குவைத்தில் தமிழக இளைஞர்கள் இருவருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு:
குவைத்தில் கடந்த 2008ம் ஆண்டு பாத்திமா எனும் இலங்கைப் பெண் கொல்லப்பட்டார். இது தொடர்பாக சுரேஷ், தாஸ், என்னும் இரு தமிழக இளைஞர்களும் நித்யா எனும் இலங்கையருமாக மொத்தம் மூவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கும்பகோணத்தை சேர்ந்த தாஸ், தனக்கு மாத்திரமே இக்கொலையில் பொறுப்பிருப்பதாகவும், சுரேஷுக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை என்றும் அளித்த வாக்குமூலத்தை குவைத் காவல்துறை ஏற்கவில்லை.
இக்கொலை வழக்கில் சுரேஷ், தாஸ் ஆகியோருக்கு தூக்குத் தண்டனையும், இலங்கையை சேர்ந்த நிதியாவுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டன.
சுரேஷ் தாஸ் ஆகியோரின் தூக்குத்தண்டனைக்கான தேதி அறிவிக்கப்பட்டதும், சுரேஷின் தந்தை ஷண்முக சுந்திரம் நாகை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயனின் உதவியுடன் நேரடியாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தன் மகன் மீதான தண்டனையை நிறுத்திவைக்க குவைத் அரசை வேண்டும்படி வேண்டுகோள் விடுத்தார்.
இவ்வேண்டுகோளை ஏற்ற பிரதமர் மன்மோகன் சிங் குவைத் அரசுடன் நேரடியாகத் தொடர்புகொண்டதன் விளைவாக சுரேஷ் மற்றும் தாஸ் ஆகியோரின் தூக்குத்தண்டனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
முற்றிலும் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்க உதவும்படி சுரேஷின் தாயார் மேலும் மனுச் செய்துள்ளதாகத் தெரிகிறது.

Post a Comment