குஜராத் எதில் சாதித்துதிருக்கின்றது தெரியுமா? மோடியின் வண்டவாளத் தண்டவாளத்தில் ஏற்றும் கட்சு!


இந்தியாவிலேயே வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் மாநிலம் குஜராத். அதுவும் மோடியின் தலைமையில்.மோடியை அப்படியே தூக்கி பிரதமர் பதவியில்அமர்த்திவிட்டால் இந்தியா ஒரேயடியாக முன்னேறிவிடும் என்றொரு மாயை உருவாக்கப்பட்டு வருகின்றது. இது குறித்து குஜராத்தில் தேர்தல் முடிவுகள் வெளியான கையோடு உண்மையை உடைத்து இருக்கிறார் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் தலைவர் மார்கண்டேய கட்ஜு.
அவர் தனது அறிக்கையில் குறிப்பிடுகையில்,
குஜராத்தில் மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்து இருக்கிறதா அல்லது இல்லையா என்பதனை நாம் பார்க்க வேண்டும். குஜராத் இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட மக்களின் வாழ்க்கை தரத்தில் மிகவும் பின் தங்கி உள்ளது. நிலைமை இவ்வாறிருக்க, “குஜராத் மிளிர்கிறது” என்று மக்கள் மத்தியில் ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்தி அதில் மோடி வெற்றி பெற்று விட்டார்.
2002 ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை தவிர்த்து வேறு என்ன சாதனை புரிந்து உள்ளார். பட்டியல் இதோ,.
குஜராத்தில் உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து பற்றாக்குறை 48%. இது மிகவும் ஏழ்மையான சோமாலியா நாட்டை விட அதிகம். சோமாலியாவில் வெறும் 33% மட்டுமே. இது குறித்து மோடி கருத்து தெரிவிக்கையில், குஜராத்தில் உள்ள பெண்கள் அனைவரும் உடல் குண்டாகி விடும் என்ற அச்சத்தில் பால் சாப்பிடுவதில்லை . எனவே தான் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைவாக உள்ளது என கூறுகிறார். இவையனைத்தும் முட்டாள்தனமான வாதமாகும். குஜராத் குழந்தைகள் தொழிற்சாலைகள், சாலைகள் மின்சாரத்தையா உண்ண முடியும்?
குஜராத்தில் குழந்தை இறப்பு விகிதம் 1000க்கு 48 ஆக உள்ளது. இந்த மோசமான பட்டியலில் குஜராத் இந்திய அளவில் 10ஆவது இடத்தில் உள்ளது.
குஜராத்தில் வயது வந்த ஆண்களில் மூன்றில் ஒரு பகுதியினரின் உடல் நிறை குறியீட்டு எண்(BMI) 18.5 க்கு கீழே உள்ளனர். இதில் குஜராத் இந்திய அளவில் 7வது இடம் பெற்றுள்ளது.
பேறுகால இறப்பு விகிதம் மற்ற மாநிலங்களை குஜராத்தில் தான் அதிகமாக உள்ளது.
குஜராத்தின் கல்வி, பொது சுகாதாரம், வருவாய் இந்தியாவின் மற்ற 8 மாநிலங்களை விட பின் தங்கி உள்ளது. அதாவது குஜராத் 9ஆவது இடத்தில உள்ளது.
குஜராத்தின் கிராமப்புறத்தில் 51% மக்கள் வறுமையில் வாடுகின்றனர். இதில் 57% எஸ்.சி, 49% எஸ்.டி , மற்றும் 42% பொதுப்பிரிவினர் உள்ளனர்.
மோடி குஜராத்தில், பெரும் தொழிற்சாலைகளுக்கு மலிவான மின்சாரம் மற்றும் நிலங்களை தந்ததில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. குஜராத்தில் அதிகமான வறுமை, மிகவும் குறைந்த அளவு மனித மேம்பாடு இவையே மிகைத்து நிற்கின்றன. அரசுக்கு நேரடி வருமானம் பெறுவது குறித்த நடவடிக்கைகளில் குஜராத் அரசு அதிகமான கவனம் செலுத்துகின்றது. ஆனால் அதையெல்லாம் தூக்கி சாப்பிடுகின்ற அளவில் குஜராத்தில் வறுமை தாண்டவமாடுகின்றது. மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு எந்த விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்பதே நிதர்சனம்.
இந்த உண்மையை கண்டிப்பாக ஒருநாள் குஜராத் மக்கள் உணர்வார்கள்,
என தனது கட்டுரையிலே மார்கண்டேய கட்ஜு குறிப்பிட்டு உள்ளார்.
தமிழில்.. அஜ்மல்
நன்றி - tntj.net 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger