வங்கதேசத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த பெண் ஒருவர் 17 நாட்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
தலைநகர் டாக்காவுக்கு அருகே இருந்த ஒரு எட்டு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அந்தக் கட்டிடத்தில் நான்கு ஆயத்த-ஆடைத் தொழிற்சாலைகளும் ஒரு வங்கியும் செயற்பட்டு வந்தன.
கட்டிட இடிபாடுகளுக்கிடையே இருந்த அந்தப் பெண், 'நான் இங்கே இருக்கிறேன்' என்று கத்தியதை கேட்டுள்ள மீட்புப் பணியாளர்கள் அவரை மீட்டுள்ளனர்.
அந்தக் கட்டிடத்தில் இருந்த உணவுப் பொருட்களை உண்டும், கட்டிடத்தில் அடிக்கப்பட்ட தண்ணீரைக் குடித்தும் அப்பெண் உயிர் பிழைத்திருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.
எதிர்பாராத வகையில் ஒரு பெண் உயிரோடு மீட்கப்பட்டுள்ளமை, மேலும் சிலர் இதேபோல மீட்கப்படலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
Post a Comment