அறிவு சூன்யங்களின் அர்த்தமற்ற வாதங்கள்

இஸ்லாத்தின் மூலஆதாரங்கள் குர்ஆன், ஹதீஸ் என்ற இரண்டே அடிப்படைகள் தான்அவ்விரண்டைத்தாண்டி வேறெதுவும் ஆதாரமாகாது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

ஆனால் தங்களைத் தாங்களே சுன்னத் வல்ஜமாஅத் என்று பிதற்றிக் கொள்கின்ற ஒரு போலிஜமாஅத்தினர் தங்களது மாதப் பத்திரிகையில் ஒரு கேள்வி பதிலில் குர்ஆனையும் ஹதீஸையும் தூக்கிஎறிந்து விட்டு தங்கள் மனோ இச்சைப்படி அளிக்கின்ற விளக்கத்தைப் பாருங்கள்.
"குத்பியத்அதாவது முஹ்யித்தீன் அவர்களின் பெயரை ஓதக் கூடாதுஅவ்வாறு ஓதினால் ஷிர்க் என்றுஒரு ஆலிம் கூறுகிறார்இதற்கு உங்கள் பதில் என்ன?''
இவ்வாறு ஒருவர் அந்தப் பத்திரிகையில் கேள்வி கேட்கிறார்.
அதற்கு இவர்கள் அளிக்கும் பதில்:
பாத்திஹா சூராவுக்குப் பின் குல்ஹுவல்லாஹு சூரா ஓதி 12 ரக்அத்துகள் தொழுதுவிட்டு பிறகுதனிமையில் எனது பெயரை ஆயிரம் முறை கூறி அழைத்தால் அவரின் அழைப்புக்கு நான்பதிலளிப்பேன் என்று மகான் கௌதுல் அஃழம் அவர்கள் கூறியுள்ளார்கள்அதனை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டதே குத்புல் அக்தாப் அவர்களை அழைக்க வழிகாட்டும் குத்பிய்யா எனும்முறையாகும்.
அழைத்தால் வருவார்களாஇல்லையா என்பதற்கு குர்ஆன் ஹதீஸ் ஒளியில் ஆதாரம் காட்டலாகாது.மாறாக அழைத்தால் வருவார்கள் என்பது எனது கூற்றுஏனெனில் நாம் நடத்தில் குத்பிய்யாக்களில்மகான் வருகை தந்துள்ளார்கள்அதற்கு சாட்சி உண்டுநிரூபணம் செய்ய இயலும்வரமாட்டார்கள்என்று சொல்பவர் நாம் நடத்தும் குத்பிய்யத்தில் பங்கேற்று மகான் முஹ்யித்தீன் ஆண்டகையைக்கண்டு கொண்டால் அவர் ஒரு லட்சம் ரூபாய் நமது பணி சிறக்க தந்துதவ வேண்டும்அவ்வாறு காட்சிகிடைக்கவில்லையெனில் குத்பிய்யத் கூடாது என்று நாமே இதை நமது பத்திரிகையில்வெளியிடுவோம்.
முஹ்யித்தீன் அப்துல் காதிரை அழைத்தால் வருவார் என்பதற்கு இதுதான் இவர்களின் முதல்ஆதாரமாம்.
"குர்ஆன்ஹதீஸ் ஒளியில் ஆதாரம் காட்டலாகாதுஆனால் அழைத்தால் வருவார்கள் என்பது எனதுகூற்று''
இந்த வார்த்தைகளைப் படித்துப் பாருங்கள்எவ்வளவு விஷத்தை இவர்கள் திமிராகக் கக்குகின்றனர்என்பதைத் தெரிந்து கொள்ளலாம்இதில் இவர்களின் இறைமறுப்பு இரண்டு விதமாகவெளிப்படுகின்றது.
ஒன்றுகுர்ஆன் ஹதீஸை ஆதாரமாகக் கொள்ள முடியாது என்ற கருத்துஅதாவது குர்ஆன்ஹதீஸ்அடிப்படையில் ஆதாரம் காட்ட வேண்டிய அவசியம் இல்லைஅதற்கு எந்தத் தேவையுமில்லைஎனதுமனம் சொல்வது மார்க்கம் என்று வெளிப்படையாக இந்த நூலாசிரியர் தெரிவிக்கின்றார்.
தனது மனோ இச்சையைத் தனது கடவுளாகக் கற்பனை செய்தவனைப் பார்த்தீராஅவனுக்கு நீர்பொறுப்பாளர் ஆவீரா?
அல்குர்ஆன் 25:43
இந்த வசனத்தின்படி இந்த ஆசாமி தன்னைத் தெளிவான இறைமறுப்பாளன் என்று பகிரங்கவாக்குமூலம் கொடுக்கின்றார்.
இரண்டாவதாகஅல்லாஹ் திருக்குர்ஆனில் இறந்தவர்கள் வர மாட்டார்கள் என்று கூறுகின்றான்.
முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது "என் இறைவாநான் விட்டு வந்ததில்நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!'' என்று கூறுவான்அவ்வாறில்லைஇது(வாய்வார்த்தை தான்அவன் அதைக் கூறுகிறான்அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரைஅவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.
அல்குர்ஆன் 23:100
இறந்தவர்களுக்கும் உயிருடன் இருப்பவர்களுக்கும் மத்தியில் ஒரு திரை இருக்கின்றதுஅந்தத்திரையைத் தாண்டிக் கொண்டு இவ்வுலகிற்கு வரமுடியாது என்று அல்லாஹ் கூறுகின்றான்.
ஆனால் இவர்களோ இறந்தவர்கள் வருவார்கள் என்பது எனது கூற்று என்று அல்லாஹ்வின் கூற்றுக்குஎதிராகச் சவால் விடுகின்றனர்இறை முழக்கத்திற்கு எதிர் முழக்கமிடுகின்றனர்.
அளவு கடந்த அகங்காரத்திலும் ஆணவத்திலும் அல்லாஹ்வுக்கு எதிராகப் பேசுகின்றனர்இறந்தவர்கள்திரும்ப வருவார்கள் என்று சொல்வது ரஜயிய்யத் எனும் ஷியாக்களின் கொள்கையாகும்இந்தக்கொள்கையை அப்படியே பின்பற்றுகின்றனர் பரேலவிகள்.
ஐயமும் தெளிவும் என்று பதிலளிக்கும் இந்த அனாமதேயம் ஓர் அறிவுசூன்யம் என்பதற்கும்அரைவேக்காடு என்பதற்கும் ஆதாரமாகஇவர்கள் எடுத்து வைக்கும் அறிவு கெட்ட வாதத்தைப்பாருங்கள்.
வரமாட்டார்கள் என்று சொல்பவர் நாம் நடத்தும் குத்பிய்யத்தில் பங்கேற்று மகான் முஹ்யித்தீன்ஆண்டகையைக் கண்டு கொண்டால் அவர் ஒரு லட்சம் ரூபாய் நமது பணி சிறக்க தந்துதவ வேண்டும்
இந்தச் சவாலும் இறைவனுக்கு எதிராக விடுக்கும் சவால் தான்.
அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே.நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்அவர்கள் உங்களுக்குப்பதில் தரட்டும்! அவர்களுக்கு நடக்கின்ற கால்கள் உள்ளனவாஅல்லது பிடிக்கின்ற கைகள் உள்ளனவா?அல்லது பார்க்கின்ற கண்கள் உள்ளனவாஅல்லது கேட்கின்ற காதுகள் உள்ளனவா? "உங்கள்தெய்வங்களை அழைத்து எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்!''என்று கூறுவீராக!
அல்குர்ஆன் 7:194, 195
எதை அல்லாஹ் முடியாது என்று உறுதியாக மறுக்கின்றானோ அதை இவர்கள் உறுதியாக வருவார்கள்என்று நம்பிச் சொல்வது மட்டுமல்லாமல் சவாலும் விடுக்கின்றனர்சன்மானம் தருவதாகப்பிதற்றுகின்றனர்இந்தப் பரேலவிகளுக்குப் பகிரங்கமாக நாம் மறு சவால் விடுக்கின்றோம்.
ஒரு லட்சம் என்னஒரு கோடி தருகின்றோம்குறுகிய வீட்டுக்குள்கும்மிருட்டுக்குள்கும்மாளமிட்டு,கூப்பாடு போட்டு உங்கள் கடவுள் முஹ்யித்தீனை அழைத்துமாவுக் குவியலில் யாராவது ஒருவர்காலை வைத்து எடுத்து விட்டு இது முஹ்யித்தீனின் கால் என்று கூறி உங்கள் முட்டாள் பக்தர்களைஏமாற்றுவது போல் எங்களை ஏமாற்ற முடியாது.
நாங்கள் எங்கள் மக்களுடன் வருகிறோம்நீங்களும் உங்கள் குருட்டு பக்தர்களுடன் வாருங்கள்திறந்தவெளியில் பகிரங்கமாக எங்களுக்கு உங்கள் அப்துல் காதிர் ஜீலானி கடவுளைக் காட்டுங்கள்இன்னதேதியில் முஹ்யித்தீன் வருகிறார்வந்து பாருங்கள் என்று பகிரங்கமாக உங்கள் பத்திரிகையில்தேதியைக் குறிப்பிட்டு எங்களுக்கு அழைப்பு விடுங்கள் பார்ப்போம்செத்துப் போன அப்துல் காதிர்ஒருக்காலும் வர மாட்டார் என்று நிரூபித்துக் காட்ட நாங்கள் தயார்.
இரண்டாவது ஆதாரம்?
நபி (ஸல்அவர்கள் ஒருமுறை உஹத் மலையைப் பார்த்து யா உஹத் என்று அழைத்திருக்கிறார்கள்என்ற தகவல் முஸ்லிம் கிரந்தத்தில் பதிவாகியுள்ளது.
நமக்குத் தெரிந்து இப்படி ஒரு ஹதீஸ் முஸ்லிமில் இடம்பெறவில்லைமுஸ்லிமில்நபி (ஸல்)அவர்கள்உஹத் என்று அழைத்ததாக இல்லைஅதற்குப் பதிலாக ஹிரா என்ற வார்த்தைஇடம்பெற்றுள்ளதுஅதே சமயம் இந்த ஹதீஸ் புகாரியில் இடம் பெற்றுள்ளது.
நபி (ஸல்அவர்களும் அபூபக்ர்உமர்உஸ்மான் (ரலிஆகியோரும் உஹுது மலை மீது ஏறினார்கள்.அது அவர்களுடன் நடுங்கியதுஅப்போது நபி (ஸல்அவர்கள், "உஹுத்அசையாமல் இருஏனெனில்,உன் மீது ஓர் இறைத்தூதரும் (நானும்)ஒரு சித்தீக்கும்இரு உயிர்த் தியாகிகளும் உள்ளனர்'' என்றுசொன்னார்கள்.
அறிவிப்பவர்அனஸ் (ரலி)

நூல்
புகாரி 3675, 3686
இதில் உஹதே (யா உஹத்என்று இடம்பெறாமல்உஹத் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளதுஒருபேச்சுக்கு நபி (ஸல்அவர்கள்உஹதே என்று அழைத்திருந்தாலும் உஹத் மலையிடம் உதவி கேட்டுஅழைக்கவில்லை என்பதை இந்த ஹதீஸ் கூறுகின்ற கருத்திலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
நபி (ஸல்அவர்கள் உஹதே என்று கூப்பிட்டதால் நாம் முஹ்யித்தீனே என்று கூப்பிடலாம் என்றுவாதிடுவது மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதாகும்இவர்களுக்குத்தலையில் மூளைக்குப் பதில் களிமண் தான் இருக்கின்றது என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
நபி (ஸல்அவர்கள் உஹதை அழைத்ததாக ஆதாரம் காட்டும் இவர்கள் உஹதையே உதவிக்குஅழைக்கலாமேஅப்துல் காதிரை நபியவர்கள் அழைக்கவில்லைஉஹதைத் தான் அழைத்துள்ளார்கள்.அப்படியானால் இருட்டில் அழைப்பதற்கு அப்துல் காதிரை விட உஹத் மலை மேலானதாகும் என்பதுஇவர்களின் வாதத்திலிருந்து புலப்படுகிறது.
நபி (ஸல்அவர்கள் உஹதிடம் பேசியதால் உஹத் மலை செவியேற்கின்றது என்று இவர்கள்நம்புவதில்லைஆனால் செத்துப் போன முஹ்யித்தீன் செவியேற்பார் என்பதற்கு மட்டும் இதைஆதாரமாகக் காட்டுவதிலிருந்து இவர்களின் புரட்டு வாதத்தைப் புரிந்து கொள்ளலாம்.
நபி (ஸல்உஹதைக் குறிப்பிட்டுப் பேசுவது இலக்கியமாகச் சொல்லப்பட்டதாகும்தென்றல் காற்றேகொஞ்சம் நில்லு,,, என்று சொன்னால் தென்றல் காற்றுக்குக் கேட்கும் ஆற்றல் இருக்கின்றது என்று நம்பியாரும் சொல்வதில்லைஅருள்மிகு ரமளானே வருக என்று கூறுகின்றனர்இதனால் நாம் சொல்வதைரமளான் கேட்கிறது என்று அர்த்தமில்லைஇவ்வாறு பேச்சு வழக்கில் சொல்லப்படுவதைப் போன்றுதான் நபி (ஸல்அவர்கள் இங்கு உஹத் மலையிடம் பேசுகின்றார்கள்.
மூன்றாவது ஆதாரம்?
"என் இறைவாஇறந்தோரை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காட்டுவாயாக!'' என்றுஇப்ராஹீம் வேண்டிய போது, "நீர் நம்பிக்கை கொள்ளவில்லையா?'' என்று (இறைவன்கேட்டான்.அதற்கவர் "அவ்வாறல்லமாறாக எனது உள்ளம் அமைதியுறவே'' என்றார். "நான்கு பறவைகளைப்பிடிப்பீராகஅவற்றைத் துண்டு துண்டாக வெட்டி உம்மிடம் வைத்துக் கொள்வீராகபின்னர் அவற்றில்ஒரு பகுதியை ஒவ்வொரு மலையின் மீதும் வைப்பீராகபின்னர் அவற்றை அழைப்பீராகஅவைஉம்மிடம் விரைந்து வரும்அல்லாஹ் மிகைத்தவன்ஞானமிக்கவன் என்பதை அறிந்து கொள்வீராக''என்று (இறைவன்கூறினான்.
(அல்குர்ஆன் 2:260)
இறந்த பறவைகளை அதன் பெயர் கூறிமயிலேபுறாவேகோழியேகாகமே என்று அழைத்ததால்ஷிர்க்கை எதிர்த்துப் போராடிய இப்ராஹீம் நபி ஷிர்க் வைத்து விட்டார் என்று கூறுவார்களா?
இப்ராஹீம் நபி உதவி தேடும் நோக்கில் அழைக்கவில்லைஅல்லாஹ் அவர்களுக்குக் காட்டியஅற்புதத்தைக் காணஅவனது கட்டளைப்படி அழைத்தார்கள் என பளிச்சென்று தெரியும் இந்தவிஷயத்தை சம்பந்தமில்லாமல் பொருத்துகின்ற இவர்களின் புத்தியை எப்படி மெச்சுவது என்றேதெரியவில்லை.
இப்ராஹீம் நபி செத்த பறவையை அழைத்துள்ளார்கள்சுலைமான் நபி உயிருள்ள பறவையைஅழைத்துள்ளார்கள்இன்னும் பலவற்றையும் அழைத்துள்ளனர்இவை இறைத்தூதர் என்ற சிறப்புத்தகுதியின் அடிப்படையில் அழைத்ததாகும்.
இது இறைத்தூதர்களுக்கான சிறப்புத் தகுதி என்று இந்தக் கூறுகெட்டவர்களும் நினைப்பதால் தான்செத்துப் போன பறவைகளையும் பாம்பையும் பல்லியையும் உஹது மலையையும் இவர்கள்அழைப்பதில்லைதாங்கள் எதை நம்பவில்லையோ அதை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.
இங்கு அழைப்பவர்கள் உயர்வானவர்களாகவும்அழைக்கப்படுபவர்கள் ஆற்றல் குறைந்தவர்களாகவும்இருக்கின்றனர்இதை இவர்கள் ஆதாரமாகக் காட்டுவதன் மூலம் அப்துல்காதிர் ஜீலானி செத்தபறவையைப் போன்றவர்கள் என்பதை ஒப்புக் கொள்கின்றார்கள் என்று தான் அர்த்தம்.
நான்காவது ஆதாரம்?
திருக்குர்ஆனில் யா ஜிபாலு (மலைகளேஎன்று அல்லாஹ் அழைத்துள்ளான்மலைகளை அழைப்பதுகூடும் என்று திருமறையும் நபிமொழியும் கூறும்போது திருக்குர்ஆனைச் சுமக்க மறுத்த மலைகளையேஅழைக்க அனுமதியிருக்கும் போதுதிருக்குர்ஆனாகவே வாழ்ந்த மாபெரும் இறைநேசச் செல்வரின்பெயர் கொண்டு அழைப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?
அல்லாஹ் மலைகளை அழைக்கின்றான்அழைத்துசெய் என்று கட்டளையிடுகின்றான்மலைகள்அல்லாஹ்வின் படைப்பாகும்அவை அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டாக வேண்டும்இது ஓர்அதிகார உத்தரவு.
முஹ்யித்தீனை உதவி கேட்டு அழைக்கும் அழைப்பும் அல்லாஹ்வின் அழைப்பும் ஒன்றாஒருபோதும்ஒன்றாகாது.
வானம்நெருப்புமலை உள்ளிட்டவைகளை அல்லாஹ் அழைத்துள்ளான்இங்கே அழைக்கப்படுவதுஅற்பமாகவும் அழைப்பவன் உயர்வாகவும் இருக்கும் நிலை உள்ளதுஅப்துல் காதிர் எங்களை விடஅற்பமானவர் என்று இதன் மூலம் ஒப்புக் கொள்கிறார்கள்.
அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட வேண்டும்அல்லாஹ்வை பின்பற்ற கூடாதுஅதாவதுஅல்லாஹ் செய்வதையெல்லாம் நானும் செய்வேன் என்று கூறக்கூடாதுஅது சாத்தியமும் இல்லைஎன்ற சாதாரண அறிவு கூட இவர்களுக்கு இல்லை.
அல்லாஹ் அழைப்பதால் நானும் அழைப்பேன் எனக் கூரும் இந்தக் கூறு கெட்டவர்கள்அல்லாஹ்சாப்பிடுவதில்லை என்பதால் நாங்கள் சாப்பிட மாட்டோம் என்பார்களாஅல்லாஹ் மலஜலம்கழிப்பதில்லைஎனவே நாங்களும் மலஜலம் கழிக்க மாட்டோம் என்பார்களா?
அல்லாஹ் தூங்குவதில்லைஅவனுக்கு எந்தப் பலவீனமும் இல்லைநாங்களும் அல்லாஹ்வைப்போன்றவர்கள் என இந்தக் கபோதிகள் சொல்வார்களா?
அல்லாஹ் சாக மாட்டான்இவர்களும் சாக மாட்டார்களாஇவர்கள் வணங்கும் அப்துல் காதிரேசெத்துப் போய் விட்டாரே!
அல்லாஹ் படைப்பவன்இவர்களும் அல்லாஹ்வைப் போல் படைக்கப் போகிறார்களா?
செத்துப் போன அப்துல் காதிரை இதுவரை அல்லாஹ்வுக்கு இணையாக்கி வந்தனர்இப்போதுதங்களையே அல்லாஹ்வுக்கு இணையாக்கி அல்லாஹ் செய்ததை நான் செய்வேன் எனக் கூறுகின்றனர்.இதிலிருந்து இவர்கள் எத்தகைய கேடுகெட்ட கொள்கையில் இருக்கின்றார்கள் என்பதை விளங்கலாம்.
அத்துடன்திருக்குர்ஆனை மறுத்த மலைகள் என்று குறிப்பிடுகின்றனர்இந்தக் குர்ஆனை அல்லாஹ்மலைக்குக் கொடுத்து அது மறுத்ததாக இவர்களுக்கு வஹீ வந்ததா என்று தெரியவில்லைஅல்லாஹ்தனது திருமறையில் மலைகள் மறுத்ததாகக் கூறவில்லை.
இந்தக் குர்ஆனை ஒரு மலையின் மீது நாம் இறக்கியிருந்தால் அது அல்லாஹ்வின் அச்சத்தால்பணிந்து நொறுங்கி விடுவதைக் காண்பீர்மனிதர்கள் சிந்திப்பதற்காக இந்த உதாரணங்களைஅவர்களுக்குக் கூறுகிறோம்
(அல்குர்ஆன் 59:21)
குறிப்பு
33:72 வசனத்தில் குர் ஆனை ஏற்க மலைகள் மறுத்ததாக சொல்லப்படவில்லை. மாறாக அமானித்த்ஹை மறுத்த்தாகத் தான் சொல்லப்பட்டுள்ளது. அந்த அமானிதம் எது என்பதை அறிய
http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/446-manithan-sumantha-amanitham-ethu/
ஐந்தாவது ஆதாரம்?
தூரத்தில் இருக்கும் ஒரு மனிதரை பல மைல்களுக்கு அப்பாலிருந்து அம்மனிதரின் பெயர் சொல்லிஅழைப்பது கூடும்அவ்வாறு தான் சாரி என்பவர் மலையேறும் போது பல மைல்களுக்கு அப்பாலிருந்துயா சாரி என்று உமர் (ரலிஅழைத்தார்கள்உமர் (ரலிஅவர்களின் குரல் சாரியாவின் காதில் விழுந்ததுஎன்று வரலாற்றில் பதிவாகியுள்ளது.
இது பலவீனமான செய்தியாகும்இந்தச் செய்தி அபூ நுஐம் உஸ்புஹானீ என்பவர் தொகுத்த தலாயிலுன்நுபுவ்வா எனும் நூலிலும் இமாம் பைஹகீ அவர்களின் அல்இஃதிகாத் எனும் நூலிலும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
உமர் (ரலிஅவர்கள் சாரியா என்பவரின் தலைமையில் ஒரு படையைப் போருக்கு அனுப்பினார்கள்.உமர் (ரலிஅவர்கள் ஜும்ஆ தினத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கையில் தன் உரையின் இடையே, "சாரியாவே அந்த மலைக்குள் செல்சாரியாவே அந்த மலைக்குள் செல்'' எனக் கூறினார்கள்போர்நடந்து கொண்டிருந்த இடத்துக்கும் உமர் (ரலிஅவர்கள் இருந்த இடத்துக்கும் இடையே ஒரு மாதகாலம் பயணம் செய்யத் தக்க தொலைவு இருந்ததுஉமர் (ரலிஅவர்கள் இங்கிருந்து எழுப்பியசப்தத்தை படைத் தளபதி சாரியா அங்கே செவியுற்று மலைக்குள் சென்றார்இதன் பிறகு வெற்றிகிடைத்ததுஇவ்வாறு மேற்கண்ட செய்தி கூறுகின்றது.
நூல்தலாயிலுன் நுபுவ்வா 509
இந்தச் செய்தி பல வழிகளில் வந்துள்ளதுஇவையனைத்தும் பலவீனமாகவே உள்ளனமேலுள்ளஅறிவிப்பில் அய்யூப் பின் கூத் என்பவர் இடம்பெற்றுள்ளார்.
இமாம் புகாரிநஸாயீஅபூஹாதிம்ஹாகிம்அஹ்மது பின் ஹம்பள்தாரகுத்னீஅபூதாவுத் மற்றும்பல அறிஞர்கள் இவர் பலவீனமானவர் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளனர்.
நூல்தஹ்தீபுத் தஹ்தீப் பாகம்1, பக்கம்402
அம்ர் பின் ஹாரிஸ் என்ற நபித்தோழர் வழியாகவும் இந்தச் செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தலாயிலுன் நுபுவ்வா எனும் நூலில் 514வது செய்தியாக இடம் பெற்றுள்ளது.
இந்த அறிவிப்பில் அம்ர் பின் ஹாரிஸ் (ரலிஅவர்களிடமிருந்து லைஸ் பின் சஅத் என்பவர்அறிவிக்கின்றார்லைஸ் நம்பகமானவர் என்றாலும் இவர் அம்ர் பின் ஹாரிஸ் (ரலிஅவர்களைச்சந்திப்பதற்கு அறவே வாய்ப்பில்லை.
அம்ர் பின் ஹாரிஸ் (ரலிஹிஜ்ரீ 51ல் மரணிக்கின்றார்லைஸ் ஹிஜ்ரீ 175ல் மரணிக்கின்றார்அம்ர்(ரலிஅவர்களின் மரணத்துக்கும் லைஸ் அவர்களின் மரணத்துக்கும் இடையே 124 வருடங்கள்வித்தியாசம் உள்ளதுஇவர் அம்ர் (ரலிஅவர்களைச் சந்திக்கவில்லை என்பது இதன் மூலம்தெளிவாகின்றதுஎனவே அம்ர் (ரலிஅவர்களுக்கும்லைஸ் அவர்களுக்கும் இடையே குறைந்தது ஒருஅறிவிப்பாளராவது விடுபட்டு இருப்பார்விடுபட்ட இந்த நபர் யார்அவரது நம்பகத்தன்மைஎத்தகையதுஎன்பதைப் பற்றி எந்த விபரமும் இல்லைஇதன் காரணத்தால் இந்த அறிவிப்பும்பலவீனமானதாகும்.
இந்தச் செய்தி முஹம்மது பின் அஜ்லான் என்பவர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதுஇதுதலாயிலுன் நுபுவ்வா என்ற நூலில் 512வது செய்தியாக இடம் பெற்றுள்ளது.
இந்த அறிவிப்பில் முஹம்மத் பின் அஜ்லான் என்ற நபர் இடம் பெற்றுள்ளார்இவரின் நினைவாற்றல்தொடர்பாக ஹதீஸ்கலை அறிஞர்கள் குறை கூறியுள்ளனர்இமாம் ஹாகிம் உட்பட பலர் இவர்நினைவாற்றல் குறைவுடையவர் என்று விமர்சனம் செய்துள்ளனர்இதனால் தான் இமாம் முஸ்லிம்அவர்கள் இவர் இடம் பெறும் ஹதீஸ்களைத் தனி ஆதாரமாகப் பதிவு செய்யவில்லைஇவருடையகருத்துக்கு ஏற்றவாறு நம்பகமானவர்கள் ஹதீஸ்களை அறிவித்திருந்தால் மட்டுமே இவருடையசெய்திகளைப் பதிவு செய்வார்கள்.
இந்தச் செய்தி அறிவிப்பாளர் தொடர் ரீதியில் பலவீனமாக இருப்பதுடன் இதன் கருத்து குர்ஆனுடன்மோதும் வகையில் அமைந்துள்ளது.
மனிதப் பார்வை அடையாத வெகு தொலைவில் நடந்த நிகழ்வை உமர் (ரலிஅவர்கள் அறிந்துகொண்டார்கள் என இந்தக் கதை கூறுகின்றதுஇறைவனுக்கு மட்டும் உரிய மறைவான ஞானம் என்றஅம்சம் உமர் (ரலிஅவர்களிடமும் இருந்தது என்ற கருத்தை இது கொடுக்கின்றதுஇது இணைவைப்பாகும்.
மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளனஅவனைத் தவிர யாரும் அதை அறியமாட்டார்.
(அல்குர்ஆன் 6:59)
தூதர்களை அல்லாஹ் ஒன்று திரட்டும் நாளில் "உங்களுக்கு என்ன பதில் அளிக்கப்பட்டது?'' என்றுகேட்பான். "எங்களுக்கு (இது பற்றிஎந்த அறிவும் இல்லைநீயே மறைவானவற்றை அறிபவன்'' என்றுஅவர்கள் கூறுவார்கள்.
(அல்குர்ஆன் 5:109)
உமர் (ரலிஅவர்களுக்கு இதை இறைவன் அறிவித்துக் கொடுத்திருப்பான் என்று கூற முடியாது.ஏனென்றால் இறைவன் சில நேரங்களில் சில மறைவான விஷயங்களைத் தன் தூதர்களுக்கே கற்றுக்கொடுப்பான்இவ்வாறு இறைவன் அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பது கூட அதை அவர்கள் மக்களுக்குஎத்தி வைக்க வேண்டும் என்பதற்காகத் தான்எனவே நபிமார்கள் அல்லாத மற்றவர்களுக்கு இறைவன்மறைமுகமான விஷயங்களை கற்றுக் கொடுக்க மாட்டான்.
அவன் மறைவானதை அறிபவன்தனது மறைவான விஷயங்களை அவன் பொருந்திக் கொண்டதூதரைத் தவிர யாருக்கும் வெளிப்படுத்த மாட்டான்அவர்கள் தமது இறைவனின் தூதுச் செய்திகளைஎடுத்துச் சொன்னார்களா என்பதை அறிவிப்பதற்காக அவருக்கு முன்னும்அவருக்குப் பின்னும்கண்காணிப்பாளரை ஏற்படுத்துகிறான்அவர்களிடம் உள்ளதை அவன் முழுமையாக அறிவான்.ஒவ்வொரு பொருளையும் அவன் எண்ணிக்கையால் அறிவான்.
அல்குர்ஆன் 72:26
எனவே உமர் (ரலிஅவர்கள் பல மைல் தூரத்துக்கு அப்பாலிருந்து அழைத்ததாக இடம் பெறும் செய்திபலவீனமானதும் திருக்குர்ஆனுக்கு முரணானதுமாகும்.
ஆறாவது ஆதாரம்
நாம் யாமுஹ்யித்தீன் என்று அழைத்தால் கவ்துல் அஃலம் அவர்களுக்குக் கேட்கும் என்பதைப்பின்வரும் சம்பவம் நிரூபிக்கின்றது.
முஹ்யித்தீன் அப்துல் காதிர் வாழ்ந்த காலத்தில் வழிப்பறிக் கொள்ளையர்கள் ஒரு பிரயாணக்கூட்டத்தை வழிமறித்து கொள்ளையடிக்க முயன்றனர்அப்பொழுது பிரயாணிகளில் ஒருவர் யாமுஹ்யித்தீன் என்று சப்தமிட்டு அழைத்தார்பல மைல்களுக்கு அப்பாலிருந்த முஹ்யித்தீன் அப்துல்காதிர் ஜீலானி அவர்களின் காதில் விழுந்தவுடன் தாம் அணிந்திருந்த செருப்பில் ஒன்றை வேகமாகவீசினார்கள்அச்செருப்பு கொள்ளையர்களை அடிக்க ஆரம்பித்தவுடன் கொள்ளையடித்த பொருட்களைதிருப்பிக் கொடுத்துவிட்டு ஓடிவிட்டார்கள்.
இது மவ்லிதுக் கிதாபில் வருகின்ற ஒரு குப்பை சம்பவமாகும்.
நபி (ஸல்அவர்கள் சொன்னதாக வருகின்ற செய்தியே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அதுபலவீனமானதாக இருந்தால் ஆய்வில் அந்தச் செய்தி கண்ணுக்குத் தெரியாத கரைசலாகி விடும் எனும்போது இந்தக் குப்பை சம்பவம் எம்மாத்திரம்இநதக் குப்பையை ஓர் ஆதாரமாகக் காட்ட இவர்கள்முன்வருகிறார்கள் என்றால் இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நன்கு விளங்கிக் கொள்ளலாம்.
இந்தக் கதையின் அடிப்படையில் முஹ்யித்தீனை அழைக்கலாம் என்றால்கல்லையும் மண்ணையும்கடவுளாக வழிபடும் மக்கள் இதை விட அற்புதக் கதைகளைச் சொல்கிறார்களேஅதை நம்பிகல்லைவணங்கச் சொல்வார்களா?
பிள்ளையாரும் முருகனும் சிவனும் இதுபோன்று ஆபத்துக் காலங்களில் நேரில் வந்து உதவிசெய்ததாக ஏராளமான கதைகள் உள்ளனஅவற்றையெல்லாம் நம்பி இவர்களை வணங்கப்போகிறார்களாசமாதியை வணங்கும் இவர்கள் அதையும் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
பரேலவிகள் அறிவு மழுங்கிய சூன்யங்கள் என்பதற்கு அவர்களின் அர்த்தமற்ற இந்த வாதங்கள்ஆதாரமாக அமைந்துள்ளன.
நன்றி - onlinepj.com 
நன்றி - ஏகத்துவம்  டிசம்பர் 2012
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger