முன்னோர்களைப் பின்பற்றக் கூடாது

இஸ்லாத்தின் அடிப்படையான திருக்குர்ஆனையும் நபிவழியையும் விட்டுவிட்டுமுன்னோர்கள் சொன்னார்கள் என்பதற்காகவோ அல்லது பெரும்பான்மை மக்கள்இவ்வாறு செய்கிறார்கள் என்பதற்காகவோ அவற்றை பின்பற்றுபவனுக்கு பின்வரும்திருக்குர்ஆன் வசனங்கள் தெளிவான அறிவுரையை கூறுகிறது.

அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்!'' என்று அவர்களிடம் கூறப்பட்டால் ''எங்கள்முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்'' என்றுகூறுகின்றனர்அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும் நேர் வழிபெறாமலும் இருந்தாலுமா?   (அல்குர்ஆன் 2:170)

''அல்லாஹ் அருளியதை நோக்கியும் இத்தூதரை (முஹம்மதைநோக்கியும்வாருங்கள்!'' என்று அவர்களிடம் கூறப்பட்டால் ''எங்கள் முன்னோர்களை எதில்கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதும்'' என்று கூறுகின்றனர்அவர்களின்முன்னோர்கள் எதையும் அறியாமலும்நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா?(அல்குர்ஆன் 5:104)

மேற்கண்ட வசனங்கள் நம்முடைய முன்னோர்கள் மார்க்கம் என்ற பெயரில் தவறானகாரியங்களைச் செய்திருந்தால் நாம் அவற்றை புறக்கணிக்க வேண்டும் என்பதற்குதெளிவான சான்றுகளாகும்திருமறைக்குர்ஆனும்நபிவழியும் ஒன்றைப் போதிக்கும்போது அதற்கு மாற்றமாக யார் கூறினாலும் அதனைப் புறக்கணிப்பவனேஉண்மையான இறைநம்பிக்கையாளனாவான்.

குர்ஆனிற்கும்நபி வழிக்கும் மாற்றமாக முன்னோர்களையும்பெரியார்களையும் பின்பற்றியவனின் மறுமை நிலை.

அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் ''நாங்கள் அல்லாஹ்வுக்குக்கட்டுப்பட்டிருக்கக் கூடாதாஇத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?'' எனக்கூறுவார்கள்''எங்கள் இறைவாஎங்கள் தலைவர்களுக்கும்எங்கள்பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம்அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டனர்'' எனவும் கூறுவார்கள்''எங்கள் இறைவாஅவர்களுக்கு இருமடங்குவேதனையை அளிப்பாயாகஅவர்களை மிகப் பெரிய அளவுக்குச் சபிப்பாயாக!''எனவும் கூறுவார்கள்.    (அல்குர்ஆன் 33:66...68)

முன்னோர்கள் சொன்னதற்கும் செய்ததற்கும் மாற்றமாக இருக்கிறதுமுரணாகஇருக்கிறது என்பதற்காகவோ புதிய கருத்தாக இருக்கிறது என்பதற்காவோ ஒருகருத்தை மறுக்கக் கூடாதுஎந்த கருத்தாக இருந்தாலும் அது திருக்குர்ஆன்நபிமொழிக்கு ஒத்ததாக இருக்கிறதாஅல்லது முரணாக இருக்கிறதாஎன்பதைபார்த்துதிருக்குர்ஆனுக்கும் நபிமொழிக்கும் ஒத்து இருக்கும் கருத்தை ஏற்று,முரணாக இருக்கும் கருத்தை புறக்கணிக்க வேண்டும்.

பெரும்பான்மையைப் பின்பற்ற வேண்டுமா?

மத்ஹபைப் பின்பற்ற வேண்டும் என்பவர்கள் அதற்கு ஆதாரமாக பின்வரும்ஹதீஸைக் கூறுகின்றனர்.

''என்னுடைய சமுதாயத்தினர் வழிகேட்டில் ஒன்றுபட மாட்டார்கள்நீங்கள்கருத்து வேறுபாடுகளைக் கண்டால் பெரும் கூட்டத்தைப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்அனஸ் (ரலிநூல்இப்னு மாஜா 3940

அதாவது மத்ஹபைப் பின்பற்றுபவர்கள் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால்மேற்கண்ட ஹதீஸ் மத்ஹபைப் பின்பற்றுதவற்கு ஆதரரமாகும் எனக்கூறுகின்றனர்.

இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் அபூகலஃப் அல் அஃமா என்பவர்பலவீனமானவர்இவர் பொய்யர் என்று யஹ்யா பின் மயீன் கூறுகிறார்இவரதுஹதீஸ் நிகாகரிக்கப்படும் என்று அபூஹாத்தம் கூறுகிறார்.

இதே தொடரில் இடம் பெறும் மற்றொரு அறிவிப்பாளரான வலீத் பின் முஸ்லிம்என்பவர்தனக்கு அறிவித்தவர்களில் பலவீனமான அறிவிப்பாளரை மறைத்து விட்டுஅறிவிப்பவர் ஆவார்.

இப்படி இரு அறிவிப்பாளர்கள் பலவீனமானவர்களாக இருப்பதால் இந்த ஹதீஸைஆதாரமாகக் கொள்ள முடியாது.

''என்னுடைய சமுதாயத்தை அல்லது முஹம்மது நபியின் சமுதாயத்தை அல்லாஹ்வழிகேட்டில் ஒன்று சேர்த்து விட மாட்டான்அல்லாஹ்வுடைய அருள்ஜமாஅத்துடன் தான் இருக்கிறதுயார் தனித்து இருக்கிறானோ அவன் தனித்துநரகத்தில் இருப்பான்'' என்று நபி (ஸல்அவர்கள் கூறினார்கள்.  

அறிவிப்பவர்இப்னுஉமர் (ரலிநூல்திர்மிதீ 2093

இந்த ஹதீஸில் இடம் பெறும் சுலைமான் அல் மதனீ என்பவர் பலவீனமானவர்.எனவே இந்த ஹதீசும் ஆதாரப்பூர்வமானது அல்ல.

இதே கருத்தில் ஹாகிமில் இடம் பெறும் ஹதீஸை அறிவிக்கும் முஃதமர் பின்சுலைமான் என்பவர்இந்த ஹதீஸை தனக்கு யார் அறிவித்தார் என்பது குறித்து ஏழுவிதமான கருத்துகளைத் தெரிவிக்கிறார்.

'இந்த ஹதீஸ் சரியானதாக இருந்தால் இதிலிருந்து சட்டம் எடுத்திருப்போம்என்றுஇதைப் பதிவு செய்த இமாம் ஹாகிம் அவர்களே தெரிவித்துள்ளார்கள்எனவேஇதுவும் பலவீனமான ஹதீஸாகும்.

''இந்தக் கருத்தில் அமைந்த ஹதீஸ்கள் பல வழிகளில் அறிவிக்கப்பட்டிருந்தாலும்எந்த ஹதீசுமே விமர்சனத்திலிருந்து தப்பவில்லை'' என்று இப்னு ஹஜர்கூறுகின்றார்கள்நூல்தல்கீஸ் 3/141

பெருங்கூட்டத்தைப் பின்பற்றுங்கள் என்ற கருத்தில் அமைந்த ஹதீஸ்கள்அனைத்தும் பலவீனமானவையாகவே உள்ளனமேலும் இது திருக்குர்ஆன்வசனத்திற்கும் முரணாக அமைந்துள்ளது.

பூமியில் உள்ளவர்களில் அதிகமானோருக்கு (முஹம்மதே!) நீர் கட்டுப்பட்டால்அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழி கெடுத்து விடுவார்கள்.அவர்கள் ஊகத்தையே பின்பற்றுகின்றனர்அவர்கள் அனுமானம் செய்வோர் தவிரவேறு இல்லைஅல்குர்ஆன் 6:116

இந்த வசனம்பெரும்பான்மைக்கு எந்த மதிப்பும் இல்லை என்று அறிவிக்கின்றது.இதற்கு மாற்றமாக மேற்கண்ட ஹதீஸ்களின் கருத்து அமைந்துள்ளதுஇந்தஅடிப்படையிலும் மேற்கண்ட ஹதீஸ்கள் மேலும் பலவீனம் அடைகின்றன.

மேலும் இந்த ஹதீஸ்கள் சரியானவை என்று ஒரு வாதத்திற்கு ஒப்புக் கொண்டாலும்பெரும் கூட்டம் என்பதற்கு அளவு கோல் என்னஎன்ற கேள்வி எழுகின்றது.

இன்று பெரும்பான்மையானவர்கள் வரதட்சணை வாங்குகிறார்கள்சினிமாபார்க்கிறார்கள்பல்வேறு தீமைகளைச் செய்கிறார்கள்இவர்களைப் பின்பற்றவேண்டுமாஎன்ற கேள்வி எழுகின்றதுஎனவே கருத்து அடிப்படையிலும் இந்தஹதீஸ்கள் பலவீனமடைகின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்த ஹதீஸ்களில் மத்ஹபுகளைப் பின்பற்ற வேண்டும்என்பதற்கு எந்தச் சான்றும் இல்லைகாரணம்இந்த ஹதீஸ் பெரும் கூட்டத்தைப்பின்பற்ற வேண்டும் என்று கூறுகின்றதுமத்ஹபுகளைப் பின்பற்றுபவர்கள் கூட ஒரேமத்ஹபைப் பின்பற்றுவதில்லைநான்கு மத்ஹபுகள் என்று கூறுகின்றார்கள்இந்தஹதீஸின் அடிப்படையில் பார்த்தால் நான்கு மத்ஹபுகளைப் பின்பற்றக் கூடாது;ஒரே மத்ஹபை பின்பற்ற வேண்டும் என்று தான் கூற வேண்டும்எனவேமத்ஹபுகளுக்கு இந்த ஹதீஸ் எதிரானது என்று தான் கூற வேண்டும்.

abdunnaseer
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger