இந்தியாவின் கார்பரேட் பெரு ஊடகங்களால், உச்சி முகர்ந்து கொஞ்சப்படும் நரேந்திர மோடியை,பாஜக தனது ஒரே நம்பிக்கையாக கையில் பிடித்துக் கொண்டிருக்கிறது. அவரை முன் நிறுத்தத் தொடங்கியதும், விட்டால் போதுமென மிச்சமிருந்த பாஜக கூட்டணிக் கட்சிகள் எழுந்தோடத் தொடங்கிவிட்டார்கள். மோடி ஏன் புறக்கணிக்கப்படுகிறார்?.
அவரால் இந்தியாவுக்கு இழப்புத்தான் ஏற்படும் என்கிறார்கள் அறிவு ஜீவிகள். அவர் ஒரு மத வெறி, பாசிசவாதியாக இருப்பது தவிர வேறென்ன காரணங்கள் உள்ளன? என அலசுகிறது இந்தக் கட்டுரை.
அவரால் இந்தியாவுக்கு இழப்புத்தான் ஏற்படும் என்கிறார்கள் அறிவு ஜீவிகள். அவர் ஒரு மத வெறி, பாசிசவாதியாக இருப்பது தவிர வேறென்ன காரணங்கள் உள்ளன? என அலசுகிறது இந்தக் கட்டுரை.
- க.ஆனந்தன்
குஜராத் உண்மை நிலை:
பொதுவாக வலதுசாரி சார்புடைய இந்திய ஊடகங்கள் சமீப காலமாக தொடர்ந்து செய்து வரும் பிரச்சாரம் குஜராத் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக ஒளிர்கிறது என்றும் குஜராத் வளர்ச்சி மாதிரியை இந்தியாவெங்கும் நீட்டிக்கலாம் என்றும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. மோடியும் அதனை செய்கிறார். இந்தியாவின் திட்டமிட்ட வளர்ச்சியை அவர் பிக்கி கூட்டத்தில் கடுமையாக விமர்சனம் செய்கிறார். மகாத்மா காந்தி ஊராக வேலை வாய்ப்பு திட்டத்தைப் பற்றி விமர்சனம் செய்து தனது வர்க்கத் தன்மையை வெளிப்படுத்தும் அவர் அதன் பெயரில் உள்ள மகாத்மா என்பதை நீக்க வேண்டும் என்ற கோரி தனது இந்துத்வா வெறித் தன்மையை வெளிப்படுத்துகிறார். உண்மையில் குஜராத் ஒளிர்கிறதா? புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்ப்போம்.
விவசாயிகளுக்கு எதிரானவர்:
தனது அரசின் சாதனையாக கடந்த மிகக் குறைந்த காலத்தில் விவசாயக் கால்வாய் வெட்டியதாக மாரதட்டுகிறார் மோடி. உண்மையில் ஊடகங்கள் மறைத்த மிகப் பெரிய கொடூரம் அங்கு 2003- முதல் 2007 வரை சவுராஷ்ட்ரா பகுதியில் 489விவசாயிகள் தற்கொலை செய்த கொண்டனர் என்ற விவரத்தை மறைத்ததுதான். இந்த புள்ளி விவரங்களை அரசு மறைத்த வைத்திருந்தது. ஊடகங்களும் அமைதி காத்தன. இந்நிலையில் மிகவும் சிரமப்பட்டு தகவலறியும் சட்டத்தின் துணை கொண்டு இந்தத் தகவல் பெறப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டால் அது அசாதாரண இறப்பாக மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும் என்ற வாய்மொழி உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.
2007-லிருந்து இரண்டு ஆண்டுகள் மழை பொய்த்தது இந்த இறப்புகளுக்கு காரணமாகும். மிகவும் ஔ மயமான குஜராத்தில் பல விவசாயிகள் தாங்கள் வாங்கிய 50,000-70,000 கடனை திரும்ப செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலனவர்களுக்கு 2 ஹெக்டேர் வரை நிலம் உள்ளது. இங்கு விவசாயி தற்கொலை செய்து கொண்டால் அரசு அதிகாரிகளோ அல்லது ஆளும் அரசியல் பிரமுகரகளோ எட்டிப் பார்ப்பது கூட கிடையாது. இந்தப் போக்கை எதிரத்து பா.ஜ.க.வின் கன்னுபாய் கன்சாரியா கண்டனக் குரலெழுப்ப அவரை மோடி கட்சியை விட்டே துரத்தி அடித்தார். கிராமப்புறத்தில் மொத்தம் 10மணி நேரம் கூட மின்சாரம் கிடையாது. அதிலும் 6 மணி நேரம் இரவு நேரத்தில்தான் வழங்கப்படும். 26.25 லட்சம் ஹெக்டேர் நிலம் பருத்தி விவசாயத்தில் உள்ளது. அரசின் கவனமின்மை காரணமாக உற்பத்தி தொடர்ந்து வீழ்ச்சியடைந்த வருகிறது.
பருத்தி உற்பத்தி
ஆண்டு
|
உற்பத்தி (ஹெக்டேருக்கு)
|
2007-08
|
775 கி.கி
|
2008-09
|
650 கி.கி
|
2009-10
|
635 கி.கி
|
2011-12
|
611 கி.கி
|
ஆதாராம்: காட்டன் அட்வைசரி போரடு
குஜராத் அரசு மோடியின் தலைமையின் கீழ் மாநிலத்தின் வருவாயை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகைகளாக அள்ளிக் கொடுப்பதன் விளைவாக விவசாயம் மிக மோசமாக பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. ஆண்டு தோறும் 12 மில்லியன் பேல் பஞ்சு உற்பத்தி செய்யும் குஜராத் இந்த ஆண்டு வெறும் 7 மில்லியன் பேல்கள் மட்டுமே உற்பத்தி செய்துள்ளது. விவசாய நெருக்கடி எந்தளவுக்கு மோசமாக உள்ளது என்பதற்கு இதுவே அத்தாட்சி.
அன்னிய மூலதனம்:
தொடர்ந்து ஊடகங்கள் ஊதிக் கொண்டிருக்கும் ஒரு பிரச்சாரம் நமது நாட்டிலேயே அன்னிய முதலீடும் மூலதனமும் குவியும் முதல் மாநிலம் குஜராத் என்பதாகும். ஆனால் 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2012 ஜூன் வரை உள்ள கிட்டதட்ட 12 வருட காலத்திற்கு ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் புள்ளி விவரம் இது முற்றிலும் தவறு என்பதை நிரூபிக்கிறது. குஜராத் முதல் இடத்திலும் இல்லை முதல் மூன்று இடத்திலும் இல்லை என்பதை கீழே கண்ட அட்டவணை அம்பலப்படுத்தும். மகாராஷ்ட்ராதான் இந்தியாவில் முதல் மாநிலமாகும். தமிழ்நாடு கூட குஜராத்தை விட முன்னனியில் உள்ளது.
அன்னிய நேரடி மூலதனம் ஏப் 2000- ஜூன் 2012 வரை (ரூ கோடியில்)
மகராஷ்ட்ரா
|
254624
|
டெல்லி
|
155722
|
கர்னாடகா
|
45021
|
தமிழ்நாடு
|
40297
|
குஜராத்
|
36913
|
வைப்பரண்ட் குஜராத்:
ரஜினி பாணியில் சொன்னால் குஜராத் என்றாலே சும்மா அதிருதில்ல என்ற பெயரில் ஆண்டு தோறும் மிகவும் படோடோபமாக விளம்பரப்படுத்தப்படும் விழா குஜராத்தில் அந்த விழாவின் மூலமாக அன்னிய மூலதனம் திரட்டப்படுவதாக தம்பட்டம் அடிக்கிறது. இதிலும் எவ்வுளவு பொய் புரட்டு என்பது புள்ளி விவரத்தை பார்த்தலே தெரியும். குஜராத் அரசின் சமூக பொருளாதார அறிக்கை 2011 வெளியிடும் புள்ளி விவரமே மிகவும் சுவாரசியத் தகவல்களை தருகிறது. 2011-ல் முதலீடு செய்யப்படும் தொகை என்று அறிவிக்கப்பட்டது 20 லட்சம் கோடி ருபாய். ஆனால் உண்மையில் முதலீடு செய்யப்பட்ட தொகை வெறும் ரூ.29,813 கோடி மட்டுமே. அந்த ஆண்டிலேயே கையெழுத்தான மொத்த 8,300 புரிதல் ஒப்பந்தங்களில் வெறும் 250 மட்டுமே அமலாகியது. குஜராத் வளரச்சி மாடல் தொழிற்சாலை விரிவாக்கத்தின் மூலமாக மட்டுமே பொருளாதார வளர்ச்சி என்பதில் மட்டுமே குறியாக உள்ளது. இந்த அணுகுமுறை வெற்றிபெற வேண்டுமானால் அரசு தனியார் மூலதனத்தை பெறுவது அவசியமாகிறது. 2003 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வைப்பரண்ட் குஜராத் மாநாடுகளில் வாக்குறுதி அளிக்கப்பட்ட முதலீடும் உண்மையில் செய்யப்பட்ட முதலீட்டையும் பார்த்தாலே முதலீட்டாளர்கள் தங்களால் நிறைவேற்ற முடியும் முதலீடுகளை விட அதிகமாக வாக்குறுதி அளிப்பது தெரியும். முதலீடுகளை அதிகமாக சொல்ல வைத்து, அதற்காக எக்கச்சக்க சலுகைகளைக் கொடுக்கிறது அந்த அரசு. மொத்தத்தில் நமக்கும் பெப்பே, நம் பணத்துக்கும் பெப்பே காட்டுகின்றன அந்த கம்பெனிகள்.
வைப்பரண்ட் குஜராத் சம்மேளன் மூலம் திரட்டப்பட்ட நிதி (ரூ கோடியில்)
ஆண்டு
|
வாக்குறுதி
|
நிறைவேற்றப்பட்டது
|
2003
|
66068
|
37746
|
2005
|
106160
|
37939
|
2007
|
465309
|
107897
|
2009
|
1239562
|
104590
|
2011
|
2083049
|
29813
|
நன்றி: மாற்று
Post a Comment