Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label செய்தி. Show all posts
Showing posts with label செய்தி. Show all posts

பயங்கர வெடிமருந்து லாரி கடத்தலும் ஊடக நேர்மையும்!(செய்தி விமர்சனம்)

ஊடகம்ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருச்சாளியாக்கி, பெருச்சாளியைப் பெருமாளாக்கி"என்ற கிராமப்புற சொல்வடைக்குப் பொருத்தமானவை செய்தி ஊடகங்கள் எனும் அளவுக்கு நம்நாட்டுச்செய்திகளின் தரம் தாழ்ந்துவிட்டது.

பெரும்பாலான ஊடகங்கள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடனேயே செயல்பட்டு வருகின்றன. சாதி, மத, சிந்தாந்த ஆதரவு அல்லது அவற்றுக்கெதிரான கருத்துருவாக்கக் கருவிகளாகவே ஊடகங்கள் செயல்பட்டு வருகின்றன. கீழ்கண்ட செய்தியிலுள்ளவை மிகவும் அதிர்ச்சியளிக்கும் விடயம். எனினும், இதைச் செய்தியாக்கியுள்ள ஊடகங்களின் நேர்மையை அளவிடுவதற்கு இதன் உள்ளடக்கமே சாட்சி.

"லாரியை வழி மறித்து, ஐந்து டன் அமோனியம் நைட்ரேட் வெடிப்பொருட்களை கடத்திய வழக்கில், ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் நெடுஞ்சாலை நகரில், கிருஷ்ணா கெமிக்கல்ஸ் என்ற பெயரில், கோடீஸ்வரன் என்பவர், வெடி பொருட்களுக்கு, தேவையான மூலப் பொருளான, அமோனியம் நைட்ரேட் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்துக்கு, சீலநாயக்கன்பட்டியில், ஒரு குடோன் உள்ளது. குடோனில் இருந்து, 5 டன் அமோனியம் நைட்ரேட் மூட்டைகளை ஏற்றி, நேற்று முன்தினம் மாலை, கோவை, காரமடைக்கு, லாரி ஒன்று புறப்பட்டு சென்றது. லாரியை, ஈரோட்டை சேர்ந்த டிரைவர் அருண்குமார் ஓட்டி சென்றார். அவருடன், கெமிக்கல் நிறுவன பணியாளர் ராஜன் சென்றார்.

கொண்டலாம்பட்டி, பைபாஸ் அருகே, லாரி சென்று கொண்டிருந்தது. சிலர், லாரியை வழிமறித்தனர். போலீஸ் என்று அறிமுகம் செய்த கொண்ட அந்த கும்பல், உடையாப்பட்டி பைபாசுக்கு, லாரியை ஓட்டுமாறு கூறியது. உடையாப்பட்டியில், அருண்குமார், ராஜன் ஆகியோரை இறக்கிவிட்டு, லாரியை கடத்தி சென்று, பைபாஸ் ரோட்டின் ஒரு பகுதியில், 5 டன் அமோனியம் நைட்ரேட்டை இறக்கி கடத்தியது. லாரியை, சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ரோட்டில் நிறுத்திவிட்டு, கும்பல் தப்பி ஓடிவிட்டது. அருண்குமார், இது குறித்து, அன்னதானப்பட்டி போலீசாரிடம் புகார் கொடுத்தார். போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையில், கடத்தலில் ஈடுபட்டவர்கள், உடையாப்பட்டியில், பதுங்கியிருந்தது தெரிய வந்தது. கும்பலை, போலீசார் சுற்றி வளைத்தனர். கும்பலைச் சேர்ந்த ஏழு பேரையும், கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 5 டன் அமோனியம் நைட்ரேட் பறிமுதல் செய்யப்பட்டது.

சேலத்தில் வெடி மருந்து குடோன் வைத்திருக்கும் வேறு உரிமையாளர்களின், ஆலோசனைப்படி, கடத்தல் கும்பல் செயல்பட்டதா அல்லது வெளி மாநிலங்களுக்கு கடத்த முயற்சி செய்ததா என, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்."


மேற்கண்ட செய்தியை மேலோட்டமாகப் பார்த்தால் இந்தச் செய்தியில் உள்நோக்கம் எதுவுமிருப்பதாகத் தெரியவில்லை. எனினும், முழுதும் செய்தியை வாசித்தால் வெடிபொருட்கள் அடங்கிய லாரியைக் கடத்தியவர்கள் விபரம் இல்லை. ஏழுபேர் கொண்ட கும்பல் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

எத்தனை டன் வெடிமருந்து, கடத்தியவர்கள் எத்தனைபேர், எங்கு எப்படிக் கடத்தினார்கள் என்ற விபரங்களை எல்லாம் விரிவாக வெளியிட்டுள்ள அப்பத்திரிக்கையின் செய்தியாளர் மறந்தும் கடத்தியவர்களின் பெயரைக் குறிப்பிடவில்லை. இதுவே வெடிமருந்து லாரியைக் கடத்தியவர்கள் அனைவரும் அல்லது அவர்களுள் ஒருவனோ முஸ்லிமாக இருந்திருப்பின்  நாளிதழ்கள் எப்படியெல்லாம் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருக்கும்?

1) தமிழகத்தைத் தகர்க்கும் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் சதி முறியடிப்பு
2) வெடிமருந்து லாரியைக் கடத்தியவர்களுக்கு பெங்களூரு குண்டுவெடிப்பில் தொடர்பா?
3) லஸ்கரே தொய்பா இந்தியன் முஜாஹிதீன் தொடர்புக்கு ஆதாரம் 
4) சத்தீஸ்கர் நக்சல் தீவிரவாதிகளுக்கு உதவ தமிழக இஸ்லாமியத் தீவிரவாதிகள் திட்டமா?


நிச்சயம் வெடிமருந்து லாரியைக் கடத்தியவர்கள் முஸ்லிம்களாக இருந்திருந்தால் இவ்வாறுதான் சில ஊடகங்கள் தலைப்பிட்டு இஸ்லாமியர்கள்மீதான வன்மத்தைத்தீர்த்துக்கொண்டிருக்கும். காவல்துறையிடம் பிடி பட்டிருப்பவர்களின் சாதி/மதத்தைக் குறிப்பிட வேண்டும் என்பதன்று நோக்கம். குற்றவாளிகளின் பெயரை மட்டும் வைத்து செய்தியை பில்டப்செய்து ஒட்டுமொத்த சமூகத்தையே குற்றப்பரம்பரையாகச் சித்திரிக்கும் நேர்மையற்ற போக்கை ஆதிக்க வெறிகொண்ட பத்திரிக்கைகள் நிறுத்தவேண்டும் என்பதைச் சுட்டவே இவ்வாக்கம்.

- ஜாஃபர்

இந்நேரம் 
0 comments

நவாஸ் ஷெரீப் வெற்றி: மீண்டும் பாகிஸ்தானின் பிரதமர் ஆவாரா?


நவாஸ் ஷெரீப் வெற்றி: மீண்டும் பாகிஸ்தானின் பிரதமர் ஆவாரா?இஸ்லாமாபாத்: கடுமையான பாதுகாப்புடன் நடைபெற்ற பாகிஸ்தானின் பாராளுமன்றத் தேர்தலில் 75 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது.

தொடர்ந்து நடைபெற்ற ஓட்டு எண்ணிக்கையில், ஆரம்பம் முதலே ஆளும் கட்சி பெரும் பின்னைடைவை சந்தித்தது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான முஸ்லீம் லீக் (என்)  மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான கட்சியும் அதிக இடங்களைப் பெற்று முன்னணியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அதிக வாக்குகளைப் பெற்று சர்கோடா தொகுதியில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் பெஷாவர் முதல் தொகுதியில் இம்ரான் கான் ஆகியோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 272 பாராளுமன்ற இடங்களில் 100-க்கு மேற்பட்ட இடங்க்ளை நவாஸ் ஷெரீப்-ன் கட்சி கைபற்றும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே, தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிக இடங்களை  முஸ்லீம் லீக் (என்)  கட்சி கைபற்றும் பட்சத்தில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராக மீண்டும் பதவியேற்பாரா என்ற எதிர்பார்ப்பு பாகிஸ்தானில் எழுந்துள்ளது.

நன்றி -  இந்நேரம் 

0 comments

உண்மைக்கு கிடைத்த இன்னொரு வெற்றி...!


ஜெய்ப்பூரிலுள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் பொறியாளர் ரஷீத் ஹுசைன் என்பவர் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

2008 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் நாள் ஜெய்ப்பூரில் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. வழக்கம் போல் காவல்துறையினர் அப்பாவிகளைத் துன்புறுத்தத் தொடங்கினர்.

குண்டுவெடிப்புச் சம்பவத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாத பொறியாளர் ரஷீத் ஹுசைனையும் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று பத்து நாள்கள் காவலில் வைத்திருந்தனர்.

பிறகு அவர் மீது எந்த தவறும் இல்லை என்றுகூறி அவரை விடுதலை செய்து அனுப்பி விட்டனர்.

இந்தப் பத்துநாள்களுக்குள் இன்போசிஸ் நிறுவனம் எந்தவிதமான முன்னறிவிப்பும் தராமல் ரஷீதைப் பணியிலிருந்து நீக்கிவிட்டதாக அறிவித்தது.

ஆனால் ரஷீத் ஹுசைன் சும்மா உட்கார்ந்துவிடவில்லை.

2008 ஆகஸ்டில் அவர் இன்போசிஸ் நிறுவனத்துக்கு எதிராக லேபர் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். மூன்று மாதங்களுக்குப் பிறகு உயர்நீதிமன்றமும் ரஷீதுக்கு ஆதரவாகவே தீர்ப்பளித்தது.

இன்போசிஸ் நிறுவனம் ரஷீதுக்கு 20 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் முன்னிலையில் இதை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டதை அடுத்து, இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கில் ராஜஸ்தான் முஸ்லிம் அமைப்பும், ராஜஸ்தான் மாநில ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தும் முதல் நாளிலிருந்தே ரஷீதின் போராட்டத்துக்கு ஆதரவாக இருந்ததுடன் நீதிக்கான நெடும்பயணத்தில் முன் நின்று போராடின. வெற்றி பெற்றன.

“ ரஷீதுக்குக் கிடைத்துள்ள தீர்ப்பு இந்த விஷயத்தில் நல்ல முன்னேற்றம் ஆகும். அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீது இழைக்கப்படும் அநீதிகள் தடுத்து நிறுத்தப்படவேண்டும். தவறான நடவடிக்கை எடுக்கும் காவல்துறை அதிகாரிகளும் தண்டிக்கப்படவேண்டும்” என்று கூறுகிறார் ராஜஸ்தான் முஸ்லிம் அமைப்பின் தலைவரும் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த தேசியச் செயலாளருமான முஹம்மது சலீம் அவர்கள்.

முஸ்லிம் இளைஞர்கள் மீது பயங்கரவாத முத்திரை குத்தும் போக்கு இனியேனும் நிறுத்தப்படுமா?

நன்றி - வலையுகம் 

01-15 ஏப்ரல் 2013முன்
பக்கம்
பக்க
எண்
007அடுத்த
பக்கம்
 
Background
Background

0 comments

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger