சவுதி அரேபியாவின் கதிப் மாவட்டத்தில் உள்ள சஃப்வா நகரில் வசிக்கும் ஒரு பெண், தனது கணவர் கன்னத்தில் அறைந்து காயப்படுத்தி விட்டதாக போலீசிசல் புகார் அளித்திருந்தார்.
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, குற்றத்தை ஒப்புக்கொண்ட கணவர், ‘எனது பெற்றோரிடம் மரியாதை குறைவாக நடந்துக் கொண்டதால் அவளை கன்னத்தில் அறைந்தேன்’ என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கணவனுக்கு 30 சவுக்கடிகளும் 10 நாள் சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தார். சவுக்கடி தண்டனை நிறைவேற்றப்படும் இடத்தில் மனைவி பார்வையிட விரும்பினால் அதற்கு தடை விதிக்க கூடாது என்றும் நீதிபதி அனுமதி அளித்தார்.
சிறை தண்டனை முடிந்த பின்னர் மனைவியரை எப்படி நடத்துவது என்ற ‘கவுன்சிலிங்’ வகுப்பில் கணவர் சில நாட்கள் பயிற்சி எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி அறிவுரை கூறியுள்ளார்.
Post a Comment