Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label மத்ஹப் குப்பைகள். Show all posts
Showing posts with label மத்ஹப் குப்பைகள். Show all posts

இமாம்களே கூறுவதை கேளுங்கள் !!


தங்களை பின்பற்றினால் வழிகேடு !! - இமாம்களே கூறுவதை கேளுங்கள் !!!

  1. இமாம் ஷாபி
  2. இமாம் அபூஹனீபா
  3. இமாம் மாலிக்
  4. இமாம் அஹ்மது இப்னு ஹன்பல்  
இமாம் ஷாபி அவர்கள் கூறுகின்றார்கள்:

‘அல்குர்ஆனையும் ஹதீஸையுமே பின்பற்றுங்கள். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் சொல்லைத் தவிர வேறு எந்த நபரின் சொல்லும் மார்க்கத்திற்கு ஆதாரம் கிடையாது. யாரையும் கண்மூடிப்பின்பற்றாதீர்கள்.’ (நூல்: ஸலாத்துந்நபி பக்கம் 21)’எனது நூலில் அழ்ழாஹ்;வின் தூதர்(ஸல்) அவர்களின் வழிமுறைக்கு மாற்றமான(சட்டத்)தைக் கண்டால் அல்லாஹ் வின் தூதழ்(ஸல்) அவர்களின் வழிமுறையையே (மக்க ளிடம்) சொல்லுங்கள். என் சொல்லை விட்டு விடுங்கள்.’(நூல்: அல்மஜ்முவு (நவவி) பாகம்-01, பக்கம்-63)
இமாம் அபூஹனீபா அவர்கள் கூறுகின்றார்கள்:

‘ஒவ்வொரு புதிய வி’யத்தையும் விட்டுவிடுங்கள். அவைகள் பித்அத்கள் ஆகும். எங்களை கண்மூடிப்பின்பற் றாதீர்கள். அல்குர்ஆனையும், ஹதீஸையுமே பின்பற் றுங்கள்.’ (நூல்: மீஸானுல் குப்ரா பாகம்-01, பக்கம்-58 )
‘அல்லாஹ்வுடைய வேதத்திற்கும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறைக்கும் மாற்றமாக நான் ஒன்றைச் சொன்னால் என்சொல்லை விட்டுவிடுங்கள். அல்குர்ஆனையும், ஹதீஸையுமே பின்பற்றுங்கள்.’ (நூல்: ஈகாழுல் ஹிமம், பக்கம்-50)
‘என்னுடைய ஆதாரத்தை அறியாதவன், என்சொல்லைக் கொண்டு மார்க்கத்தீர்ப்பு அளிப்பது ஹராம்.’ (நூல்: மீஸான் ‘ஃரானி பாகம்-01, பக்கம்-55)
‘ஓர் ஆதாரப்பூர்வமான நபிமொழி கிடைத்தால் எனது வழிமுறைக்கு மாற்றமாயிருந்தாலும் அதனை (நபிமொழி யை)யே பின்பற்றுங்கள்.’ (நூல்: ஆலம்கிரியின் முன்னுரை பாகம்-01, பக்கம்-12)
இமாம் மாலிக் அவர்கள் கூறுகின்றார்கள்:

நான் சிலவேளைகளில் சரியாகவும், சிலவேளைகளில் பிழையாகவும் முடிவெடுக்ககூடிய ஒரு மனிதன். எனது முடிவுகளை நீங்களும் ஆராயுங்கள். அல்குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் உட்பட்டவைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அல்குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் மாற்றமானவைகளை விட்டுவிடுங்கள்.’ (நூல்: ஈகாழுல் ஹிமம், பக்கம் 62)
இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் அவர்கள் கூறுகின்றார்கள்.
‘ஆதாரபூர்வமான நபிமொழிகளையே பின்பற்றுங்கள். யார் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் ஹதீஸ்களை விட்டுவிட்டு மற்றவர்களின் அபிப்பிராயங்களை பின்பற்று கின்றார்களோ அவர்கள் அழிவின் விளிம்பில்தான் இருக்கின்றார்கள்.’ (நூல்: இப்னுல்கய்யிம் பாகம் 02, பக்கம் 302) ‘என்னையோ, மாலிக், ‘hபிஈ, அவ்ஸாயி, ஸவ்ரி போன்ற இமாம்களையோ பின்பற்றாதீர்கள். அவர்கள் புரிந்து கொண்டதி(அல்குர்ஆன், அல்ஹதீஸ்)லிருந்து நீங்களும் புரிந்துகொள்ளுங்கள்!’(நூல்: ஈகாழுல் ஹிமம் பக்கம் 113)

நன்றி - உண்மைகள் 
0 comments

அசிங்கத்தின் மொத்த உருவம்! மத்ஹப்!!=பாகம்-03

 13. தொழுகையா? விளையாட்டா?
 14. தொழுகையில் பைபிள் ஓதலாமாம்!
 15. குழந்தைகளைத் திருடலாம்.
 16. இப்படியும் திருடலாம்
 17. விபச்சாரத்தை அனுமதிக்கும் மத்ஹபு

13. தொழுகையா? விளையாட்டா?

நீ லுஹர் தொழு! உனக்கு ஒரு தங்கக் காசு தருகிறேன் என்று ஒரு மனிதரிடம் கூறப்படுகிறது. அவர் அதே நிய்யத்தில் லி நோக்கத்தில் தொழுகிறார். இவரது தொழுகை செல்லும் என்றே கூற வேண்டும். ஆனால் தங்கக் காசை அவருக்குக் கொடுக்க வேண்டியதில்லை.
துர்ருல் முக்தார் பாகம் 1, பக்கம் 223


14. தொழுகையில் பைபிள் ஓதலாமாம்!

தொழுகையில் பாரசீக மொழியில் ஓதினால் அல்லது தவ்ராத் இஞ்சீலை (பைபிளை) ஓதினால் அது கதைப் பகுதியாக இருந்தால் தொழுகை பாழாகிவிடும். போதனைகளாக இருந்தால் தொழுகை பாழாகாது.
(துர்ருல் முக்தர், பாகம் 1, பக்கம் 359)



15. குழந்தைகளைத் திருடலாம்.

நகைகள் அணிந்துள்ள குழந்தையை (நகையுடன்) யாரேனும் திருடிச் சென்றால் அவனது கைகளைத் துண்டிக்கக் கூடாது.
(ஹிதாயா பாகம் 1, பக்கம் 540)



16. இப்படியும் திருடலாம்


ஒருவன் மற்றவரின் வீட்டில் துவாரமிட்டு அதன் வழியாக எதையேனும் எடுத்தால் அவனது கையைத் துண்டிக்கக் கூடாது.
(ஹிதாயா பாகம் 1, பக்கம் 546)



17. விபச்சாரத்தை அனுமதிக்கும் மத்ஹபு


விபச்சாரம் செய்வதற்காக ஒரு பெண்ணை வாடகைக்குப் பேசி அவளுடன் விபச்சாரம் செய்தால் அபூஹனீபாவின் கருத்துப்படி அவனுக்குத் தண்டனை இல்லை.
கன்ஸுத்தகாயிக், பாகம்லி1, பக்.184
காசு கொடுக்காமல் ஓசியாக விபச்சாரம் செய்வது தான் கூடாது. காசு கொடுத்து விட்டால் அதற்குத் தண்டனை இல்லை

இன்னும் ஏராளம் ஏராளம்...


இன்னுமா இந்த மத்ஹபு சாக்கடையை தூக்கி பிடிக்கிறீர்கள்??

நன்றி - உண்மைகள் 
0 comments

அசிங்கத்தின் மொத்த உருவம்! மத்ஹப்!!=பாகம்-02

 7. விற்கக் கூடாதவைகளை பிறர் மூலம் விற்கலாம்
 8. கற்பனைக் கதைகள்
 9. ஆபாசக் களஞ்சியம் 
10. கோமாளிக் கூத்து
11. செத்த பிணத்தில் சூப் போட்டு குடிக்கலாமாம்
12.மூத்திர வைத்தியம்


7. விற்கக் கூடாதவைகளை பிறர் மூலம் விற்கலாம்

ஒரு முஸ்லி ம் சாராயத்தை வாங்குமாறு அல்லது விற்குமாறு கிறித்தவருக்குக் கட்டளையிடுகிறார். அந்தக் கிறித்தவரும் அதைச் செய்கிறார். இது அபூஹனீபா அவர்களின் கருத்துப்படி ஆகுமானதாகும்.
(ஹிதாயா பாகம் 2, பக்கம் 41)


8. கற்பனைக் கதைகள்

அபூஹனீபா இஷாவுக்கு செய்த உளூவின் மூலம் பஜ்ரு தொழுதார். இவ்வாறு நாற்பது வருடங்கள் லி (அதாவது 15 ஆயிரம் நாட்கள்) லி தொழுதிருக்கின்றார். ஐம்பத்தி ஐந்து தடவை ஹஜ் செய்திருக்கின்றார். தமது இறைவனை நூறு தடவை கனவில் பார்த்திருக்கிறார்.
துர்ருல் முக்தார் பாகம் 1, பக்கம் 38

அபூஹனீபா அவர்கள் தமது கடைசி ஹஜ்ஜின் போது ஒரு இரவு கஅபாவின் காவலாளியிடம் கஅபாவிற்குள் நுழைய அனுமதி கேட்டார். அவரும் அனுமதி கொடுத்தார். உள்ளே நுழைந்து லி இரண்டு தூண்களுக்கிடையில் இடது காலை வலது கா ன் மீது வைத்துக் கொண்டு, வலது கா ல் நின்றார். இப்படியே பாதி குர்ஆனை ஓதி முடித்தார். பின்னர் ருகூவு செய்து ஸஜ்தா செய்தார். பின்னர் வலது காலை இடது கா ன் மீது வைத்துக் கொண்டு இடது கா ல் நின்றார். மீதி இருந்த பாதி குர்ஆனையும் ஓதி முடித்தார். ஸலாம் கொடுத்ததும் தம் இறைவனிடம் பின்வருமாறு உரையாடினார்.
என் இறைவா! உனது பலவீனமான இந்த அடியான் உன்னை வணங்க வேண்டிய விதத்தில் வணங்கவில்லை. ஆயினும் உன்னை அறிய வேண்டிய விதத்தில் அறிந்துள்ளான். எனவே எனது முழுமையான அறிவின் காரணமாக என் பணியில் ஏற்படும் குறைகளைப் பொறுத்துக் கொள் என்று அபூஹனீபா கூறினார்.
உடனே கஅபாவின் மூலையி ருந்து, ”அபூஹனீபாவே! நம்மை அறிய வேண்டிய விதத்தில் அறிந்து விட்டீர். அழகிய முறையில் பணியும் செய்து விட்டீர். எனவே உம்மையும் கியாம நாள் வரை உம்மைப் பின்பற்றுவோரையும் நான் மன்னித்து விட்டேன்” என்று ஓர் அசரீரி கேட்டது.
துர்ருல் முக்தார், பாகம் 1, பக்கம் 39


9. ஆபாசக் களஞ்சியம்

மிருகத்துடன் அல்லது செத்த பிணத்துடன் உடலுறவு கொண்டால் குளிப்பு கடமையில்லை. லி துர்ருல் முக்தார் பாகம் 1 பக்கம் 23

ஒருவன் தனது ஆணுறுப்பை தனது பின் துவாரத்தில் நுழைத்தால், விந்து வெளிப்படாவிட்டால் குளிப்பு கடமையில்லை. லி துர்ருல் முக்தார் பாகம் 1, பக்கம் 150


10. கோமாளிக் கூத்து


ஒருவர் உளூச் செய்யும்போது ஏதோ ஓர் உறுப்பைக் கழுவவில்லை. எந்த உறுப்பு என்று தெரியவில்லை. அப்படியானால் (இடது காலாகத் தான் அது இதுக்க வேண்டும். எனவே) இடது காலைக் கழுவ வேண்டும். ஏனெனில் அதுதான் கடைசிச் செயல்.
(துர்ருல் முக்தார் பாகம் 1, பக்கம் 51)


11. செத்த பிணத்தில் சூப் போட்டு குடிக்கலாமாம்

தாமாகச் செத்தவை ஹராம் என்று திருக்குர்ஆன் தெளிவாகக் கூறுகின்றது. அவை முழுமையாக ஹராம் என்பதில் சந்தேகமில்லை. தோலை மாத்திரம் பாடம் செய்து பயன்படுத்த நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்துள்ளனர். ஆனால் மத்ஹபு என்ன கூறுகின்றது?

செத்த பிராணிகளின் முடியும் அதன் எலும்பும் தூய்மையானவை.
ஹனபி மத்ஹபின் சட்ட நூலாகிய ஹிதாயா பாகம் 1, பக்கம் 41

செத்த ஆட்டின் எலும்பை சூப் போட்டு குடிக்கச் சொல்கிறார்களா? இந்தச் சட்டத்தை எங்கிருந்து எடுத்தார்கள்? ஷரீஅத் பேரவை விளக்கட்டும்.



12.மூத்திர வைத்தியம்

ஒருவருக்கு மூக்கில் இரத்தம் வடிந்தால் அல்ஹம்து அத்தியாயத்தை மூத்திரத்தினாலும் இரத்தத்தினாலும் நிவாரணம் நாடி நெற்றியிலும் மூக்கிலும் எழுதலாம். அதில் நிவாரணம் இருப்பதாக அறியப்பட்டால் இவ்வாறு செய்யலாம். ஆயினும் அவ்வாறு நிவாரணம் கிடைக்கும் என்று தகவல் இல்லை. (துர்ருல் முக்தார் லி பாகம் 1, பக்கம் 154)

தாகமாக இருப்பவர் மதுபானம் அருந்த அனுமதிக்கப் படுவது போல் வறுமை நேரத்தில் செத்த பிணத்தைச் சாப்பிட அனுமதிக்கப் படுவது போல்இதற்கும் அனுமதியளிக்கப் படும். இதுதான் பத்வா! (அதே நூல், அதே பக்கம்)

இன்ஷா அல்லாஹ் தொடரும் 

நன்றி - உண்மைகள் 
1 comments

அசிங்கத்தின் மொத்த உருவம்! மத்ஹப்!!=பாகம்-01


   1. கசையடிக்கு விசித்திரமான விளக்கம் 

           2 . அடுத்தவன் குழந்தை

          3.  இமாமின் தகுதிகள்:

          4. இந்தியாவில் ஜும்ஆ

          5. ஊரை அடித்து உலையில் போடலாம்

         6. விசித்திரமான ஆராய்ச்சி

1. கசையடிக்கு விசித்திரமான விளக்கம்
ஐம்பது குச்சிகளை ஒன்றாக இணைத்துக் கட்ட வேண்டும். ஐம்பது குச்சிகளும் அவனது மேனியில் படுமாறு இரண்டு தடவை குத்த வேண்டும். இவ்வாறு செய்தால் நூறு கசையடி அடித்ததாக ஆகிவிடும்.

2. அடுத்தவன் குழந்தை

ஒருவன் நான்கு ஆண்டுகள் மனைவியைப் பிரிந்து வாழ்ந்தாலும் அவள் கர்ப்பமுற்றால் அந்தக் குழந்தை அவனையே சேரும்.
(மஙானி பக்கம் 507)

3. இமாமின் தகுதிகள்:
அழகிய மனைவியை உடையவராக இமாம் இருக்க வேண்டும்
அவரது தலை பெரியதாகவும், உறுப்பு சிறியதாகவும் இருக்க வேண்டும். (துர்ருல் முக்தார்)


4. 
இந்தியாவில் ஜும்ஆ
மன்னரோ, மன்னரின் உத்தரவு பெற்றவரோ தவிர மற்றவர்கள் ஜும்ஆவை நடத்துவது செல்லாது.
ஹனபி மத்ஹபின் சட்டநூலான ஹிதாயா, முதல் பாகம், பக்கம் 168
பெரு நகரங்களில் தவிர மற்ற பகுதிகளில் ஜும்ஆ செல்லாது. எந்த ஊரில் இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்களை நிறைவேற்றும் அமீரும், நீதிபதியும் உள்ளாரோ அதுவே பெருநகரமாகும்.
(அதே நூல், அதே பாகம், அதே பக்கம்)

5. ஊரை அடித்து உலையில் போடலாம்

பொது வழியை விற்பதும், அன்பளிப்பாக வழங்குவதும் செல்லும்.
(ஹிதாயா பாகம் 2, பக்கம் 4)
ஒரு மனிதன் தனக்கு உரிமையானதைத்தான் விற்க முடியும் உரிமையில்லாத எதனையும் எவரும் விற்க முடியாது, அறிவுடைய எந்த மனிதரும் இதை ஏற்கமட்டார். ஆனால் ஹனபி மத்ஹபின் சட்ட நூல் விற்கலாம் எனக் கூறுகிறது,

6. விசித்திரமான ஆராய்ச்சி

ஹனபி மத்ஹபின் இமாம்களில் மூன்றாவது இடத்தை வகிக்கும் முஹம்மத் இமாமுடைய கருத்துப்படி யானை, பன்றியைப் போல் முழு நஜீஸாகும். இந்த விசித்திரமான சட்டம் ஹிதாயா பாகம் 2, பக்கம் 39ல் காணப்படுகிறது. இதற்கு என்ன ஆதாரம் என்பதை ஷரீஅத் பேரவை விளக்குமா?

இன்னுமா இந்த மத்ஹபு சாக்கடையை தூக்கி பிடிக்கிறீர்கள்??

இன்ஷா அல்லாஹ் தொடரும் 

நன்றி - உண்மைகள் 
0 comments

மாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்


குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டை மட்டுமே பின்பற்ற வேண்டிய முஸ்லிம் சமுதாயம் மத்ஹபு எனும் மாயையில் வீழ்ந்து கிடக்கிறது. 'மத்ஹபுகளும் குர்ஆன், ஹதீசுக்கு  உட்பட்டவை தான்; குர்ஆன், ஹதீஸிலிருந்து தொகுக்கப் பட்டவை தான்'' என்ற நம்பிக்கையே இதற்குக் காரணம். ஆனால் மத்ஹபுகளுக்கும் குர்ஆன், ஹதீசுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
மேலும் மத்ஹபு நூற்களில், ஒவ்வொரு மத்ஹபினரும் தங்கள் மத்ஹபைப் பற்றி உயர்த்தியும், மற்ற மத்ஹபுகளைத் தாழ்த்தியும் பல்வேறு கருத்துக்களைக் கூறியுள்ளனர். தங்கள் மத்ஹபு மீது வெறியை ஊட்டி, மக்களைத் தக்க வைத்துக் கொள்வது தான் இவர்களின் நோக்கம்.

மத்ஹபுகள் மீது எந்த அளவுக்கு வெறியூட்டப்பட்டு, மூளைச் சலவை செய்யப்படுகின்றது என்பதற்கு மத்ஹபு நூல்கள் தரும் வாக்குமூலத்தைப் பாருங்கள்!

யார் தமக்கும் அல்லாஹ்வுக்கும் இடையே அபூஹனீபாவை ஏற்படுத்திக் கொள்கிறாரோ அவர் அஞ்சத் தேவையில்லை என்று நான் நம்புகிறேன் என்று முஸாபிர் என்பார் கூறியுள்ளார். நூல்: துர்ருல் முக்தார் பாகம்: 1, பக்கம்: 48

அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) போன்று சுவனத்தைக் கொண்டு சுபச் செய்தி சொல்லப்பட்ட நபித்தோழர்கள் எல்லாம் தங்களின் நிலை என்னவாகுமோ? தங்களிடம் முனாஃபிக் தனம் இருக்குமோ என்று அஞ்சியுள்ளனர். தங்களுக்கும், அல்லாஹ்வுக்கும் இடையில் நபி (ஸல்) அவர்களை நிறுத்திக் கொள்ளலாம் என்று இறுமாப்புடன் அவர்கள் நடந்து கொண்டதில்லை.

ஆனால் அபூஹனீபாவைக் கேடயமாக ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் எதற்கும் அஞ்சத் தேவையில்லையாம். மத்ஹபு வெறி இவர்களை எங்கே கொண்டு செல்கிறது என்பதற்கு இதை விட வேறு சான்று தேவையில்லை.

அபூஹனீபா நல்லவராக இருக்கலாம்; அவருக்கு அல்லாஹ் மறுமையில் நல்ல அந்தஸ்தை அளிக்க வேண்டும் என்று நாமும் பிரார்த்திக்கிறோம். ஆனால் 'அபூஹனீஃபா, அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்டு விட்டார்; அவர் இறைவனின் அன்பைப் பெற்று விட்டார்'' என்று உறுதி கூற முடியுமா?

மறுமையில் அவரைப் பற்றி அல்லாஹ் தீர்ப்பளிப்பதற்கு முன் அந்தத் தீர்ப்பை நாம் வழங்க முடியுமா?

அபூஹனீஃபா அவர்களின் நிலையே என்னவென்று தெரியாத போது, அல்லாஹ்வுக்கும் தமக்குமிடையே அவரைக் கேடயமாகப் பயன்படுத்துவோம் என்று கூறுவோர் கொஞ்சமாவது அல்லாஹ்வை அஞ்ச வேண்டாமா?

இவர்களின் மத்ஹபு வெறிக்கு உதாரணமாக, அதே நூலில் காணப்படும் இன்னொரு தத்துவத்தைப் பாருங்கள்.

மறுமையில் இறைவனின் திருப்தியைப் பெற நான் தயாரித்து வைத்துள்ள முஹம்மதின் மார்க்கமும், அபூஹனீபாவின் மத்ஹபை நான் நம்புவதும் எனக்குப் போதுமாகும்.

நபி (ஸல்) அவர்களின் மார்க்கம் இவர்களுக்குப் போதாதாம். அத்துடன் அபூஹனீபாவின் மத்ஹபையும் நம்பியாக வேண்டுமாம். நபித்தோழர்களில் யாரும் இந்த மத்ஹபுகளைப் பற்றி அறிந்திருக்கவில்லை. அவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களின் மார்க்கத்தை மட்டுமே மறுமைக்காகத் தயாரித்து வைத்திருந்தனர். அவர்களெல்லாம் இறைவனுடைய திருப்தியைப் பெறுவது சாத்தியமில்லை என்கிறது இந்த நூல்.

முஹம்மது (ஸல்) அவர்களது மார்க்கத்துடன் இன்னொரு மார்க்கத்தையும் கற்பனை செய்வதன் மூலம் அபூஹனீபாவை அல்லாஹ்வின் தூதருக்குச் சமமாக ஆக்கி விட்டனர்.

இத்துடன் நிற்கவில்லை! அல்லாஹ்வுடைய தூதரை விடவும் அபூஹனீபாவை உயர்வானவராகச் சித்தரித்துக் காட்டும் திமிரான வாசகங்களையும் மத்ஹபு நூற்களில் நாம் காணலாம்.

'ஆதம் (அலை) என் மூலம் பெருமையடைந்தார். நான் எனது சமுதாயத்தில் தோன்றும் ஒரு மனிதர் மூலம் பெருமையடைவேன். அவரது இயற்பெயர் நுஃமான். அவரது சிறப்புப் பெயர் அபூஹனீபா. அவர் எனது சமுதாயத்தின் விளக்காவார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இவ்வாறு துர்ருல் முக்தாரில் கூறப்பட்டுள்ளது.

இதில் அடங்கியுள்ள அபத்தங்களைப் பார்ப்போம்.


'என் மீது எவன் வேண்டுமென்றே இட்டுக்கட்டிக் கூறுவானோ அவன் நரகத்தில் தனது இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி 108, 1291

நபி (ஸல்) அவர்களின் இந்த எச்சரிக்கையை அலட்சியம் செய்து விட்டு, நபியவர்கள் மீது இட்டுக்கட்டும் துணிவை இந்த மத்ஹபு வெறி ஏற்படுத்தி விட்டது.

நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினால் அதை அறிவித்தவர் யார்? அதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களா? இது இடம் பெற்றுள்ள ஹதீஸ் நூல் எது? இப்படி எந்த விபரமும் இல்லை.

இப்னுல் ஜவ்ஸீ போன்றவர்கள், 'இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி''என்று தக்க காரணத்துடன் இனம் காட்டியுள்ளனர்.

'இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்று இப்னுல் ஜவ்ஸீ கூறுவது மத்ஹபு வெறியாகும்'' என்று துர்ருல் முக்தாரில் தொடர்ந்து கூறப் பட்டுள்ளது. மத்ஹபு வெறியில் ஊறிப் போனவர்கள், அதைச் சுட்டிக் காட்டுபவர்களுக்கே அந்தப் பட்டத்தைச் சூட்டுவது கொடுமையிலும் கொடுமை!

அறிவிப்பாளர் தொடரை விட்டு விடுவோம். இதன் கருத்தைச் சிந்தித்தால் கூட இது நபியவர்களை மட்டம் தட்டுவதற்காகச் செய்யப்பட்ட சூழ்ச்சி என்பதை அறிய முடியும்.

ஆதம் (அலை) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் மூலம் பெருமையடைந்தார்கள் என்றால் அதை நாம் ஏற்றுக் கொள்ளலாம். ஏனென்றால் ஆதம் (அலை) அவர்கள் பெருமையடைவதற்குரிய எல்லாத் தகுதிகளும் நபி (ஸல்) அவர்களுக்கு உண்டு என்று கூறலாம். ஆனால் அபூஹனீபா மூலமாக நபி (ஸல்) அவர்கள் பெருமையடைவார்கள் என்றால், நபி (ஸல்) அவர்களை விட அபூஹனீபா சிறப்புக்குரியவரா?

இந்த மத்ஹபை ஏற்றால், இந்த நூலில் எழுதப்பட்ட சட்டங்களை நம்பினால், நபி (ஸல்) அவர்களை விட அபூஹனீபா சிறந்தவர் என்று ஈமான் கொண்டதாக ஆகாதா? என்பதைச் சிந்திக்க வேண்டும்.

மத்ஹபை உருவாக்கியவர்களின் நோக்கம் இது தான். இஸ்லாத்தின் எதிரிகள் செய்த சூழ்ச்சியே மத்ஹபுகள் என்பதற்கு இது தெளிவான சான்றாகும்.

நபி (ஸல்) அவர்களை விட அபூஹனீபா சிறந்தவர் என்று போதிக்கப்பட்டு, மூளைச் சலவை செய்யப்பட்டதால் தான் இதைப் பயின்ற மவ்லவிமார்கள், மத்ஹபு வெறியிலிருந்து விடுபட மறுக்கிறார்கள். தெளிவான நபிவழியை எடுத்துக் காட்டிய பின்னரும் அதற்கு முரணான மத்ஹபுச் சட்டங்களில் மூழ்கிக் கிடக்கின்றனர்.

ஈமானுக்கு வேட்டு வைக்கும் மத்ஹபு மாயையிலிருந்து அல்லாஹ் நம்மைப் பாதுகாக்க வேண்டும்.
                                        -  நன்றி சகோதரர் அபு முஹம்மத்              
நன்றி - உண்மைகள்                 
0 comments

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger