சைபுல்லா ஹாஜாவின் தில்லுமுல்லுகளும் திருகுதாளங்களும்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அமைப்பு விதிகளை மீறி செயல்பட்ட காரணத்தினாலும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பெயரைப் பயன்படுத்தி பணம் வசூல் செய்து, மஸ்ஜித் முபாரக் அருகே இருக்கும் இடத்தை வாங்கி அதைத் தனி நபர் பெயரில் பதிவு செய்ததற்காகவும், கடந்த 19.06.2011 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் அனைத்துக் கிளைகளின் பொதுக்குழுவில் ஏகமனதாகத் தீர்மானம் எடுக்கப்பட்டு ஜமாஅத்தின் அடிப்படை உறுப்பினரில் இருந்து சைபுல்லாஹ் ஹாஜா நீக்கப்பட்டார். அவரது நீக்கம் தொடர்பாக 15 காரணங்கள் உணர்வு வார இதழில் பட்டியலிடப்பட்டன. ஆனால் அவை அனைத்தும் பொய் என்றும் தன்னை வேண்டுமென்றே நீக்கிவிட்டார்கள் என்றும் சைபுல்லா அவற்றை மறுக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும் தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிராகப் பல குற்றச்சாட்டுகளையும் அந்த வீடியோவில் சுமத்தியுள்ளார். தன்னுடைய சொந்த பந்தங்கள், ஆதரவாளர்கள் மற்றும் மதரஸா மாணவர்களைக் கூட்டி வைத்து தர்பியா என்ற பெயரில் அவர் நடத்திய நிகழ்ச்சியின் தொகுப்புதான் அந்த வீடியோ. அதில் அவர் சுமத்தும் சில குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்று அவரே மற்றொரு இடத்தில் முரண்பட்டு பேசுகிறார். அதை இங்கே அம்பலப்படுத்துகிறோம். அவர் தன்னை நியாயப்படுத்திக் கொள்ள எடுத்து வைக்கும் அத்தனை வாதங்களும் எவ்வளவு தவறானது என்பதையும் இங்கே அமபலப்படுத்துகிறோம். சைபுல்லா ஹாஜாவின் ஊரைச் சேர்ந்தவர்களும் அவருடன் இணைந்து பல பணிகளைச் செய்தவர்களும் சைபுல்லாவுடன் அன்றாடம் தொடர்பில் இருந்தவர்களும் ஆரம்ப காலம் முதல் நடந்த அனைத்து விபரங்களையும் நன்கு அறிந்தவர்களுமான மவ்லவி அப்துர்ரஹ்மான் பிர்தவ்சி, மவ்லவி அப்துந்நாசிர் ஆகிய இருவரும் சைபுல்லாவின் வாதங்களுக்கு பதில் அளிக்க அதிகம் தகுதியானவர்கள் என்பதால் அவர்கள் மூலம் அளிக்கப்பட்ட மறுப்புகள் தான் இந்த வீடியோக்கள். 
முதல் பாகம் 
இப்பாகத்தில் கீழ்க்கண்ட குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. 
* சைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக்கும் போதே முபாரக் ஜமாஅத், முபாரக் நலச்சங்கம், தக்வா ஜமாஅத், கடையநல்லூர் இஸ்லாமிய தாவா குழு, அக்ஸா மாணவர் அமைப்பு என்ற பெயர்களில் செயல்பட்டது உண்மையா இல்லையா? 
* மேலப்பாளையத்தில் செயல்படும் ஆ ஜாக் மற்றும் INTJ ஆகிய அமைப்புகளின் நிலை என்ன? வீடியோ 
 
இரண்டாம் பாகம் 
சைபுல்லாஹ் ஹாஜா அவர்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டதற்கு இரண்டாவது காரணமாக, அவர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பணிகளான இரத்ததான முகாம், கத்னா முகாம், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் போன்றவைகளை அரபியிலும் ஆங்கிலத்திலும் புரொஃபைல் (சேவைகளின் தொகுப்புப் புத்தகம்) தயாரித்து அதைக் காட்டி வெளிநாட்டு மக்களிடம் வசூல் செய்துவிட்டு, இப்போது நான் மஸ்ஜித் முபாரக் பெயரில் தான் புரொஃபைல் தயாரித்தேன் என்கிறார் என்ற குற்றச்சாட்டு உணர்வு இதழில் வெளியானது. அதை மறுத்து தன் சொந்த பந்தங்களை கூட்டி வைத்து சைபுல்லாஹ் அவர்கள் நடத்திய தர்பியாவில், நான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பயன்படுத்தி 40 லட்சம் அல்ல, 40 ரூபாய் வாங்கியதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெயர் கொண்ட ரசீதைக் காட்ட முடியுமா எனக் கேட்கிறார். அதுமட்டுமின்றி யார் வேண்டுமானாலும் யார் மீது வேண்டுமானலும் குற்றச்சாட்டு வைக்கலாம். இப்படி குற்றச்சாட்டு வைப்பதாக இருந்தால் நான் கூட வைப்பேன். ஜூலை 4 மாநாட்டிற்கு நான் பல கோடி ரூபாய் வசூல் செய்து கொடுத்தேன். அதற்கு இன்றுவரை கணக்கு வரவில்லை என்று சொல்ல முடியும் எனக் கூறியிருக்கிறார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தைப் பொருத்தவரை இறைவனின் அருளால் இன்றுவரை கணக்கு விசயத்தில் பிசகியது இல்லை. காரணம் ஒரு கிளை வசூல் செய்து கொடுக்கும் பணத்திற்கு அவர்கள் சார்ந்த அந்த மாவட்ட நிர்வாகத்திடம் கிளை நிர்வாகம் கணக்கு கேட்கும். அதேபோல மாவட்ட நிர்வாகம் கிளை நிர்வாகத்திடம் கணக்கு கேட்கும். மாவட்டம் மூலம் மாநிலத்திற்கு வரும் வகைகளுக்கு மாநில நிர்வாகத்திடம் மாவட்ட நிர்வாகம் கணக்குக் கேட்கும். அதே போல கிளை மாவட்ட கணக்கு வழக்குகளை மாநில நிர்வாகம் கணக்குக் கேட்கும். இது எல்லாவற்றையும் சேர்த்து வைத்து தணிக்கைக் குழு கணக்குக் கேட்கும். கொடுக்கப்படும், வாங்கப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கும் ஒவ்வொரு பைசாவிற்கும் ரசீது கொடுக்கப்பட வேண்டும் என்பதை ஒரு போதும் மீறியது இல்லை. மாநில நிர்வாகம் கணக்கில் தவறு செய்திருந்தால் தணிக்கைக் குழுவிற்குப் பதில் சொல்லியாக வேண்டும். மாநில நிர்வாகத்தின் மீது ஏதேனும் ஒரு குற்றச்சாட்டு வந்தால் மேலாண்மைக் குழு அதைக் கேட்கும். மாநில நிர்வாகத்திற்கு எதிராக பொதுக்குழுவைக் கூட்டும் உரிமை மேலாண்மைக் குழுவிற்கு இருக்கின்றது. இது தான் சரியான நிர்வாகத்தின் இருக்க வேண்டிய ஒழுங்காகும். இந்த ஒழுங்குமுறை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தவிர வேறு எந்த அமைப்புகளிலும் கிடையாது. இந்த ஜமாஅத்தில் யார் நினைத்தாலும் இங்கே ஊழல் செய்து விடமுடியாது. அப்படியே செய்தாலும் அவர்கள் மிக விரைவில் மாட்டிக் கொள்வார்கள். ஆனால் சைபுல்லா ஹாஜா அவர்கள் மிகத்தந்திரமாகச் செயல்பட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தைப் பயன்படுத்தி ஒரு மாபெரும் ஊழலைச் செய்து விட்டு அது சம்பந்தமாக கணக்குக் கேட்டால் அது முபாரக் கமிட்டி என்றும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு கணக்கு கேட்க உரிமை இல்லை என்றும் சொல்கிறார்.  
 
மூன்றாம் பாகம் 
சைபுல்லா ஹாஜா அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பணிகளைக் காட்டி மக்களிடம் வசூல் செய்து விட்டு, இன்றைக்கு அதை தனிநபர் பெயரில் பதிவு செய்து விட்டு, நான் மஸ்ஜித் முபாரக் பணிகளைக் காட்டித் தான் வசூலித்தேன் என்று சொல்கிறார். பக்கீர் முஹம்மது அல்தாபி தலைவராக இருக்கும் போது சைபுல்லா ஹாஜா தவ்ஹீத் சகோதரர்களிடம் வசூல் செய்து விட்டு இடத்தை வாங்கும் போது தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் அதைப் பதிவுசெய்யாமல் நம் ஊர் சகோதரர்கள் கொண்ட ட்ரஸ்டை உருவாக்கி பதிவு செய்வோம் என்று ஆலொசனிக் கூட்டம் நடத்தினார். இந்த விபரம் தெரிய வந்த போது சைபுல்லாவை நிர்வாகம் அழைத்தது. பீஜே கடுமையாக இதுபோல் துரோகம் செய்வது மன்னிக்க முடியாதது என்று பீஜே எசரித்தார். இதையும் சைபுல்லா மறுத்துள்ளார். என்னை எச்சரித்தீர்கள் என்றால், பின்னர் எதற்காக என்னை ஜூலை 4 மாநாட்டுக்கு தலைவராக நியமித்தீர்கள் என்று கேட்கிறார். அத்தோடு அடுத்த மாநிலத் தலைவராக இருக்குமாறு என்னை ஏன் கேட்டுக் கொண்டீர்கள் என்றும் கேட்கிறார். அதாவது 2008 ல் என்னை எச்சரித்தீர்களானால், பின்னர் எதற்காக 2010 ஜூலை 4 மாநாட்டிற்கும், ஜனவரி 27, 2011ல் மதுரையிலும் சென்னையிலும் நடந்த உயர்நீதிமன்ற கண்டன ஆர்ப்பாட்டத்திலும் என்னை ஏன் தலைவராக நியமித்தீர்கள்? அதுமட்டுமல்லாமல் 2011ல் நடந்த மாநில நிர்வாகக்குழுவில் அடுத்த தலைவராக பதவியேற்றுக் கொள்ளுமாறு ஏன் கேட்டீர்கள்? நான் முன்பே மோசடிக்காரன் எனத் தெரிந்தும் என்னை இதுபோல ஏன் கேட்டுக் கொண்டீர்கள் என நம்மை நோக்கி கேள்வி எழுப்புகிறார். இதிலே இவர் இரண்டு விசயங்களை உண்மையாக்கப் பார்க்கிறார். ஒன்று, நாம் இவரை 2008ல் எச்சரிக்கை செய்தோம் என்ற சம்பவமே நடக்கவில்லை என்ற மாயையை உண்டாக்கப் பார்க்கிறார். அப்படி எச்சரித்திருந்திருந்தால் பிறகு ஏன் மேற்கண்ட பதவிகளுக்கு தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் கேட்கிறார். இரண்டாவது நாம் எச்சரிக்கை செய்வதற்கு முன்பே நான் பதிவு செய்து விட்டேன் என்கிறார். அதாவது அவரை எச்சரிக்கை செய்தது 2011ல் தான். ஆனால் அதற்கு முன்பே 2009லேயே இந்தப் பதிவு விசயம் முடிந்து விட்டதாம். இப்படி ஒரு முழுப் பொய்யை மக்களிடம் வைத்து அவர் செய்த பெரிய மோசடியை மறைக்கப் பார்க்கிறார். ஆனால் இவரை நாம் எச்சரித்தது அல்தாபி தலைவராக இருந்த போது 2008ல் தான். அப்போது அவர் அந்த நிலத்தைத் தனி நபர் பெயரில் பதிவு செய்திடவில்லை. மாறாக பதிவு செய்வதற்கு கள்ள ஆலோசனை தான் நடத்திக் கொண்டு இருந்தார். மூன் பப்ளிகேசனில் 2008ல் நடந்த கூட்டத்தில் பீஜே அவர்கள் எடுத்து வைத்த கருத்துக்களின் நியாயத்தை உணர்ந்து, அவ்வாறு அவர்கள் தனிநபர் பெயரில் பதிவு செய்தால், அவர்களைத் தூக்கி எறிந்து விட்டு நான் தவ்ஹீத் ஜமாஅத்தின் பக்கம் நிற்கத் தயார் என்று சொல்லிவிட்டுச் சென்றார். ஆனால் அவர் சொன்னபடி நடந்து கொள்ளவில்லை. 2009ல் தனிநபரில் பெயரில் அந்த இடத்தைப் பதிவு செய்கிறார். ஆனால் இந்த விசயம் யாருக்குமே தெரியாமல் மறைத்து வைக்கப்படுகின்றது. பதிவு விவகாரம் இன்னும் முடியவில்லை என பொய் சொல்லிச் சொல்லியே எல்லோரையும் நம்ப வைக்கிறார். அதற்குப் பிறகு நடந்த ஜூலை 4 மாநாட்டுக் குழுவிற்கு இவர் தலைவராக நியமிக்கப்படுகிறார். ஜனவரி 27 ஆர்ப்பாட்டத்திற்கு 3 மாதங்களுக்கு முன்பாகவே மதுரைக்கு இவரே தலைவராக நியமிக்கப்படுகிறார். அதற்குப் பிறகு தான் இவர் ரகசியமாக தனிநபர் பெயரில் பதிவு செய்த விவகாரம் வெளியாகிறது. அந்த நேரம் பழைய நிர்வாகத்தின் பதவிக்காலம் முடியும் நேரமாக இருந்ததால், இதைப் புதிய நிர்வாகம் விசாரிக்கும் என ஒத்திவைக்கப்படுகிறது. இதுதான் நடந்தது. ஆனால் அவருக்கு வழங்கப்பட்ட அவகாசங்களைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தன்னை நல்லவர் என மக்களிடம் காட்டிக்கொள்ள முயன்று இன்றைக்கு தோற்று நிற்கிறார். அடுத்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலத்தின் சார்பில் ரமலான் மாத பிரச்சாரத்திற்குச் சென்ற சைபுல்லாஹ் ஹாஜா அங்கே சென்று பயான் செய்த நேரம் தவிர மற்ற நேரங்களில் அங்கிருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளிடம் மஸ்ஜித் ரஹ்மான் பக்கத்தில் இருக்கும் நிலம் தேவை எனவும் அதற்காக வசூல் செய்ய தனக்கு உதவி செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறார். அதுபோலவே அங்கிருக்கும் நிர்வாகிகளும் பொதுவான ஒரு இடத்தில் அனைத்து ஊர் மக்களையும் ஒன்று திரட்டுகின்றனர். அவர்கள் மத்தியில் தவ்ஹீத் ஜமாஅத்தின் கடந்து வந்த பாதைகளையும், ஏகத்துவத்தின் எழுச்சியையும் பேசி சைபுல்லா அவர்கள் வசூல் மேற்கொள்கிறார். ஆனால் இன்றைக்கு நான் மஸ்ஜித் முபாரக் பணிகளைச் சொல்லித்தான் கேட்டேன்., அதற்குத் தான் மக்கள் உதவி செய்தார்கள் என்று கபட நாடகம் ஆடுகிறார். நான் என்ன முஸ்லிம் மக்களிடம் மட்டுமா வாங்கினேன்? முஸ்லிம் அல்லாத பலரும் தான் உதவி செய்துள்ளார்கள். கடையநல்லூரில் இருக்கும் அருணாச்சலம் செட்டியார் என்பவர் 50 ஆயிரம் நன்கொடையாகத் தந்தார். அதற்காக அவர் வந்து, நான் அருணாச்சலம் செட்டியாராக 50ஆயிரம் கொடுத்திருக்கிறேன். அதனால் அந்தப் பள்ளியை திருமலைக்கோவில் அரங்காவலர் குழுவிற்கு எழுதி வையுங்கள் என்று கேட்டால் அது முட்டாள்தனமில்லையா என்று கேட்கிறார். அவ்வாறு கேட்பது முட்டாள்தனம் தான். அதே நேரத்தில் திருமலைக் கோவிலுக்கு நன்கொடை தாருங்கள் என்று அருணாச்சலம் செட்டியாரிடம் காசு வாங்கிவிட்டு அதில் நிலம் வாங்கி மஸ்ஜித் முபாரக் பெயரில் பதிவு செய்து மோசடி செய்தால், அதே அருணாச்சலம் செட்டியார் அந்த இடத்தை திருமலைக் கோவில் அரங்காவல் குழுவிற்கு எழுதிக் கொடுங்கள் என்று கேட்டால் அது தவறு இல்லை. அதேபோலத் தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பணிகளைக் காட்டி அருணாச்சல செட்டியாரிடம் வசூல் செய்து விட்டு இன்றைக்கு எனக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லும் சைபுல்லாவிடம் அந்த அருணாச்சலம் செட்டியார் அவர் கொடுத்த பணத்தை திருமலை அரங்காவல் குழுவிற்கு திரும்பத் தரும்படி கேட்டாலும் அதில் தவறேதும் இல்லை. காரணம் சைபுல்லா சொன்னது ஒன்று, செய்தது ஒன்று. கேடுவரும் பின்னே மதி கெட்டு விடும் முன்னே என்று சைபுல்லா சொல்கிறார். அது அவருக்கே இங்கே தெளிவாகப் பொருந்துகிறது. சைபுல்லா ஹாஜா துபையில் வசூல் செய்வதற்காக செய்த புரொஃபைல் மோசடிகள் குறித்தும், இவரை ஏன் மாநாட்டுக்குத் தலைவராக நியமித்தார்கள் என்பது குறித்தும் விரிவாக அறியவீடியோவைப் பாருங்கள். 

நான்காம் பாகம் 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் உறுப்பினர்களிடமும் அனைத்து மக்களிடமும் வசூல் செய்து பொதுக் காரியங்களுக்கு வாங்கப்படும் சொத்துக்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின், அந்தக் குறிப்பிட்ட கிளையின் பெயரில் தான் பதிவு செய்ய வேண்டும் என 2009ஆம் ஆண்டின் இறுதியில் கோவை ரஹ்மத்துல்லா அறிவித்ததாகவும், அந்த மினிட் (சட்டப் பதிவுக் குறிப்பேடு) புத்தகத்தில் அன்றைய மாநில நிர்வாகியாக இருந்த தானும் கையெழுத்திட்டதாகவும் சைபுல்லாஹ் தெரிவித்திருக்கிறார். ஆனால் மஸ்ஜித் முபாரக் அருகே இருக்கும் நிலம் அதற்கு முன்பதாக (கிட்டத்தட்ட கோவை ரஹ்மத்துல்லாஹ் அறிவித்த தினத்திற்கு ஆறு மாதங்களுக்கு முன்னால்) தனி நபர் பெயரில் பதிவு செய்யப்பட்டது எனவும் சைபுல்லா தெரிவித்து, சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பே அந்த விசயம் முடிந்து விட்டது., அந்தச் சட்டத்திற்கு நானும் கட்டுப்பட்டவன் எனவும், தன்னை வேண்டுமென்றே பழி சுமத்தி நீக்கிவிட்டதாகவும் ஒரு அப்பட்டமான பொய்யை மக்களிடம் தெரிவித்திருக்கிறார். மேற்படி சட்டம் பதிவுக் குறிப்பேட்டில் ஏற்றப்பட்டது 2009ஆம் ஆண்டின் இறுதியில் என்பது உண்மை தான். ஆனால் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது 2005 ஆம் ஆண்டில். இதன் காரணமாகத் தான் அன்றைக்கு மாநிலப் பொறுப்பில் இருந்த சைபுல்லாஹ் ஹாஜா அவர்களே பல ஊர்களின் கிளைகளுக்குச் சென்று டிரஸ்ட் பெயரில் இருந்த சொத்துக்களை எல்லாம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளை பெயரில் பதிவு செய்தார். ஆனால் மற்ற ஊர்களுக்கு இதை அமுல்படுத்திய சைபுல்லாஹ் தன்னுடைய சொந்த ஊரில் மட்டும் பள்ளியை தன்னுடைய முழுக்கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தில் அந்த நிலத்தை ஒரு தனி நபர் பெயரில் பதிவு செய்திருக்கிறார். அதை டிரஸ்டாகக் கூட பதிவு செய்ய எண்ணம் வராமல், தான் வைத்தது தான் அங்கே சட்டமாக இருக்க வேண்டும், கணக்கு வழக்குகளைக் கேட்டு யாரும் வந்துவிடக் கூடாது என்ற ரீதியில் முற்றுரிமை (அழழெpழடல) அடிப்படையில் இவ்வாறு செய்து மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் இழைத்திருக்கிறார் என்பது உறுதியாகிறது. அடுத்து ஒரு முக்கியமான விசயம் இங்கே நாம் பதிவு செய்தாக வேண்டும். ஜாக் மற்றும் தவ்ஹீத் ஜமாத்திற்கு முபாரக் பள்ளி விஷயமாக பிரச்சனை வரும் போது, நான் பீஜேவிடம் இதைக் கொண்டு சென்றேன். அவர் செத்த பாம்பை என்னிடம் கொண்டு வராதீர்கள் என்று சொன்னார். பிறகு நானே என் சொந்த முயற்சியில் போராடி வெற்றி பெற்றேன் என ஒரு பச்சைப் பொய்யை இட்டுக்கட்டியிருக்கிறார். சைபுல்லாஹ் ஹாஜா அல்லாஹ்விற்குப் பயந்து கொள்ள வேண்டும். முபாரக் பள்ளி சம்மந்தமாக சைபுல்லாஹ் ஹாஜாவிடம் பீஜே பல ஆலோசனைகளைச் சொல்லி அவர் அதைக் கேட்காமல் தான்தோன்றித் தனமாக நடந்து பள்ளியைப் பூட்ட வைத்தார். பூட்டிய பிறகு சைபுல்லா ஹாஜா, பீஜேயிடம் மீண்டும் ஆலோசனை கேட்கிறார். நான் சொன்ன எல்லா யோசனைகளையும் புறந்தள்ளி செத்த பினமாக ஆக்கிவிட்டு வைத்தியம் பார்க்கச் சொல்கிறீர்களே! இது நியாயமா என சைபுல்லாஹ்வைக் கண்டித்தார் பீஜே. ஆனாலும் கூட சுவுழு அந்தப் பள்ளியைப் பூட்ட உத்தரவிட்ட போது தவ்ஹீத் ஜமாத் உடனடியாக அதிமுக பன்னீர் செல்வம் வழியாக அந்த ஆர்டரைக் கேன்சல் செய்யச் சொல்லியது. இந்தச் சம்பவங்கள் நடந்த போது சைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் கடையநல்லூரை விட்டு தலைமறைவாகி ராஜபாளையத்தில் தஞ்சம் புகுந்திருந்தார். நடந்த உண்மை இவ்வாறு இருக்க இன்றைக்கு சைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் அப்படியே வரலாற்றைத் திரிக்கப் பார்க்கிறார். இதையெல்லாம் விடக்கொடுமை, அன்றைக்கு பள்ளியைக் காப்பதற்காக வெளியூர்களில் இருந்து வந்திருந்த மக்களைக் கொச்சைப்படுத்திகிறார் சைபுல்லாஹ். அதாவது ஜாக் அமைப்பினர் ஒரு இஸ்திமா நடத்தி முபாரக் பள்ளியை அபகரிக்கப் போகிறார்கள், நாமும் அதற்குப் போட்டியாக இஸ்திமா நடத்தினால் தான் முபாரக் பள்ளியைக் காப்பாற்ற முடியும் என மேலப்பாளையம் சென்று சம்சுல்லுஹாவிடம் ஆட்கள் அனுப்புங்கள் என்று கேட்டார் சைபுல்லாஹ். அத்தோடு பீஜேவுக்கும் போன் செய்து இந்த விசயத்தைச் சொல்ல, உடனடியாக பீஜே, மதுரையில் இருந்து ஒரு இளைஞர் படையை கடையநல்லூருக்கு அனுப்பி வைக்கிறார். முபாரக் பள்ளியைப் பாதுகாப்பதற்காக களமிறங்கிய அந்தக் கொள்கைச் சகோதரர்களிடம் பீஜே தரப்பு முன்வைத்த ஒரு நிபந்தனை என்ன தெரியுமா? ”நீங்கள் பள்ளிவாசலைப் பாதுகாக்கச் செல்கிறீர்கள்., அங்கே உங்களின் உயிரைக் கூட தியாகம் செய்யும் நிலை ஏற்படலாம். எனவே அதற்கெல்லாம் தயாரானவர்கள் மட்டும் செல்லுங்கள்” என அந்த கொள்கைச் சகோதரர்களிடம் சொல்லப்படுகிறது. ஆனால் கொள்கைக்காக உயிரைத் தியாகம் செய்யவும் தயாராக இருந்த அந்த இளைஞர்களில் ஒருவர் கூட பின்வாங்காமல் கடையநல்லூருக்குப் படையெடுத்தனர். ஆனால் அந்த சகோதரர்களின் தியாகத்தை இன்று சைபுல்லாஹ் கொச்சைப்படுத்துகிறார், எப்படி தெரியுமா? அது தான் அவர்கள் வந்த வாகனத்துக்கு நான் வாடகை கொடுத்து விட்டேனே! அதன் பிறகு அவர்களுக்கும் இந்தப் பள்ளிக்கும் என்ன உறவு இருக்கிறது? அவர்கள் என்ன பள்ளியைப் பாதுகாக்கவா வந்தார்கள்? இஸ்திமாவுக்குத் தானே வந்தார்கள் என இன்றைக்குச் சொல்கிறார் சைபுல்லாஹ். தான் ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக, தவ்ஹீத் பள்ளியைப் பாதுகாப்பதற்காக தலைமையின் உத்தரவை ஏற்று உயிரைக் கூட துச்சமென நினைத்து வந்த கூட்டத்தை, இன்றைக்கு கூலிப்படையின் அந்தஸ்தில் வைத்துப் பேசுகிறார் சைபுல்லா. கேவலம் 39 லட்ச ரூபாய் பணம் அவரை தடம்புரட்டி விட்டது. இவர் தவ்ஹீத் ஜமாஅத்தை நோக்கி வைத்திருந்த இன்னும் பல வாதங்களுக்கு தெளிவான சரியான பதிலடிக்குவீடியோவைப் பாருங்கள். 
 
ஐந்தாம் பாகம் 
இவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் இவர் ஆடம்பரத் திருமணத்தை நடத்தி வைத்தார் என்பதும் முக்கியமானதாகும். ஆனால் ஒரே ஒரு ஆடம்பரத் திருமணத்தைத் தவிர நான் வேறு எதிலாவது கலந்து கொண்டேனா? அதுவும் அந்த ஆடம்பரங்கள் என் கண்முன்னால் நடந்ததா? என் பார்வையில் பட்டதா என ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பி தன்னுடைய செயலை நியாயப்படுத்த முனைந்து தோற்றுப்போனார் சைபுல்லாஹ். அத்தோடு நிற்காமல் அப்துந்நாசரின் சகோதரிக்கு நடந்த திருமணத்திலே பெண் வீட்டு விருந்து வைக்கப்பட்டது என்றும் அதிலே நான் கலந்து கொள்ளவில்லை என்றும் சொல்லியிருந்தார். ஆனால் அந்தத் திருமணத்தை நடத்தி வைத்தது சைபுல்லாஹ் தான். பெண் வீட்டு விருந்தில் கலந்து கொள்ளக்கூடாது என்பது சரி என்றால் அந்தத் திருமணத்திலும் கலந்து கொள்ளக்கூடாது என்பது தானே சரி! ஆனால் இவர் அதை நியாயப்படுத்தப் போய் இப்போது கூணிக்குறுகி நிற்கிறார். அதே நேரம் அப்துன்நாசர் வீட்டில் நடந்த பெண்வீட்டு விருந்து நியாயமா என்றால் அது தவறு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அப்துன்நாசர் அன்றைக்கு இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த மாணவர். அவரால் தடுத்திருக்க முடியாது. ஆனால் சைபுல்லாஹ் ஹாஜா தான் அந்தத் திருமணத்தை ஏற்பாடு செய்திருந்தார். அவர் நினைத்திருந்தால் அந்த விருந்தே நடக்காமல் தடுத்திருக்க முடியும். அடுத்து இவர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கடையநல்லூரில் இயங்கும் ஆம்புலன்ஸ் சம்பந்தமான கணக்கு வழக்குகளை யாரிடமும் சமர்ப்பிக்கவில்லை என்பது குற்றச்சாட்டு. ஆனால் பொதுச் சொத்துக்களில் யார் கணக்கு கேட்டாலும் அதை வெளியிடுவது தான் சிறந்த நிர்வாகத்திற்கு அழகு. ஆனால் இவரோ, காசு கொடுத்தவர்கள் கணக்குக் கேட்டால் தான் அதைச் சொல்வேன் என சம்பந்தமில்லாமல் சப்பை கட்டு கட்டுகிறார். அத்தோடு நிற்காமல் முஸ்லிம் மீடியா டிரஸ்டிற்கு தலைவராக இருக்கும் பீஜே 2004 முதல் கணக்கு காட்டினாரா? என்று கேட்கிறார். முஸ்லிம் மீடியா டிரஸ்டுக்கு லுஹா உறுப்பினர் இல்லை. அப்துர்ரஹ்மான் பிர்தவ்ஸி உறுப்பினர் இல்லை. நான் உறுப்பினர், ஆனால் எனக்குக் கணக்கு காட்டவில்லை என்று சொல்கிறார். ஆனால் லுஹாவும், அப்துர்ரஹ்மான் பிர்தவ்ஸியும் முஸ்லிம் மீடியா டிரஸ்டின் உறுப்பினர்கள் என்பது அவருக்கே தெரியும். அதுமட்டுமல்ல, சைபுல்லா அவர்கள் முஸ்லிம் மீடியா டிரஸ்டில் உறுப்பினர் இல்லை என்பது அவருக்கு தெரியாமல் போய் விட்டது தான் பரிதாபம். அதற்காக, அவர் டிரஸ்டின் உறுப்பினர் இல்லை என்பதற்காக முஸ்லிம் மீடியா டிரஸ்டின் கணக்குகளைக் காட்ட பீஜே மறுப்பாரா? முதலில் முஸ்லிம் மீடியா டிரஸ்டுக்கு என்னென்ன சொத்துக்கள் உள்ளன? நீலகிரியில் இரண்டு ஏலக்காய் எஸ்டேட்டும், சென்னை அண்ணாசாலையில் 15 மாடி கட்டிடமும் இருக்கிறதா? முஸ்லிம் மீடியா டிரஸ்டுக்கு உள்ள சொத்து என்றால் அது உணர்வு பத்திரிகை மட்டும் தான். அந்த உணர்வு பத்திரிகையை முடக்க எதிரிகளின் சூழ்ச்சி செய்த போது, அதன் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்ட போது அதைத் தூக்கி நிறுத்தியவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உலகளாவிய உறுப்பினர்கள் தான். அன்று முதலே உணர்வு பத்திரிகை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஒரு அங்கமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அப்படியே இவர் கணக்குக் கேட்பதாக இருந்தால் இவர் தானே மாநிலப் பொறுப்புகளில் பலமுறை இருந்தார்., அப்போதெல்லாம் ஏன் கேட்கவில்லை? அவருக்கே தெரியும் முஸ்லிம் மீடியா டிரஸ்டின் கணக்கு வழக்கு எப்படி இருக்கிறது என்று. ஆனால் இன்றைக்கு அதை ஒரு குற்றச்சாட்டாக வைத்து களங்கம் கற்பிக்கப் பார்க்கிறார். இதுசம்பந்தமான முழுமையான விவரங்களுக்குவீடியோவைக் காண்க. 

ஆறாம் பாகம் 
இவர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பயன்படுத்தி அரசியல்வாதிகளிடம் சுயலாபங்கள் அடைந்தது சம்பந்தமாகவும் அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருந்தது. அதற்கு விளக்கம் தருகிறேன் பேர்வழி என்று நினைத்துக் கொண்டு அவர் செய்த சில விசயங்களை நியாயப்படுத்தி, மற்றைய சில விசயங்களை இருட்டடிப்பு செய்து விட்டார் சைபுல்லாஹ். முபாரக் பள்ளியைத் தவிர நான் வேறு எங்கும் ஜூமுஆவிற்குப் போக மாட்டேன், அதுபோல வேறு யாரும் இந்தப் பள்ளிக்கு ஜூமுஆவிற்கு வரக்கூடாது என்ற கட்டுப்பாடுகளை வைத்துக் கொண்டு சுயாட்சி நடத்தி வந்தார் சைபுல்லா. இது சம்பந்தமாக அவரிடம் மக்கள் கேட்ட போது, “ஏன் மேலப்பாளையத்தில் மஸ்ஜித் ரஹ்மான் பள்ளியில் லுஹாவைத் தவிர வேறு யாரும் ஜூமுஆ செய்ய முடியுமா?” அல்தாபி மேலப்பாளையத்திற்குள் நுழைய முடியுமா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். சம்சுல்லுஹாவைப் பொருத்தவரை அவர் மேலப்பாளையம் மஸ்ஜித் ரஹ்மான் பள்ளியில் இமாமாக இருக்கிறார். லுஹா அவர்கள் மேலப்பாளையம் பள்ளியில் இமாமாக இருப்பதால் அவர் வெளியிடங்களுக்கு ஜூமுஆ செல்வது குறைவு. ஆனாலும் மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை வெளியிடங்களுக்கு ஜூமுஆவிற்குச் சென்று வருகிறார். ஆனால் சைபுல்லா முபாரக் பள்ளிக்கு இமாம் அல்ல. ஆனால் நான் வேறு எங்கேயும் ஜூமுஆவிற்குச் செல்ல மாட்டேன் என்று மறுக்கிறார். அடுத்து அல்தாபி மேலப்பாளையத்திற்குள் நுழைய முடியுமா? என்று ஒரு சிறுபிள்ளைத் தனமான கேள்வியைக் கேட்டிருக்கிறார். பாவம் சைபுல்லா வரலாற்றை மறைக்கப் பார்க்கிறார். மேலும் நான் மட்டுமா கட்டுப்பட மறுக்கிறேன், அப்துர்ரஹ்மான் பிர்தவ்ஸி மறுக்கவில்லையா? அவரை நம்பி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தால் அவர் கடைசி நேரத்தில் வயிற்று வலி என்று சொல்லி செல்ல மறுத்து விடுவார் என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார். 
 
சைபுல்லா தன் உள்ளத்தில் மறைத்து வைத்திருந்த பல கசடுகளை மக்கள் மத்தியிலே வெளிப்படுத்த அவரே ஒரு களம் அமைத்துத் தந்தார் என்று தான் சொல்ல வேண்டும். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பணிகளைச் சொல்லி ஊர் ஊராக வசூல் செய்து அதிலே ஒரு சொத்து வாங்கி அதைத் தனக்கு வேண்டப்பட்ட ஒரு தனி நபரின் பெயரிலே பதிவு செய்து ஒரு மிகப்பெரிய மோசடியை சைபுல்லா செய்திருக்கிறார். ஆனால் தவறு செய்பவர்கள் வழக்கமாகத் தங்களின் செயல்பாடுகளை நியாயப்படுத்திக் கொள்வதற்காக ஏதையாவது சொல்லி அவர்களே அவர்கள் செய்த நிறைய தவறுகளை உறுதிப்படுத்திக் கொள்வது போலத் தான் சைபுல்லாவும் செய்தார். இதுபோன்ற நபர்கள் இங்கே மக்களை எளிதாக ஏமாற்றிவிட்டாலும் நாளை ஒரு விசாரனை இருக்கிறது என்பதை மறந்து விடவேண்டாம் என்பதே நமது அறிவுரை. 
சைபுல்லாஹ் ஹாஜாவின் திருகுதாளங்கள் முழுமையான வீடியோவை காண கீழுள்ள லிங்கிற்கு செல்லவும்.

நன்றி - குழப்பிகள் 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger