சீனா: கோழிப் பண்ணையொன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 55 க்கும் மேற்பட்டோர் உடல் கருகி பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கு சீனாவில் உள்ள ஜிலின் மாகாணம் டெகி நகரில் கோழி பண்ணை ஒன்று உள்ளது. சுமார் 1200 க்கும் மேற்பட்டோர் வேலை செய்யும் இப்பெரிய பண்ணையில், ஷிப்ட் முறையில் நேற்றிரவு 350 பேர் பணியிலிருந்தனர்.
இன்று அதிகாலை 3 மணி அளவில் இப்பண்ணையில் திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டது. இரவு நேரமாதலால் பண்ணையின் வாசல் பூட்டப்பட்டிருந்தது. தீயிலிருந்து தப்பிக்க வாசலை நோக்கி எல்லா தொழிலாளர்களும் ஓடினர். அவர்களால் வேகமாக கதவைத் திறந்து வெளியேற முடியவில்லை. அதற்குள் பண்ணையினுள் தீ மளமளவென பரவியதால், தீயில் சிக்கி 55 பேர் உயிரிழந்தனர்.

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மற்றவர்களை மீட்டனர். மின்சார கசிவே இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது
இந்நேரம்
Post a Comment