ஜூலை 1–ந் தேதி முதல் எஸ்.எம்.எஸ். மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு

எஸ்.எம்.எஸ். மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி, ஜூலை 1–ந் தேதி அமலுக்கு வருகிறது.

ஜூலை 1–ந் தேதி முதல் எஸ்.எம்.எஸ். மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு! செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை இந்திய ரெயில்வே . ஜூலை 1–ந் தேதி இந்த வசதி அமல் படுத்துகிறது.. இதற்கான பிரத்யேக எண்ணை ஐ.ஆர்.சி.டி.சி. விரைவில் அறிவிக்கும்.

அதாவது, ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்பும் பயணிகள், தங்களது செல்போன் எண்ணையும், தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியின் பெயரையும்  இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) யில் பதிவு செய்து கொள்ள வேண்டும். டிக்கெட் கட்டணத்தை கழித்து கொள்வதற்காக, வங்கிகள், சம்பந்தப்பட்ட பயணிக்கு ‘மொபைல் மணி ஐடென்டிபயர்’ மற்றும் ‘பாஸ்வேர்டு’ வழங்கும்.

முன்பதிவு செய்ய விரும்பும் பயணி, சம்பந்தப்பட்ட ரெயிலின் எண், எங்கிருந்து எங்கு செல்ல வேண்டும் என்ற விவரம், பயண தேதி, பயண வகுப்பு மற்றும் பயணிகளின் பெயர், வயது உள்ளிட்ட விவரங்களை ‘டைப்’ செய்து எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.

உடனே அவரது செல்போனுக்கு ஒரு பரிவர்த்தனை ஐ.டி. வரும். அதைத்தொடர்ந்து, டிக்கெட்டுக்கான பணத்தை செலுத்த மற்றொரு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். ‘பே’ என ஆங்கிலத்தில் ‘டைப்’ செய்து, பரிவர்த்தனை ஐ.டி., வங்கி வழங்கிய மொபைல் மணி ஐடென்டிபயர், பாஸ்வேர்டு ஆகியவற்றை குறிப்பிட்டு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். உடனே, அவரது டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு விட்டதாக ஒரு எஸ்.எம்.எஸ். வரும்.

பயணத்தின்போது, அந்த எஸ்.எம்.எஸ்.சை டிக்கெட் பரிசோதகரிடம் காண்பித்தால் போதுமானது. இந்த நடைமுறைப்படி, ‘பிரிண்ட் அவுட்’ எடுக்க வேண்டியது இல்லை. ஒரு எஸ்.எம்.எஸ்.சுக்கு 3 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். அதைத்தவிர, பணம் செலுத்துவதற்கான கட்டணமாக, ரூ.5 ஆயிரம் வரையான டிக்கெட்டுகளுக்கு 5 ரூபாயும், ரூ.5 ஆயிரத்துக்கு மேற்பட்ட டிக்கெட்டுகளுக்கு 10 ரூபாயும் பிடிக்கப்படும் .

Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger