சிங்கள மொழி பிரச்சாரத்தில் அந்நியப்பட்டுவிட்டோமா?

இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய பிரச்சினை இனவாதம் என்றால் அது மிகையாகாது. 

இனவாதத்தை விட்டும் முஸ்லிம்களை காப்பாற்றுவதற்காக பல தரப்பாரும் பலவிதங்களில் தங்கள் முயற்சிகளை செய்திக் கொண்டிருக்கின்றார்கள். இந்த முயற்சிகள் அனைத்தும் பெரும்பாலும் பிரச்சினைக்குறிய தற்கால தீர்வாகத்தான் ஆகுமே தவிர அவை நிரந்தரத் தீர்வுகளாக மாறாது.

அப்படியானால் இனவாதத்திற்கான நிரந்தரத் தீர்வு என்ன? என்ற கேள்வி எழுவது சகஜம்.
இன்று இலங்கை முஸ்லிம்கள் பல விதமான கேள்விகளை மாற்று மத சகோதரர்களிடமிருந்து சந்திக்கின்றார்கள்.
குறிப்பாக இஸ்லாம் பற்றிய விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்கள் எல்லாம் தாராளமாக முன்வைக்கப்படுகின்றன. இந்த குற்றச் சாட்டுக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கின்றது.
  • முஸ்லிம்கள் தாடி வைப்பது ஏன்?
  • சிங்கள மக்களுக்கு உணவளிக்கும் போது மூன்று முறை எச்சில் துப்பிவிட்டுத் தான் கொடுக்க வேண்டும் என்று குர்ஆன் சொல்கின்றதா?
  • பெண்கள் உடலை மறைத்து ஆடை அணிவது ஏன்?
  • முஸ்லிம் ஆண்கள் கத்னா செய்வது உடலை வருத்திக் கொள்வதாக ஆகாதா?
  • குர்ஆன் எல்லாக் காலத்திற்கும் பொருத்தமான ஒரு வேதம் தானா?
  • முஸ்லிம்களுக்கு மத்தியில் இத்தனை பிரிவுகள் ஏன்?
இப்படி எத்தனையோ விதமான கேள்விகள் முஸ்லிம் சமுதாயத்தை நோக்கி மாற்றுமத குறிப்பாக மாற்று மொழி பேசும் பௌத்த சகோதரர்களினால் முன்வைக்கப்படுகின்றது. இந்த கேள்விகளுக்கு பதிலளிப்பது யார்? இந்த மக்களின் மனநிலையை சரி செய்வது யார்?
மாற்று மொழி தஃவா இன்மை ஏற்படுத்திய விளைவுகள்.
மாற்று மொழியில் இஸ்லாமியப் பிரச்சாரத்தை சரியான முறையில் நாம் மேற்கொள்ளாத காரணத்தினால் இன்றைக்கு பல சிக்கள்களை எதிர்கொள்கின்றோம். குறிப்பாக இனவாதம் பேசுபவர்கள் இஸ்லாமியர்கள் மீது வைக்கும் போலி குற்றச்சாட்டுக்கள் கூட உண்மையாக இருக்குமோ என்று நம்பும் அளவுக்கு மாற்று மொழி பிரச்சாரத்தில் நாம் பின்தங்கி விட்டோம்.
இஸ்லாத்தை பின்பற்றாத முஸ்லிம்களை பாரம்பரிய முஸ்லிம்கள்; அவர்கள் செய்வதுதான் இஸ்லாம் என்றும், உண்மையில் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் பின்பற்றுபவர்கள் தீவிரவாதிகள்; இவர்கள் இஸ்லாத்தின் பேரால் மற்ற மக்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் என்ற ஓர் எண்ணமும் ஊட்டப்படுவதற்கு இது காரணமாக அமைந்திருக்கின்றது.
இந்நிலையை மாற்ற என்ன வழி?
உண்மையில் இன்றைய இலங்கை முஸ்லிம்கள் மீது கட்டாய தேவையாக இருப்பது மாற்று மத மக்கள் மத்தியிலும் தூய இஸ்லாத்தை பிரச்சாரம் செய்வதாகும். இதற்கு தேவையான வளங்களை நாம் உண்டாக்கிக் கொள்வதினூடாக இந்தப் பிரச்சாரத்தை செவ்வனே சரியான முறையில் முன்னெடுக்க முடியும்.
நமது செய்ய வேண்டியது என்ன?
சிங்கள மொழியில் பிரச்சாரம் செய்வதற்கு தகுதியான பேச்சாளர்களை உருவாக்குதல்.
சிங்கள மொழியில் எழுதுவதற்குத் தேவையான எழுத்தாளர்களை திட்டமிட்டு உருவாக்குதல்.
குர்ஆன் மற்றும் ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களின் மூலம் தெளிவான மார்க்கத்தை எத்திவைக்கும் சிந்தனா தரம் கொண்ட, இதய சுத்தியுடன் பாடுபடக் கூடியவர்களை அவர்களை கட்டமைத்தல்.
சிங்கள மொழியில் தூய இஸ்லாமிய கருத்துக்கள் அடங்கிய புத்தகங்கள் மற்றும் சி.டி க்களை வெளியிடுதல்.
சிங்கள சகோதரர்களின் மனங்களில் இடம் பிடிக்கும் இஸ்லாத்தின் தெளிவான கருத்துக்கள் அடங்கிய ஒரு பத்திரிக்கையை வெளியிடுதல். இது மாதாந்த, வாராந்த அல்லது நாளாந்த பத்திரிக்கையாக கூட இருக்கலாம்.
டி.வி மற்றும் வானொலிகளின் மூலம் சிங்கள மொழியிலான இஸ்லாமிய கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லுதல்.
போன்ற காரியங்களை நாம் திட்டமிட்டு முன்னெடுக்கும் போது இறைவனின் அருளினால் இஸ்லாமிய மார்க்கப் பிரச்சாரம் இலங்கை மண்ணில் சீராக முன்னெடுக்கப்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் சிங்கள மொழி பிரச்சாரங்கள்.
இறைவனின் அருளினால் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சிங்கள மொழியிலான தனது பிரச்சாரத்தை செவ்வனே நடை முறைப்படுத்தி வருகின்றது.
இது வரைக்கும் சுமார் 20 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் சிங்கள மொழியில் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ் மொழியில் சகோதரர் பி.ஜெ அவர்கள் எழுதிய புத்தகங்களின் மொழியாக்கங்களாக இவை காணப்படுகின்றன. தமிழ் மொழியில் பாரிய புரட்சியை உண்டாக்கிய இந்த புத்தகங்கள் சிங்கள மொழியிலும் பாரிய மாற்றங்களை உண்டாக்கி வருகின்றன.
அது போல் மாற்று மத அன்பர்களின் இஸ்லாம் பற்றிய சந்தேகங்களை தீர்க்கும் விதமாக, இஸ்லாத்தின் சத்தியக் கொள்கைகளை நேரடியாக தெளிவுபடுத்தும் மாற்று மத அன்பர்களுக்கான கேள்வி பதில் நிகழ்சியையும் நாடு முழுவதும் நாம் நடத்தி வருகின்றோம்.
“இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்” என்ற பெயரில் தமிழ் மொழியில் சகோதரர் பி.ஜெ அவர்களினால் நடத்தப்பட்டு தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பலத்த மாற்றத்தை உண்டாக்கிய இந்த நிகழ்ச்சி அதே பெயரில் சிங்கள மொழியில் இலங்கையிலும் நடத்தப்படுகின்றது. இஸ்லாம் பற்றி மாற்று மத அன்பர்களுக்குள்ள சந்தேகங்களை நேரடியாக கேட்டுத் தெளிவுபெரும் ஒரு ஜனரஞ்சக நிகழ்ச்சியாக இதுவிருப்பது மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
சிங்கள மொழி மூலமான இஸ்லாமியப் பிரச்சாரகர்களை உருவாக்கும் நன்னோக்கில் சனிக்கிழமைகளில் சிங்கள மொழி மூலமான பயிற்சிகள் நடத்தப்படுகின்றது.
இணையதளத்திலும் சிங்கள மொழி மூலம் இஸ்லாமியப் பிரச்சாரத்தை முன்னெடுக்கும் விதமாக தனியான ஒரு இணையதளமும் தயாராகிக் கொண்டிருக்கின்றது என்பது மேலதிக தகவலாகும்.
சிங்கள மொழி மூலம் இஸ்லாத்தை எத்தி வைக்கும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் பணிகள் என்றென்றும் வெற்றிபெற ஏக இறைவனை பிரார்த்திப்போமாக!
rasminmisc
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger