“சமூக தளத்தில்” ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் - SMOKING GUNS

புகைப்பட உதவி : jaffnamuslim.com

ன்று மாலை 05.00 மணிக்கு கொம்பனி வீதி நிப்போன் ஹோட்டலில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமா-அத் ஒரு ஊடகவியளாலர் மாநாட்டினை நடாத்தி முடித்தது. முதன் முறையாக அவர்களால் நடாத்தப்பட்ட ஊடகவியளாலர் மாநாடாக இருந்த போதும் சுமார் 40 நிமிடங்களுல் அவர்கள் தெளிவாக அவர்கள் தங்கள் செய்தியை இலங்கை மக்களிற்கும், உலகிற்கும் முன்வைத்துள்ளனர்.


  • ஷர்மிளா செய்யதின் கருத்துக்களிற்கு எதிரான வன்மையான கண்டனம்
  • காஸாவின் மேல் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலிற்கு எதிரான கண்டனம்
  • விஸ்வரூபம் தமிழ் திரைப்பத்தை இலங்கையில் தடை செய்யும் நடவடிக்கை
ஷர்மிளா செய்யத்
இவர் லண்டன் பீ.பீ.சி.க்கு அளித்த பேட்டியில் “ பாலியல் தொழிலை இலங்கையில் சட்டபூர்வமாக்குவதன் ஊடாக உல்லாச பிரயான துறையை அபிவிருத்தி செய்யலாம்” என்று கூறியமை இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் அவமதிக்கும் செயல் எனவும், இது மார்க்கத்திற்கு முரணான சிந்தனை வெளிப்பாடு எனவும், “பித்னா” என்ற குழப்பம் செய்பவர்களிற்கான இஸ்லாத்தின் தீர்ப்பு பற்றியும் குறிப்பிட்டிருந்தனர். 

மௌனமாக வேடிக்கை பார்க்கும் நிகழ்வல்ல இது. இவ்வாறன கருத்துக்களை தடுத்து நிறுத்துவது சமூகத்தின் கூட்டு கடமை என வலிறுத்தியதுடன் இது வரையும் ஷர்மிளா செய்யத் தன் தவறை ஒப்பு கொள்ளாமல் தன் அவ்வாறு செய்ததற்கான காரணங்களையும், சாட்டுக்களையும் சொல்லி வருவது அவர் அடிப்படையில் மாறவில்லை என்பதை குறிக்கின்றது. இன்னொரு தஸ்லிமா நஸ்ரின் உருவாவதற்கான வாய்ப்புக்களை இது உருவாக்கும் என்பதனை தெளிவுபடுத்தினர். கூடவே ஷர்மிளா செய்யத்தினை நேரடியாக அனுகி, இஸ்லாத்தில் ஆண் பெண் உறவு பற்றிய உன்னதமான கருத்துக்களை அவரிற்கு விளக்குவதுடன், ரித்தத், பித்னா போன்றவற்றின் பாரதூரங்களையும் விளக்க வேண்டும் என்பதனையும் வலியுறுத்தினர். 

காஸா
காஸா மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற்கு எதிரான தமது வன்மையான கண்டனத்தை வெளியிட்ட ஜமாத்தினர், பலஸ்தீனம் பலஸ்தீனர்களிற்கே என்பதனை மீண்டும் வலியுறுத்துவதாக தெரிவித்தனர். இஸ்ரேலிற்கு ஆதரவாக மேற்கு நாடுகள், அமெரிக்கா போன்ற செயற்படும் போக்கையும் இவர்கள் கண்டிக்க தவறவில்லை. 

சண்டை நிறுத்தம் ஏற்பட்ட பின்னரும் 50இற்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் கைது செய்யப்பட்டதனை சுட்டிக்காட்டிய ஜமாத்தினர் இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் என்பது பக்கச்சார்பானது, நியாயமற்றது என சாடினர். 57 நாடுகளை கொண்ட இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு வெறுமனே பார்த்துக்கொண்டிருக்காமல் ஆக்கபூர்வமாக செயற்படல் வேண்டும் எனும் கோரிக்கையையும் விடுத்த ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தினர், இலங்கை அரசு காஸா விவகாரத்தில் என்ன நிலையை எடுத்துள்ளது என்பதனை தெளிவு படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். 

விஸ்வரூபம் திரைப்படம்
கமலஹாஸன் நடித்து வெளியாகவுள்ள விஸ்வரூபம் திரைப்படத்தில் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகவும், கொலைகாரர்களாகவும் சித்தரித்து இருப்பதை சுட்டிக்காட்டியதுடன், துப்பாக்கி போன்ற ஏனைய தமிழ் சினிமாக்களிலும் முஸ்லிம்கள் பற்றிய தவறான பயங்கரவா சிந்தனை கொண்ட கற்பிதங்களை இவை இலகுவாக உருவாக்க வல்லன என்றும் சுட்டிக்காட்டினர். 

ஏற்கனவே இனவாதம் மேலெழுந்துள்ள இலங்கையில் இவ்வாறான படங்கள் வெளியானால் அவை இனவாதிகளின் கருத்துக்களிற்கு பக்கபலமான ஆதராங்களாகவே மக்களை சென்றடையும், இதனால் ஏற்படும் சமூகவியல் சிந்தனை மாற்றம் என்பது இலங்கை முஸ்லிம்களை பாரிய பிரச்சனைகளை முகங்கொடுக்கும் நிலைக்கு தள்ளும் என்பதனையும் எதிர்வு கூறினர். 

இலங்கை சினிமா கூட்டுத்தாபனம் இந்திய சென்சார் எனும் தணிக்கை சபையின் சர்டிபிக்கட்டை மட்டும் அடிப்படையாக வைத்து படத்ததை திரையிட அனுமதிக்காமல் இலங்கையில் வாழும் முஸ்லிம் இனத்தவரின் உணர்வுகளை புரிந்து கொண்டு, முஸ்லிம்கள் பற்றிய புனைவான காட்சிகளை கத்தரிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

இதையும் தாண்டி இப்படம் திரையிடப்படுமானால், இத்திரைப்படத்தை திரையிடும் சினிமா அரங்கின் முன் முற்றுகை போர் முறை மூலம் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்துவோம் என்றும் சூளுரைத்தனர். சினிமா என்பது இஸ்லாத்திற்கு அப்பாற்பட்ட ஒரு விடயம் என்றாலும், அது இலங்கை வாழ் முஸ்லிம்களை பாதிப்பதனாலேயே தாம் இந்த முடிவிற்கு வந்ததாகவும் அவர்கள் குறிப்பிடத்தவறவில்லை

இறுதியில்...
இந்த விடயங்கள் தொடர்பாக விழிப்புணர்வு பிரச்சாரங்களை தாங்கள் செய்ய எண்ணியுள்ளதாகவும், இவை தொடர்பாக இலங்கை அரசிற்கும், ஜனாதிபதி அவர்களிற்கும் மகஜர் ஒன்றை தயாரித்து அளிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டனர். 

பயிற்றப்பட்ட அல்லது அனுபவம் நிறைந்த ஊடகவியளாலர் சந்திப்பை நிகழ்த்தியவர்கள் போலவே எந்தவொரு பிசிரும் இல்லாமல், அதி புத்திஜீவித்துவ பாசாங்குகள் இல்லாமல் இயல்பாகவும், இனிமையாகவும் நிழந்த்தி முடித்தமையானது இவர்களை இன்னொரு முறை வியப்புடன் பார்க்க வைத்துள்ளது. 

இலங்கையில் இஸ்லாமிய இயக்கங்கள் சமூக சேவைகள் செய்துள்ளனவே தவிர, சமூக பிரச்சனைகளிற்கு தீர்வுகளை செயற்படுத்தியிருக்கவில்லை. பிரச்சனைகளை அதன் பாதையில் நின்று முகங்கொடுக்கவும் இல்லை. அந்த வகையில் இலங்கை முஸ்லிம்களின் சமகால பிரச்சனைகளை களத்தில் நின்று முகங்கொடுக்கும் ஒரு முதுகெலும்புள்ள இஸ்லாமிய இயக்கமாக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தன்னை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது. 

தலைமைத்துவம் அற்ற இலங்கை முஸ்லிம்களிற்கான தலைமைத்துவத்தை வழங்கும் ஆற்றல் இவர்களிடம் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு மெல்ல மெல்ல முஸ்லிம் சமூகத்தில் உருவாகி வருவது இயல்பானதே. 

திரைப்படத்திற்கு எதிரான மக்கள் எழுச்சியை தடுக்க வேண்டாம் எனவும் அவர்கள் இஸ்லாமிய, அரசியல், சமூக அமைப்புக்களை நோக்கி கோரிக்கை விடுத்துள்ளனர். மக்களின் நேர்மையான, நியாயமான உணர்வுகளிற்கு மதிப்பளியுங்கள் என அவர்கள் வேண்டினர். 

இந்தியாவின் ஜனநாயகம் என்பதற்கும், இலங்கையின் ஜனநாயகம் என்பதற்கும் வேறுபாடு உண்டு. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. அதன் தலைவரும், பிரதமரும் தங்களை மதச்சார்பற்ற தலைவர்களாகவே முன்னிறுத்துவர். ஆனால் இலங்கைளின் அரசியல் தலைவர்கள் தங்களை பௌத்த தலைவர்களாகவும், இலங்கையை சிங்கள பொளத்த ரட என்றே முன்னிறுத்துவர். அந்த வகையில் திரையரங்குககள் மீதான முற்றுகை போராட்டம் என்பது எவ்வளவிற்கு சாத்தியம், அதன் பின்னரான விளைவுகள், முற்றுகை பேராட்டத்தை இலங்கை பொலிசார் அனுகும் விதம், இலங்கையில் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பான சட்டங்கள்  போன்றவற்றை மீளாய்வு செய்து அதன் பின்னர் செயலில் இறங்குவது சிறந்த செயற்பாடு என்பது எமது பார்வையும், ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தினரிற்கான நஸீகத்துமாகும்....

ABU MASLAMA
நன்றி -  ஜப்னா முஸ்லிம் 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger