முஸ்லிம்களுக்குமட்டும் மறுக்கப்படும் நீதி!

அப்சல் குருவின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு ரகசியமாக அவர் தூக்கிலிடப்பட்டார். அவரது குடும்பத்தினர்களுக்குக்கூட தெரியாத வகையில் அவரை தூக்கிலிட்டது அயோக்கிய காங்கிரஸ் அரசு.


இந்த சம்பவம் நடந்து முடிந்த சில வாரங்களுக்குள்ளேயே காங்கிரஸ் கயவர்களின் கயமைத்தனம் கொஞ்சம் கொஞ்சமாக அம்பலமாகிக் கொண்டு வருகின்றது.

முஸ்லிம்களின் முதுகில் குத்தும் கயவர்கள் நாங்கள்தான். நாங்கள் சங்பரிவாரர்களைவிட முஸ்லிம்களை கறுவருப்பதில் கைதேர்ந்தவர்கள் என்பதை நிரூபிக்கும் விதமாக காங்கிரஸின் செயல்பாடுகள் அமைந்து வருகின்றன.

வீரப்பன் கூட்டாளிகளுக்கு தூக்கு நாடகம்:

வீரப்பன் கூட்டாளிகள் 4பேருடைய கருணை மனுக்களையும் ஜனாதிபதி நிராகரித்து விட்டதாகவும், அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட உள்ளதாகவும் சென்ற வாரம் செய்திகள் வெளியாயின.

சங்பரிவாரர்களை திருப்திப்படுத்த அப்பாவி அப்சல் குருவை தூக்கிலிட்ட காங்கிரஸ் கயவர்கள், தாங்கள் நடுநிலையானவர்கள்தான் என்று காட்டிக்கொள்வதற்காக சோனியா காந்தியால் திரைக்கதை வசனம் எழுதப்பட்டு, மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி, ஷிண்டே ஆகியோர் நடித்து வெளியான திரைப்படம்தான், “வீரப்பன் கூட்டாளிகளுக்குத் தூக்கு” என்ற அடுத்தகட்ட நாடகமாகும்.

முஸ்லிம்களை இவர்கள் இழித்தவாயர்களாக நினைத்துக் கொண்டும், இவர்கள் ஆடக்கூடிய நாடகமும், போடக்கூடிய தெருக்கூத்தும் நமக்கு விளங்காது என்று கற்பனை செய்து கொண்டும் அரங்கேற்றிய இந்த சதித்திட்டத்தின் பின்னணி இதோ:

நாங்கள் நல்லவர்கள்; நடுநிலையானவர்கள் என்பது போலும் காட்டிக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் வீரப்பன் கூட்டாளிகள் 4பேருக்கு தூக்கு தண்டனையும் நிறைவேற்றக் கூடாது. அப்படியானால் என்ன செய்ய வேண்டும்?

வீரப்பன் கூட்டாளிகளுக்கு தூக்குதண்டனை கொடுக்கப்போகின்றோம். அவர்களுடைய கருணை மனு நிராகரிக்கப்பட்டுவிட்டது என்ற செய்தியை அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் அறிவிப்புச் செய்ய வேண்டும். அவ்வாறு அறிவிப்புச் செய்து, தூக்குதண்டனைக்குரிய கால அவகாசத்தை அவர்களுக்கு அளித்தால் அவர்கள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வார்கள். நீதிமன்றம் அவர்களது தூக்குதண்டனைக்கு தடை விதிக்கும். காரணம் என்னவெனில் அவர்கள்தான் பல வருடங்கள் சிறைச்சாலையில் இருந்துள்ளார்களே! அதுவே அவர்களுக்கான மரணதண்டனையை ரத்து செய்ய போதுமான ஆதாரம் என்று நீதிபதிகள் தீர்ப்பளிப்பார்கள்.

இப்படித்தான் தூக்கு தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட பல நபர்களை இரண்டு ஆண்டுகள் வரைக்கும் தூக்கு நிறைவேற்றப்படாமல் இருந்துள்ளதை காரணம்காட்டி உச்சநீதிமன்றம் விடுவித்துள்ளது.

காங்கிரஸ் அயோக்கியர்களின் இந்த மாஸ்டர் பிளான் இப்போது வெற்றி பெற்றுவிட்டது.

இந்த 4பேருடைய கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்த செய்தியை மீடியாக்களில் அறிவிப்புச் செய்தார்கள்.

காங்கிரஸ் கயவர்கள் சொல்லிக் கொடுத்ததுபோல அவர்களும் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்கள்.

நீதிமன்றமும் கருணை மனு பரிசீலிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வீரப்பன் கூட்டாளிகள் வைத்த வாதத்தை ஏற்று அவர்கள் 4பேருக்கும் வழங்கப்பட்ட தூக்குதண்டனையை நிறுத்தி வைத்து கடந்த 18.02.13 திங்கட்கிழமை அன்று தீர்ப்பளித்துவிட்டது. இதன் மூலம் காங்கிரஸ் அயோக்கியர்களின் மாஸ்டர் பிளான் வெற்றி பெற்றுள்ளது.

நாம் இந்த கயவர்களிடத்தில் கேட்கக்கூடிய கேள்வி,

வீரப்பன் கூட்டாளிகள் 4 பேருடைய கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்த செய்தியை ஏன் சம்பந்தப்பட்டவர்களிடமும், மீடியாக்களிடமும் சொன்னீர்கள்?


அப்சல் குருவுக்கு அவரது கருணை மனு நிராகரிக்கப்பட்டதை யாரிடமாவது சொன்னீர்களா? குறைந்தபட்சம் அவரது குடும்பத்தினருக்காவது தெரிவித்தீர்களா?


அபசல் குருவுக்கு அவரது கருணை மனு நிராகரிக்கப்பட்டவுடனேயே நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதி அளித்தீர்களா? குறைந்தபட்சம் அந்த ஒரு வாய்ப்பையாவது அப்பாவி அப்சல் குருவுக்கு வழங்கினீர்களா?


வீரப்பன் கூட்டாளிகளுக்கு மட்டும் தூக்குதண்டனையை ரத்து செய்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கிய மர்மம் என்ன?


நீண்ட நாட்கள் வீரப்பன் கூட்டாளிகள் சிறைவாசம் அனுபவித்துவிட்டதனால் அவர்களுக்கு மட்டும் இந்த சிறப்பு சலுகை என்று சொல்வீர்களானால், அப்சல் குரு 8 ஆண்டுகள் மரணதண்டனையை எதிர்நோக்கி காத்திருந்தது மட்டும் சிறிய அளவு காலமா?

அப்படியானால் அப்சல் குருவுக்கு ஒரு நீதி, வீரப்பன் கூட்டாளிகளுக்கு ஒரு நீதியா?

முஸ்லிம்களுக்கு ஒரு நீதி; முஸ்லிமல்லாதவருக்கு ஒரு நீதியா?

முஸ்லிம்கள் கண்ணில் சுண்ணாம்பும், முஸ்லிமல்லாதவர்கள் கண்ணில் வெண்ணெய்யும் வைப்பீர்களா?

அப்சல் குரு பாராளுமன்றத்தை தாக்கினார் என்பது உண்மையென்று வைத்துக் கொண்டாலும் அது தேச குற்றச் செயல் என்றால், 22 காவலர்களை குண்டு வைத்து கொலை செய்த வீரப்பன் கூட்டாளிகள் செய்த செயல் மட்டும் என்ன தேசத் தியாகமா?

அப்படியென்றால் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக அப்சல் குருவை தூக்கிலிட்டுவிட்டு, 22 காவலர்களை குண்டு வைத்துக் கொன்ற பயங்கரவாதிகளுக்கு கருணை காட்டப்படுமேயானால் இதுதான் இந்த தேசத்தில் முஸ்லிம்களை காங்கிரஸ் கையாளக்கூடிய, கவனிக்கக்கூடிய, கழுத்தறுக்கக்கூடிய விதம் என்பது அனைவருக்கும் விளங்கிவிட்டது; வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

முஸ்லிம்களை கழுத்தறுத்த காங்கிரஸ் கயவர்களுக்கு வரக்கூடிய தேர்தலில் தக்க பாடம் புகட்டப்பட வேண்டும். முஸ்லிம்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு வரும் பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு சவக்குழி வெட்ட வேண்டும்.

காங்கிரஸ் அயோக்கியர்கள் அப்சல் குருவை தூக்கிலிடவில்லை. அப்சல் குருவை தூக்கிலிட்டதன் மூலம் தனக்குத்தானே தூக்குக்கயிறை தனது கழுத்தில் மாட்டிக் கொண்டுள்ளனர் என்ற உண்மையை வரக்கூடிய தேர்தலில் அவர்கள் உணர்ந்து கொள்ளக்கூடிய வகையில் முஸ்லிம்களின் பதிலடி இருக்க வேண்டும் என்று முஸ்லிம் சமுதாயத்திற்கு உணர்வு இதழ் வேண்டுகோள் விடுக்கின்றது.

உங்களுக்கு நன்மை ஏற்பட்டால் அது அவர்களுக்குக் கவலையை ஏற்படுத்துகிறது. உங்களுக்குத் தீங்கு ஏற்பட்டால் அதனால் அவர்கள் மகிழ்கின்றனர். நீங்கள் சகித்துக் கொண்டு (இறைவனை) அஞ்சினால் அவர்களின் சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீங்கும் செய்யாது. அவர்கள் செய்வதை அல்லாஹ் முழுமையாக அறிபவன்.

அல்குர்ஆன் 3 : 120

நன்றி - ஆன்லைன் பீ ஜே 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger