உலக மக்களுக்கே அழகிய முன்மாதிரியாம் நபிகள் நாபிகள் நாயகம் (ஸல்) அவர்களை சமீப காலமாக மீடியாக்கள் மூலமாக சீண்டி வருவதனால் அவர்களின் உண்மையான, உன்னதமான வாழ்க்ககையை அந்நிய மக்களுக்கு எடுத்துச் சொல்லும் நன்நோக்குடன் நம் நாட்டின் பிரதாமான மும்மொழிகளிலும் “யார் இந்த முஹம்மத் (ஸல்)” என்ற புத்தகத்தை ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் நேற்று (2012.2012) மாலை பண்டார நாயக்க ஞாபகர்த்த மாநாட்டு மண்டபத்தில் வைத்து வெளியிட்டது.
இந்நிகழ்வுக்கு ஜமாஅத்தின் வருகையை ஏற்று அரசியல் தலைவர்கள், புத்திஜீவிகள், எழுத்தாளர்கள் மற்றும் ஜமாஅத்தின் அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் என பல சகோதர சகோதரிகள் கலந்து சிறப்பித்தனர். அல்ஹம்துலில்லாஹ்!
(இன்ஷா அல்லாஹ்! விரிவான தகவல் நாளை வெளியிடப்படும்)
நன்றி - sltjweb
























Post a Comment