வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிடுவீர் – நிதி திரட்டும் பணியில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்

அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே !
இலங்கையின் பல பகுதிகளிலும் தொடராக மழை பெய்து வருவதால் வெள்ளப் பெருக்கு மற்றும் மண் சரிவுகளால் மக்கள் பெருமளவில் பாதிப்பட்டுள்ளனர். இதுவரை 74995 கும்பங்களை சேர்ந்த 287641 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 பேர் மரணித்துள்ளனர். 22 பேர் காணாமல் போயுள்ளனர்.
அன்பின் சகோதரர்களே!
நமது உறவுகளான உண்ண உணவின்றி, தங்க இடமின்றி,உடுக்க ஆடையின்றி, கஷ்டப்பட்டுகின்றனர். நோயாளிகள் மருத்துவ உதவியின்றி அவதிப்படுகின்றனர். பாதிக்கப் பட்ட அந்த மக்களுக்கு நாம் உதவிக் கரம் நீட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
இலங்கையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சென்ற வருடம் போல் நிவாரண உதவிகளை வழங்க ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் முடிவெடுத்து அற்கான வசூல் பணியை ஆரம்பித்துள்ளது. உங்களால் முடிந்த உதவிகளை செய்யுறு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையகம் உங்களிடம் அன்பாகக் கேட்டுக் கொள்கிறது.
ஆதமுடைய மகனே நீ (கொடு) செலவிடு! உனக்கு நான் செலவிடுகிறேன் (கொடுக்கிறேன்)  என்று அல்லாஹ் சொல்வதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி),நூல்: புகாரீ (5352)
வசதி படைத்தவர்களாகிய நாம் வசதியற்றவர்களுக்கு எந்த வகையில் உதவினாலும் அதன் மூலம் முழுமையான பலனை அனுபவிப்போம்.
நல்ல வற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அது உங்களுக்கே. அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவே செலவிடுகிறீர்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் உங்களுக்கே அது முழுமையாக வழங்கப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன் 2 : 272)
நாம் வழங்கும் தர்மம் மறுமையில் அல்லாஹ்வால் பல மடங்கு உயர்த்தப்பட்டு மிகப் பெரிய கூலியாக வழங்கப்படும்.
தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன் அறிந்தவன். (அல்குர்ஆன் 2 : 261)
வெள்ளத்தினால் பாதிக்கப் பட்டவர்களுக்கான உங்கள் உதவிகளை அனுப்ப வேண்டிய வங்கிக் கணக்கு
SRILANKA THAWHEED JAMATH,
HATTON NATIONAL BANK
MARADANA BRANCH
A/C NO : 108010105916
மேலதிக விபரங்களுக்கு
SLTJ தேசிய தலைவர் ஆர்.எம்.ரியால் 0774781471/ 0777255467
SLTJ பொதுச் செயலாளர்  அப்துர் ராசிக் 0774781473/0771254254
SLTJ பொருளாலர்  ஏ.ஆர்.எம். ரிழ்வான் 0774781483/0773-951616
சமூக சேவைப் பகுதிப் பொருப்பாளர் முயீனுத் தீன் 0777176321
சென்ற வருடம் வெள்ள நிவாரணப் பணியின் சில காட்சிகள்
நன்றி - sltjweb.com 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger