வேலையோடு சேர்ந்த விடுமுறைக்காக நியூசிலாந்தின் ஆக்லண்ட் நகருக்கு சென்றிருந்த பிரிட்டிஷ்காரர் டாம் ஸ்டில்வெல், வெளியில் சென்று விட்டு இரவு பின்னேரம் வீடு திரும்பியிருந்தார்.
பதினான்காவது மாடியில் உள்ள தனது வீடு பூட்டப்பட்டிருப்பதை அடுத்து, தான் தங்கியிருந்த வீட்டுக்கு மேலே பதினைந்தாவது மாடியில் குடியிருந்தவரைப் போய் எழுப்பி "உங்கள் வீட்டு பால்கனி வழியாக என் வீட்டு பால்கனியில் இறங்கவா?" எனக் கேட்டிருந்தார்.
"என்னடா! இந்த ஆள் சற்று குடித்திருப்பதாகத் தெரிகிறதே" என மாடிவீட்டுக்காரர் யோசித்த நேரத்தில் சட்டென அவர் பால்கனி வழியாக இறங்க முயன்றுள்ளார்.
அப்படி இறங்க முயன்றபோது பிடியை நழுவவிட்டிருந்த டாம், அருகில் இருந்த இரண்டு மாடிக் கட்டிடம் ஒன்றின் மேற்கூரையில் விழுந்துவிட்டார்.
உடலில் பல இடங்களில் எலும்பு முறிவுகளுக்கு உள்ளாகியிருந்தாலும், அவர் சுயநினைவோடு இருப்பதாகவும், தான் செய்த காரியத்தை எண்ணி அவர் சிரிப்பதாகவும் அவர் நண்பர் ஒருவர் கூறுகிறார்.
பதிமூன்று மாடி உயரத்திலிருந்து கீழே விழுந்து உயிர்பிழைப்பதென்பது மிகவும் அசாதாரணமானது என இவருக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Post a Comment