பள்ளிவாசல் இடிக்கப்படாமல் பாதுகாத்த பத்திரிகையாசிரியர்!


இந்தியாவின் பிற மாநில வக்ஃபு வாரியங் களை போலவே ஆந்திரப் பிரதேசத்தின் வக்ஃபு வாரியமும் வக்ஃபு சொத்துகளை பாதுகாப்பதிலோ, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வக்ஃபு சொத்துகளை மீட்பதிலோ உரிய கவனம் செலுத்துவ தில்லை என்றாலும், ஆந்திர முஸ்லிம்கள் வக்ஃபு சொத்துகளை பாதுகாப்பதில் பிற மாநில முஸ்லிம்க ளைவிட விழிப்புணர்வுடனேயே உள்ளனர்.
அண்மையில் ஆந்திராவின் மஹ்பூப் நகர் மாவட்டத்திலுள்ள ஜலாபூர் என்ற ஊரில் அமைந் துள்ள 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஜமா மஸ்ஜித்திற்குச் சொந்தமான 145 ஏக்கர் நிலம் ஆக் கிரமிக்கப்பட்டிருப்பது வெளிச் சத்திற்கு வந்தது.
அதோடு, அந்த மஸ்ஜித் சொத்தின் ஒரு பகுதியை இந்த மஸ்ஜிதின் முத்தவல்லியின் பெய ருக்கு எழுதிக் கொடுப்பதற்காக முத்தவல்லியிடமிருந்து 10 ஆயி ரம் ரூபாய் லஞ்சம் பெற்ற வக்ஃபு வாரிய விசாரணை அதிகாரி லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் பிடிபட்ட தகவல் ஹைதராபாத் முஸ்லிம் மக்கள் மத்தியில் பரப ரப்பாகப் பேசப்பட்டு வந்த நிலை யில், ஆந்திராவின் நல்கொண்டா மாவட்டத்தில் ஒரு பள்ளிவாசல் இடிக்கப்படவிருந்து கடைசி நேரத் தில் அது தடுத்து நிறுத்தப்பட் டுள்ளது என்கிற தகவல் இப் போது ஆந்திர மக்களிடையே பரபரப்பு செய்தியாகியுள்ளது.
நல்கொண்டா மாவட்டம் குண்டலூர் என்கிற கிராமத்தில் அமைந்துள்ளது மஸ்ஜித் முஹம் மதியா என்கிற பள்ளிவாசல். இந்த பள்ளிவாசலில் ஐவேளை யும் தொழுகை நடைபெற்று வரு கிறது. முஸ்லிம்களின் வழிபாட் டுத் தலங்கள் சாலையோரங்க ளில் அமைந்திருந்தால் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமலும், மாற்று இடத்தை ஒதுக்கித் தராம லும் உடனடியாக பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்துத் தள் ளும் தேசிய நெடுஞ்சாலைத் துறை, மஸ்ஜிதே முஹம்மதியா பள்ளிவாசலையும் இடித்துத் தள்ள திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியது.
தேசிய நெடுஞ்சாலை எண் 65ஐ விரிவாக்கம் செய்ய வேண் டும். அதற்காக இந்த பள்ளிவா சலை இடிக்கப் போகிறோம் என்ற பெயரில் நெடுஞ்சாலைத் துறை ஆக்ஷனில் இறங்க... லஞ் சத்திலும், பேராசையிலும் திளைக்கும் ஆந்திர வக்ஃபு வாரி யம் இதனை கண்டு கொள்ளா மல் வெகு அலட்சியமாக இருந் துள்ளது.
ஆனால் இந்த தகவல் ஆந்தி ராவின் சியாசத் உருது நாளித ழின் ஆசிரியரான ஜாஹித் அலி கானுக்குத் தெரியவர, தக்காண வக்ஃபு பாதுகாப்புச் சட்டத்திற்கு தகவல் அளித்த ஜாஹித் அலி கான், இச்சங்கத்தின் பிரதிநிதிகள் குழுûவை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்து மஸ்ஜித் முஹம்மதியா இடிக்கப்படாமல் தடுத்து நிறுத்தியுள்ளார். ஜாஹித் அலிகானுக்கு நன்றி தெரிவித்துப் பாராட்டியுள்ளனர் ஆந்திர முஸ் லிம்கள்.
தக்காண வக்ஃபு பாதுகாப்பு சங்கம் என்பது, வக்ஃபு சொத்துக் களைப் பாதுகாக்கவும், ஆக்கிர மிக்கப்பட்டுள்ள வக்ஃபு சொத் துக்களை கண்டறிந்து அவற்றை மீட்கவும் உருவாக்கப்பட்டுள்ள அமைப்பு. தனது பணிகளின் ஒரு பகுதியாக மஸ்ஜித் முஹம்மதி யாவை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்ட இந்த சங்கம், சட்டரீதி யான நடவடிக்கைகளில் இறங்கி யது.
மஸ்ஜித் முஹம்மதியா பள்ளி வாசலை நெடுஞ்சாலைத்துறை இடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் எனக்கோரி ஆந்திர மாநில வக்ஃபு தீர்ப்பாயத்தில் வக்ஃபு பாதுகாப்பு சங்கம் முறையிட... சம்மந்தப்பட்ட மஸ்ஜித் நிலத்தை நெடுஞ்சாலைத்துறை கையகப்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருக்கி றது தீர்ப்பாயம்.
வக்ஃபு வாரியம் செய்ய வேண் டிய வேலையை அரசு சாரா அமைப்பான வக்ஃபு பாதுகாப்பு சங்கம் செய்ததோடு, மஸ்ஜித் முஹம்மதியா பள்ளிவாசலை நெடுஞ்சாலைத்துறை கையகப்ப டுத்துவதை விட்டும் வக்ஃபு தீர்ப்பாயம் இடைக்காலத் தடை விதித்திருக்கும் தகவலை, வக்ஃபு வாரிய தலைவரின் கவனத்திற்கு சங்கத்தின் பிரதிநிதிகள் கொண்டு சென்றபோது, வக்ஃபு வாரியத் தலைவரும், ஊழியர்களும் தங் கள் பங்கிற்கு அலட்சியத்தையே வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த தகவலை வெளியிட்டிருக்கும் சியாசத் பத்திரிகை நெடுஞ் சாலைத்துறை விரிவாக்கம் என்ற பெயரில் வக்ஃபு சொத்துகள் இடிக்கப்படவும், ஆக்கிரமிக்கப்ப டவும், கையகப்படுத்தப்பட வும் வக்ஃபு வாரியம் உடன்படு மேயா னால், எஞ்சியிருக்கின்ற வக்ஃபு சொத்துக்களுக்கு பேராபத்து ஏற் படும் என்றும் எச்சரித்துள்ளது.
வக்ஃபு சொத்துகள் என்பது முஸ்லிம் சமுதாயத்தின் மேம் பாட்டிற்காக அவர்களின் வாழ் வாதாரங்களுக்காக முன்னோர் களால் தானமாக கொடுக்கப்பட் டது. இந்த சொத்துக்கள் பாது காக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தை புறந்தள்ளி விட்டு அவற்றை அபகரித்து விட வேண் டும் என்ற நோக்கத்தில் தான் வக்ஃபு வாரிய தலைவர் பதவியில் அமருபவர்கள் இருக்கிறார்கள்.
இதற்கு காரணம், ஆளுங்கட்சி யின் சார்பில் இவர்கள் இந்தப் பதவிகளில் அமர்த்தப்படுவதால் லஞ்சம், ஊழல், அதிகாரவர்க்கத் தினருக்கு தொழில் அதிபர்களுக்கு அட்ஜஸ்மெண்ட் என்ற அரசியல்வாதிகளின் புத்தி இவர்களிடமும் மாறாமல் வெளிப்பட்டிருக்கிறது.
- அபு
nantri - keetru
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger