கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 10-ஆம் தேதி பள்ளிக்கல்லூரிகள் தொடங்கவுள்ள நிலையில்,
மாணவர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் பாதுகாப்பாக உள்ளதா? என மாவட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் இரண்டாம் நாளாக ஆய்வு நடத்தினர்.
மாணவர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் பாதுகாப்பாக உள்ளதா? என மாவட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் இரண்டாம் நாளாக ஆய்வு நடத்தினர்.
கோடை விடுமுறை முடிந்து, வருகிற ஜூன் 10-ஆம் தேதி பள்ளிக்கல்லூரிகள் தொடங்கவுள்ளது. பள்ளிக்கல்லூரிகளுக்கு சொந்த வாகனங்கள் இயக்கப்படுவதுடன் பல தனியார் வாகனங்களும் இயக்கப்படுகிறது.
அவ்வாறு இயக்கப்படும் பள்ளிக்கல்லூரி மற்றும் தனியார் வாகனங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு, மாணவர்களை ஏற்றிச்செல்லும் தகுதி உள்ளதா? என்பது குறித்து, மாவட்ட போக்குவரத்து துறை ஆய்வாளர் பழனிச்சாமி மற்றும் அதிகாரிகள் கடந்த இரு நாட்களாக ஆய்வு நடத்தினர் ஆய்வின் போது, போக்குவரத்து விதிமுறைகளை அனைத்து ஓட்டுனர்களும் கவனமுடன் பின்பற்றவேண்டும்.
குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் மாணவர்களை ஏற்றக்கூடாது. வாகனங்களில் அடிப்படை தேவைகளான போதுமான இருக்கை, மின்விளக்குகள், குடிநீர், அவசரக்கால கதவு, மாணவர்களை கண்ணானிக்க பள்ளி ஊழியர், சீறுடை, தனியார் வாகனங்களில் இது பள்ளி வாகனம் என்ற பெயர்ப்பலகை உள்ளிட்ட வசதிகளை கட்டாயம் பின்பற்றவேண்டும் என போக்குவரத்து துறை ஆய்வாளர் பழனிச்சாமி வலியுறுத்தினார்.
இந்நேரம்
Post a Comment