Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label தவ்ஹீத் ஜமாஅத். Show all posts
Showing posts with label தவ்ஹீத் ஜமாஅத். Show all posts

மெகா 24 தொலைக்காட்சியில் டிஎன்டிஜேயின் நிகழ்ச்சிகள்! இன்ஷா அல்லாஹ்!!


mega 24 logoதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிகழ்ச்சிகள் இமயம் டிவியில் ஒளிபரப்பட்டு வந்தன. தவிர்க்க இயலாத காரணங்களால் அந்நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. 
அதைத்தொடர்ந்து பிறமத சகோதரர்கள் மற்றும் பிற மாற்றுக் கொள்கையுடைய சகோதரர்கள் உள்ளிட்ட பலதரப்பு மக்களிடமிருந்தும் நிகழ்ச்சியை வேறு சேனலில் ஒளிபரப்பச் சொல்லி கோரிக்கைகள் வந்தன.
அந்தக் கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு, வரக்கூடிய மே 15ஆம் தேதி முதல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிகழ்ச்சிகள் மெகா 24 தொலைக்காட்சியில் தினந்தோறும் இந்திய நேரப்படி இரவு 10மணி முதல் 11மணி வரை ஒளிபரப்பாக உள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்த செய்தியை மாவட்ட கிளை நிர்வாகிகள் துண்டுபிரசுரங்கள், பொதுக்கூட்ட அறிவிப்புகள், ஜுமுஆ அறிவிப்புகள், பேனர்கள், போஸ்டர்கள் ஆகியவற்றின் மூலம் பட்டி தொட்டி எங்கும் கொண்டு செல்லும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
இப்படிக்கு,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமயகம்
0 comments

முக்கிய அறிவிப்பு

இறைவனின் திருப்பெயரால்... 
எதிர் பார்க்காத அளவிற்கு ஒரே நேரத்தில் நமது இணையதளங்கள் ஆயிரக்கணக்கானோரால் இரண்டு நாட்களாக பார்வையிடப்பட்டதால் ஏற்பட்ட தடங்கங்களை சரி செய்யும் பணி நடந்து கொண்டிருக்கின்றது. குறிப்பாக பி.ஜே அவர்கள் விஸ்வரூபம் குறித்து ஆற்றிய உரை பல்லாயிரக்கணக்கானோரால் குறுகிய காலத்தில் நமது இணையதளம் மூலம் பார்க்கப்பட்டுள்ளது. தடங்கள் விரைவில் சரி செய்யப்படும் இன்ஷா அல்லாஹ்
தடங்களுக்கு வருந்துகின்றோம்


0 comments

காவல் துறை அதிகாரிகள் போர்வையில் நடமாடும் மனித மிருகங்களைக் கண்டித்து சனிக்கிழமை மாபெரும் கண்டன பொதுக் கூட்டம் இன்ஷா அல்லாஹ் (நேரடி ஒளிபரப்புடன்)


காவல்துறை மிருகங்களைக் கண்டித்து

விழிப்புணர்வு பிரசுரம் கொடுத்ததற்காக முஸ்லிம் வீடுகளில் நள்ளிரவில் நுழைந்து அப்பாவிகளைக் கைது செய்தும்
வீட்டில் இருந்த முஸ்லிம் பெண்களை புருஷனை வெளியே அனுப்பி விட்டு யாருடன்………… என்று கேவலமாகப் பேசி முஸ்லிம் பெண்களை இழிவுபடுத்திப் பேசியும்
நியாயம் கேட்ட முஸ்லிம்கள் மீது மிருகவெறி தாக்குதல் நடத்தி வெறியாட்டம் போட்டும்
முஸ்லிம்களுக்கு எதிராகப் போர் தொடுத்துள்ள காவல்துறை அதிகாரிகள் போர்வையில் நடமாடும் மனித மிருகங்களைக் கண்டித்தும் அவர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்
திருவல்லிக்கேணியில் 29-12-2012 சனிக்கிழமை கண்டனப் பொதுக் கூட்டம் நடத்தப்படும்.
பீஜே அவர்கள் கண்டன உரை நிகழ்த்துகிறார்.
இன்ஷா அல்லாஹ் இந்தக் கூட்டம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்
காவல்துறை முஸ்லிம்கள் மீது துவங்கியுள்ள யுத்தத்திற்கு பதிலடி கொடுக்கும் மாபெரும் போராட்டம் அந்தக் கூட்டத்தில் அறிவிக்கப்படும்.
அறிவிக்கப்படும் போராட்டம் போலீசாரின் தடியகளுக்கும் துப்பாக்கித் தோட்டாக்களுக்கும் முஸ்லிம்கள் அஞ்ச மாட்டார்கள் என்பதை உணர்த்தும் வகையிலும், சிறைக்கு முஸ்லிம்கள் அஞ்ச மாட்டார்கள் என்பதை உணர்த்தும் வகையிலும் இருக்கும்.
சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் வரை ஓய்வில்லா போராட்டமும் அறிவிக்கப்படும். இன்ஷா அல்லாஹ்
29 -12-2012 அன்று நடைபெறும் கண்டனப் பொதுக் கூட்டத்துக்கும் அதைத் தொடர்ந்து நடக்கும் போராட்டத்திலும் பங்கு கொள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அழைக்கிறது.
அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டது, அனைத்து முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பு நடத்திய போராட்டத்தில் நடந்த அசம்பாவிதங்களால் முஸ்லிம்களின் போராட்டத்தை நாங்கள் இப்படித்தான் எதிர்கொள்வோம் என்று திமிராகப் பேசிய DC கிரி என்பவனையும் AC செந்தில் குமரன் என்பவனையும் பதவி நீக்கம் செய்யாமல் முஸ்லிம் சமுதாயம் ஓயாது என்பதை உணர்த்தி எதிர்காலத்தில் முஸ்லிம் சமுதாயத்தின் மீது இது போன்ற தாக்குதல் நடக்காமல் தடுத்திட அலைகடலென திரண்டுவருமாறு அழைக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
-நன்றி - tntj.net 
0 comments

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger