சேர்ந்த பிறமத
சகோதரர் முத்துசாமி  என்பவர் தபூக் கிளை நிர்வாகிகளை அணுகி, தனது முதலாளி
தனக்கு 3 மாதம் சம்பளம் தராமல் தன்னை கொடுமைப்படுத்தியும், அடித்துத்
துன்புறுத்தியும் வந்தார்.  அதனால் தனது காதின் சவ்வு கிழிந்து
கஷ்டப்படுவதாகவும், தனக்கு நியாயம் பெற்றுத்தருமாறும் கண்ணீரோடு
கேட்டுக்கொண்டார்.
உடனடியாக களமிறங்கிய டிஎன்டிஜே!:
இந்தப் புகாரை நமது நிர்வாகிகளிடம் தெரிவித்தவுடன் கிளைத் தலைவர் சகோ.
அப்துல் அஜீஸ் அவர்கள் அந்தச் சகோதரரின் விபரத்தை இந்தியத் துணை
தூதரகத்திற்கு அறிவித்துவிட்டு, தபூக்கில் உள்ள காவல் நிலையத்திற்குச்
சென்று சம்பந்தபட்டவரின் முதலாளி மீது வழக்குப் பதிவு செய்தார்.  உடன்
காவல்துறையினர் அந்த முதலாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.  அத்தோடு
நில்லாமல் அவரை அழைத்துச்சென்று தபூக் நீதிமன்றத்தில் வழக்கும் பதிவு
செய்தனர்.
வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், அந்த முதலாளிக்கு,
முத்துசாமியின் 3 மாத சம்பளம் 3000 ரியால், இழப்பீடு 1500 ரியால், விமான
டிக்கெட்டிற்கு 1500 ரியால் என 6000 ரியால் வழங்கும்படி உத்தரவிட்டது.
(ஒரு ரியால் என்பது சுமார் 15 ரூபாய் ஆகும். இந்தியப் பண மதிப்பிற்கு இது
90,000 தொன்னூறாயிரம் ரூபாய்). அதனைப் பெற்ற டிஎன்டிஜே தபூக் கிளைத்
தலைவர் சகோ. அஜீஸ் அவர்கள் அந்தப்பணத்தை முத்துசாமியிடம் ஒப்படைத்தார்.
அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 15.03.2013 வெள்ளி அன்று அவரை நமது
நிர்வாகிகள் தாயகத்திற்கு அனுப்பி வைத்தனர். அவர் கண்ணீருடன் நமது
நிர்வாகிகளுக்கு நன்றி செலுத்தி தாயகம் திரும்பினார்.
நமது ஜமாஅத் மத இன வேறுபாடு இல்லாமல் அனைத்து தரப்பினருக்கும் உரிமையைப்
பெற்றுத்தர பாடுபடுவைதை இது பறை சாற்றுவதுடன், அரபு நாட்டில் அந்நிய
நாட்டினருக்கு நியாயம் கிடைப்பதில்லை என்ற வாதத்தை இந்நிகழ்வு
தவிடுபொடியாக்குகிறது.
குற்றம் செய்தவர் தன் நாட்டினரானாலும் உடனே அவரை கைது செய்த
காவல்துறையும், இழப்பீடு வழங்கச் சொன்ன நீதித்துறையும் சட்டத்தைத்தான்
பார்க்கிறதே தவிர, பிறநாடுகளைப்போல் அறிந்தவர் அறியாதவர் என்று
பார்ப்பதில்லை என்பது மீண்டும் ஊர்ஜிதமாகிறது. அல்ஹம்துலில்லாஹ்.
இதே நேரத்தில் இதுபோன்ற ஒரு வழக்கு இந்தியாவில் தொடுக்கப்பட்டால் நிலைமை
என்ன என்பதையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அந்த வழக்கில்
தீர்ப்புச் சொல்ல குறைந்தது 20 வருடங்களாவது ஆகிவிடும். முத்துசாமிக்கு
நியாயம் கிடைத்து அந்தப்பணம் தொன்னூறாயிரம் கையில் கிடைப்பதற்குள் அவர்
குறைந்தது சில லட்சங்களாவது வழக்கு செலவிற்காக செலவிட வேண்டியது வரும்.
அவ்வளவு பணம் செலவழித்தாலும் தீர்ப்பு அவருக்கு சாதகமாக வருமா என்பதும்
கேள்விக்குறிதான்.
எதிராளியிடம் பணத்தை வாங்கிக்கொண்டு காவல்துறையும், நீதித்துறையும் தனது
இஷ்ட்டத்திற்கு சட்டத்தை வளைத்திருக்கும். இந்த நாட்டில் இதுதான்
நடந்திருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.
ஆனால் சவூதியிலோ துரிதமாக செயல்பட்ட நீதிமன்றம் நியாயமான முறையில்
தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுபோன்ற செய்திகளை நம் ஊர் ஊடகங்கள்
வெளியிடுவார்களா? நிச்சயம் வெளியிடமாட்டார்கள். இந்நிலையை ஊடகங்கள்
மாற்றிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்த நாடு உருப்படும்.
சவூதி அரேபியாவில் இந்த அளவிற்கு நீதியான முறையில் தீர்ப்பு
வழங்கப்பட்டு வரும் நிலையில் இங்குள்ள ஊடகங்கள் எந்த அளவிற்கு
விஷக்கருத்தை பரப்புகின்றார்கள் என்பதற்கு சமீபத்தில் ஊடகங்கள் வெளியிட்ட
ஒரு செய்தியை உதாரணமாகக் கூறலாம்.
அந்த செய்தி இதோ :
·         பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த குற்றவாளியின், மரண தண்டனையை
ரத்து செய்ய, ஆறு கோடி ரூபாய் அளிக்கும்படி, சவுதி அரேபிய அரசு நிபந்தனை”
என்றும், “மரண தண்டனையை ரத்து செய்ய ரூ.6 கோடி கேட்கும் சவுதி அரசு”
என்றும் விஷ்மத்தனமாக தலைப்பிட்டு செய்தி வெளியிடுகின்றார்கள்.
·         அந்தச் செய்தியில், “பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்
ஜோஸ்லிட்டோ சபன்டா. சூடான் நாட்டைச் சேர்ந்த நிலசுவான்தாரரை, 2009ம்
ஆண்டில், தகராறின்போது, கொன்று விட்டார். சபன்டாவின் தலையைத் துண்டித்து,
மரண தண்டனை நிறைவேற்றும் படி, கோர்ட் தீர்ப்பு கூறியது.
·         பிலிப்பைன்ஸ் அதிபர், பெனிக்னோ அகினோவின் வேண்டுகோளின் படி,
சவுதி அரசு, சபன்டாவின் மரண தண்டனையை நிறுத்தி வைத்தது. கொலையானவரின்
குடும்பத்தாருக்கு, ஆறு கோடி ரூபாய் அளிக்க வேண்டும், என்ற நிபந்தனை
விதிக்கப்பட்டது;
·         நான்கு மாத காலம், சவுதி அரசு இந்த தொகையை ஒப்படைக்க அவகாசம்
அளித்துள்ளது.
·         மேற்கண்ட செய்தியை படிப்பவர்களது உள்ளத்தில் என்ன சிந்தனை
எழும்? ரிசானா என்ற அப்பாவி(?) பெண்ணை மன்னித்து விடச் சொல்லி இலங்கை
அதிபர் உட்பட அனைவரும் கெஞ்சிய போது மனம் இரங்காத சவூதி அரசாங்கம்
பிலிப்பைன்ஸ் நாட்டினருக்கு மன்னிப்பு அளித்து பணம் கேட்கின்றதே! இது
எவ்வளவு பெரிய அநியாயம் என்ற எண்ணம் எழுமா இல்லையா?
·         ஆனால் இந்த சம்பவத்தின் உண்மை நிலவரம் என்ன?
·         கொலை செய்தவரை மன்னித்துவிடும் அதிகாரம் சவூதி மன்னருக்கு உள்ளதா?
·         அவர் நினைத்த தொகையை பெற்றுக் கொண்டு யாரை வேண்டுமானாலும்
மன்னித்து விடலாமா?
·         பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் என்ன சொல்கின்றார்கள்?
என்ற நமது உள்ளத்தில் எழும் கேள்விகளுக்கெல்லாம் இந்த சம்பவம் குறித்து
அரபு நாட்டு ஊடகங்கள் முழுமையாக வெளியிட்ட செய்திகளில் நமக்கு உண்மை
தெரியவருகின்றது.
அதாவது, நடந்த சம்பவம் என்னவென்றால், ஜோசலிட்டோ சபன்டா என்ற
பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த சவூதியில் கட்டடப் பணி புரிந்த நபர்,
தற்போது சவூதியின் ஹெயில் நகரில் உள்ள சிறையில் உள்ளார். கடந்த 2009ஆம்
ஆண்டு சூடான் நாட்டைச் சேர்ந்த சாலே இமாம் இப்ராஹிம் என்பவரை வீட்டு
வாடகை குறித்த பிரச்சனையில் சுத்தியலால் அடித்து கொலை செய்தார்.
2012 நவம்பர் 14 – அன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டிய தேதியாக
நிர்ணயிக்கப்பட்ட நிலையில், கொல்லப்பட்ட சூடானியின் குடும்பத்தினர்,
சவூதி அரசின் வேண்டுகோளை ஏற்று, கொலை செய்தவருக்கு மன்னிப்பளிக்கின்றோம்
என்று சொல்லி, கொலைக்கு ஈடாக 50 இலட்சம்  சவூதி  ரியால்களை நஷ்ட ஈட்டுத்
தொகையாக கேட்டுள்ளனர். அதாவது இந்திய மதிப்பிற்கு ரூபாய் ஏழரை கோடி. இது
அதிகமாக உள்ளது என்று சவூதி அரசர் பாதிக்கப்பட்டவர்களது
குடும்பத்தினரிடம் கோரிக்கை வைக்க தாங்கள் கேட்ட 50 லட்சம்
ரியாலிலிருந்து இறங்கி வந்து, 40 இலட்சம் சவூதி ரியாலாக இழப்பீட்டுத்
தொகையை குறைத்துக் கொண்டனர். அதாவது இந்தியப் பணம் ரூபாய் 6கோடி மட்டும்.
·         சவூதி மன்னர் அப்துல்லாஹ் அவர்களும், இழப்பீட்டுத் தொகையை
திரட்ட மேலும் 4 மாதங்கள் கால அவகாசம் கொடுக்க உத்தரவிட்டார். ஆகையால்,
இவருக்கு இன்னும் மரண தண்டனை நிறைவேற்றப்பட வில்லை.
·         பிலிப்பைன்ஸ் அரசாங்கமும், பல பிலிப்பைன்ஸ் சமூக அமைப்புகளும்,
கொலைக்குற்றவாளியும் அரசர் அப்துல்லாஹ்விற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
·         பிலிப்பைன்ஸ் துணை ஜனாதிபதி ஜெஜோமர் பினாய் அவர்கள் இதற்கான
நிதி திரட்டுதலில் ஈடுபட்டுள்ளார்.
·         நஷ்ட ஈட்டுத்தொகையை ஒப்படைக்க இவருக்கு வழங்கப்பட்ட  காலக்கெடு
மார்ச் 12- 2013. அவகாசம் கொடுத்த தேதிக்குள் அவர்களால் பணத்தைத் திரட்ட
இயலவில்லை. எனவே அவர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று பாதிக்கப்பட்ட
குடும்பத்தினரின் அனுமதியுடன் இந்தக் காலக்கெடுவை ஜூன் 8ஆம் தேதி வரை
தள்ளி வைத்து சவூதி அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.
இதுதான் உண்மைச் செய்தி. உண்மை நிலை இப்படி இருக்கும்போது தங்களது
இஷ்ட்டத்திற்கு சவூதி அரசு நினைத்தவரை தண்டிக்கின்றது; நினைத்தவரை
மன்னிக்கின்றது என்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும் விதமாக இவர்கள் விஷம்
கலந்து விஷயத்தை விளக்குகின்றார்கள் என்றால் இவர்களது நீதி நேர்மையை
என்னவென்பது?
இதுபோன்றுதான் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டு அவதூறுகளை பரப்பி வருகின்றனர்.
இந்தச் செய்தியை எந்த ஊடகமாவது வெளியிட்டார்களா?
ரிசானா விவகாரத்தில் சவூதி அரேபிய அரசாங்கம் தவறான தீர்ப்பு சொன்னதாக
குய்யோ முறையோ என்று கத்திய ஊடகங்கள் அநியாயமான முறையிலும்,
அடாவடித்தனமாகவும் முஸ்லிம்கள் மீது அவதூறுகளை அள்ளி வீசின.
அதே நேரத்தில் சவூதியில் நடந்த மற்றுமொரு கொலை வழக்கு சம்பந்தமாக சவூதி
நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக் குறித்து நமது ஊர் ஊடகங்கள் மூச்சுக் கூட
விடவில்லை.
இதோ அந்த செய்தி :
சவூதியில் பணிபுரியும் இந்தோனேஷியா நாட்டைச் சேர்ந்த பெண் வீட்டு
வேலையாள் ஒருவர், தான் வேலை செய்யும் வீட்டில் மிஷாரி என்ற 3 மாத சவூதி
குழந்தையை விஷம் வைத்துக் கொன்றதாகத் தொடரப்பட்ட வழக்கில் இருந்து,
தம்மாம் பொது நீதிமன்றத்தால் கடந்த 12.02.2013 அன்று விடுதலை
செய்யப்பட்டுள்ளார்.
குழந்தையின் இறந்த பிறகான மருத்துவ அறிக்கையும், இறப்பதற்கு முன்பான
குழந்தையின் மருத்துவ அறிக்கையும், குழந்தை விஷம் கொடுக்கப்பட்டு
இறக்கவில்லை என நிரூபிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது. குழந்தைக்கு இருந்த
ஒரு வகையான மரபணு நோயே இறப்பிற்கு காரணம் என நீதி மன்றம் கூறியது.
இத்தீர்ப்பின் போது, குற்றம் சாட்டப்பட்ட பெண்ணின் வழக்குரைஞர்,
குழந்தையின் தந்தை மற்றும் இந்தோனேஷியா தூதரக மற்றும் மனித உரிமை ஆணையப்
பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
அதாவது சவூதியைச் சேர்ந்த ஒரு குழந்தை இறந்துவிடுகின்றது.
இந்தோனேஷியாவைச் சேர்ந்த வீட்டு வேலைக்கு வந்த பெண்மணிதான் அந்தக்
குழந்தையை கொலை செய்தார் என்று வழக்குத் தொடுக்கப்படுகின்றது.
சவூதி நீதிமன்றம் இறந்த குழந்தை சவூதி நாட்டுக் குழந்தையா அல்லது
இந்தோனேஷியக் குழந்தையா என்று பார்க்கவில்லை. குழந்தையின் மரணம் கொலையா
என்பதை மட்டும்தான் ஆய்வு செய்துள்ளது. குழந்தைக்கு இருந்த மரபணு
நோய்தான் அந்தக் குழந்தை இறப்பதற்குக் காரணம் என்ற உண்மையை மருத்துவச்
சான்றிதழ்கள் மூலம் உறுதி செய்து குற்றம்சாட்டப்பட்ட இந்தோனேஷியப்
பெண்மணியை விடுதலை செய்துள்ளது தம்மாம் நீதிமன்றம். இந்தச் செய்தி
குறித்து எந்த ஊடகமும் மூச்சு கூட விடவில்லை. இதை எழுதினால் சவூதி
அரசாங்கம் நீதியான முறையில் தீர்ப்பு வழங்குகின்றது என்ற உண்மை உலகுக்கு
தெரிந்துவிடும் என்பதால்தான் அயோக்கிய ஊடகங்கள் திட்டமிட்டு இதுபோன்ற
செய்திகளை மூடி மறைத்துவிட்டன. முஸ்லிம்கள் விஷயத்தில் இவர்கள்
கட்டிக்காத்து வரும் நீதி இதுதான்.
thanks to  - tntj.net
0 comments

குஜராத்தின் சர்வாதிகாரியா மோடி?


லோக் ஆயுக்தா என்றால் நமெக்கெல்லாம் தெரியும், தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள், அது ஊழலுக்கு எதிராக விசாரணைசெய்யும் ஒரு மாநில நீதியமைப்பாகும்.
லோக் ஆயுக்தாவின் சட்டப்படி புதிய லோக் ஆயுக்தா குழுவுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்து நியமிக்கும் அதிகாரம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மாநில ஆளுநர் வசம் இருந்தது. இதன் அடிப்படையில்தான் அனைத்து மாநிலங்களிலும் லோக் ஆயுக்தா செயல்பட்டு வருகிறது. 
ஆனால் குஜராத் முதல்வர் பயங்கரவாதி மோடி, மாநில அரசியல்வாதிகளின் ஊழல்கள் குறித்து விசாரிக்கும் லோக் ஆயுக்தா குழுவை நியமிக்க மறுத்து வந்தார். இதனால் கடுப்பான மாநில ஆளுநர் கமலா நீதிபதி R.மேத்தா என்பவரை லோக் ஆயுக்தவாக  நியமித்தார். இதை  எதிர்த்து மோடியின் மாநில அரசு உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்தது. 
உயர் நீதி மற்றும் உச்ச நீதிமன்றங்களால் அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும் லோக் ஆயுக்தா நியமனம் தொடர்பாக ஆளுநர் மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்தே இறுதியானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை மதிக்காத மோடி சர்வாதிகாரி போல் தன் ஊழல்கள் வெளிவந்து விடகூடாது என்று தன்னை காப்பற்றி கொள்ள தானே ஒரு புதிய மசோதாவை சட்ட மன்றத்தில் அறிமுகம் செய்துள்ளார்.   
மோடி கொண்டு வந்த போலியான புதிய மசோதாவின் படி மாநில ஆளுநர் மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரின் அதிகாரம் பிடுங்கப்பட்டு அது மாநில அரசின் கைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதவாது இனி லோக் ஆயுக்தா நியமனங்களை அவர்கள்செய்ய முடியாது. இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால் இந்த புதிய  மசோதாவின்படி எந்த அதிகாரிக்கும் லோக் ஆயுக்தா விசாரணை வரம்பில் இருந்து விதி விலக்கு அளிக்க மாநில அரசுக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது.
மேலும், லோக் ஆயுக்தா வழக்கு விசாரணை தொடர்பாக எவராவது பத்திரிகையில் செய்தி வெளியிட்டாலோ அல்லது பொதுமக்களுக்கு தெரிவித்தாலோ 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கவும் இந்த புதிய மசோதாவில் வகை செய்யப்பட்டுள்ளது. மாநில அரசின் ஊழல் மற்றும் மொள்ளமாரிதனத்தை வெளிப்படுத்தவே லோக் ஆயுக்தா அமைப்பு ஏற்ப்படுத்தப்பட்டது. ஆனால் அதை முற்றிலும் மாற்றி அமைத்து ஒரு சர்வாதிகாரி போல செயல்பட்டுள்ளார் மோடி. குஜராத்தை பொறுத்தவரையில் லோக் ஆயுக்தா செத்த பாம்பு மாதிரி.
நன்றி - சிந்திக்கவும் 
0 comments

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger