பட்டதாரிகளுக்கு முப்படையில் அதிகாரி பணி‏...

மத்திய அரசுத் துறைகளில் ஏற்படும் உயர் அதிகாரி பணிகளுக்கு தகுதியானவர்களைதேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்து வரும் மத்திய அரசுப் பணியாளர்தேர்வாணையமான யு.பி.எஸ்.சி. இந்திய ராணுவத்தின் முப்படைகளுக்குதகுதியானவர்களை தேர்வு செய்ய ‘காம்பைன்டு டிபென்ஸ் சர்வீசஸ் எக்ஸாமினேசன்(2) - 2013 எனும் ஒருங்கிணைந்த தேர்வின் மூலம்தகுதியானவர்களை தேர்வு விருப்பமுள்ளவர்களிடமிருந்து வி்ண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன.


தேர்வின் பெயர்: காம்பைன்டு டிபென்ஸ் சர்வீஸ் எக்ஸாமினேசன்(2) - 2013


நிரப்பப்படும் மொத்த பணியிடங்கள்: 509
இந்தியன் மிலிடரி அகாடமி - 250
இந்தியன் நேவல் அகாடமி - 40
விமானப்படை அகாடமி - 32
ஆபீர்ஸ் டிரெயினிங் அகாடமி (ஆண்கள்) - 175
ஆபீஸர்ஸ் டிரெயினிங் அகாடமி (பெண்கள்) - 12


வயது வரம்பு: இந்தியன் மிலிட்டரி அகாடமி, நேவல் அகாடமி பணிக்கு 02.07.1990 - 01.07.1995 ஆகிய தேதிகளுக்கு இடையில் பிறந்திருக்க வேண்டும்.


விமானப்படை அகாடமி பணிக்கு 02.07.1991 - 01.07.1995 ஆகிய தேதிகளுக்கு இடையில் பிறந்திருக்க வேண்டும்.


ஆபீஸர்ஸ் டிரெயினிங் அகாடமி பணிக்கு 02.07.1989 - 01.07.1995 ஆகிய தேதிகளுக்கு இடையில் பிறந்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இந்திய குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும்
.
கல்வித் தகுதி: இந்தியன் மிலிட்டரி அகாடமி மற்றும் ஆபீஸர்ஸ் டிரெயினிங் அகாடமி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.


இந்தியன் நேவல் அகாடமி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் என்ஜினீயரிங் பிரிவில் குறைந்தபட்சம் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.


விமானப்படை அகாடமிக்கு பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இயற்பியல் மற்றும் கணிதம் உள்ளிட்ட பிரிவில் +2 தேர்ச்சியுடன் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.


விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ஸ்டேட் வங்கி கிளையில் பணமாகவோ, நெட்பேங்க் முறையிலோ செலுத்தலாம். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை.


விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் யு.பி.எஸ்.சி.  www.upsconline.nic.in  என்ற இணையதளத்திற்குச் சென்று, கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகள், தகுதிகளை நன்கு படித்தறிந்த பின்னர் ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பித்த பின்னர் சமர்பித்த விவரங்களை கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும். (முன்னதாக கையொப்பம் மற்றும் புகைப்படத்தை ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.)


விண்ணப்பிப்பிதற்கான கடைசி தேதி: 24.06.2013


மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.upsconline.nic.in  என்ற இணையதளத்தை பார்க்கவும்

- தொகுப்பு திருத்துறைப்பூண்டி ராஜா முகம்மது.
TNTJSW 

Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger