Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label பாதுகாப்பு. Show all posts
Showing posts with label பாதுகாப்பு. Show all posts

பிரிட்ஜ் பராமரிப்பு பற்றி உபயோகமான தகவல் !!


 1. பிரிட்ஜை சமையலறையில் வைக்கக் கூடாது. புகை பட்டு நிறம் போய்விடும்.

2. பிரிட்ஜை அடிக்கடி திறக்கக் கூடாது, திறந்தால் உடனே மூடிவிட வேண்டும். இது மின்சார‌த்தை மிச்ச‌ப்ப‌டுத்த‌ உத‌வும்.3. பின்பக்கம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்கக் கூடாது. அந்த வலையில் தண்ணீர் படக் கூடாது. பின்புறம் படியும் ஒட்டடையை மெதுவாக தென்னந்துடைப்பம் மூலம் அகற்ற வேண்டும். 
4. பிரிட்ஜை துடைக்கும்போது ஈரத்துணி அல்லது ஃபோர்ம் போன்றவற்றைக் கொண்டு துடைக்கக் கூடாது. உலர்ந்த துணி கொண்டு துடைக்க வேண்டும்.
5. வெளியூர் செல்லும்போது ஃபிரிட்ஜைக் காயவைத்துச் செல்ல வேண்டும். மாதமிருமுறை ஃபிரிட்ஜுக்கு விடுமுறை கொடுக்கவும்.
6. பிரீசரில் உள்ள ஐஸ் தட்டுகள் எடுக்க வரவில்லை எனில் கத்தியைக் கொண்டு குத்தக் கூடாது. அதற்குப் பதில் ஒரு பழைய காஸ்கட்டைப் போட்டு அதன்மேல் வைத்தாலோ அல்லது சிறிது கல் உப்பைத் தூவி வைத்து அதன் மேல் ஐஸ் தட்டுக்களை வைத்தாலோ சுலபமாக எடுக்க வரும்.
7. பிரிட்ஜ்ஜிலிருந்து வித்தியாசமாக ஓசை வந்தால் உடனடியாக ஒரு மெக்கானிக்கை அழைத்து சரி பார்க்க வேண்டும்.
8. அதிகப்படியான பொருட்களை அடைத்து வைக்கக் கூடாது. ஒவ்வொரு பொருளுக்கும் காற்று செல்வதற்கு ஏற்ப சிறிது இடைவேளி விட்டு வைக்க வேண்டும்.
9. பிரிட்ஜுக்குக் கண்டிப்பாக நில இணைப்புகள் (Earth) கொடுக்க வேண்டும்.
10. பிரிட்ஜை காற்றோட்டம் உள்ள அறையில் மட்டுமே வைக்க வேண்டும். பிரிட்ஜின் உள்ளே குறைந்தப் பொருள்களை வைத்தால் மின்சாரம் குறைவு என்பது தவறான கருத்தாகும்.
11. பிரிட்ஜின் உட்பகுதியை சுத்தம் செய்யும் போது கண்டிப்பாக சோப்புகளை உபயோகப்படுத்தக் கூடாது. இது உட்சுவர்களை உடைக்கும். மாறாக சோடா உப்பு கலந்த வெந்நீரை உபயோகிக்கலாம்.
12. உணவுப் பொருட்களைச் சூட்டோடு வைக்காமல் குளிர வைத்த பின்தான் வைக்க வேண்டும். வாழைப்பழத்தை எக்காரணத்தை கொண்டும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.
13. பச்சைக் காய்கறிகளை பாலிதீன் கவர்களில் போட்டு வைக்கவும். பிரிட்ஜில் வைக்கும் பாட்டில்களை அடிக்கடி சுத்தம் செய்து வெய்யிலில் காய வைத்து உபயோகிக்க வேண்டும்
14. பச்சை மிளகாய் வைக்கும்போது அதன் காம்பை எடுத்து விட்டுத் தான் வைக்க வேண்டும். பிரிட்ஜில் வைக்கும் உணவுப் பொருட்களை மூடி வைக்க வேண்டும்.
15. பிரிட்ஜிலிருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க அதனுள் எப்போதும் சிறிது புதினா இலையையோ, அடுப்புக்கரி ஒன்றையோ அல்லது சாறு பிழிந்த எலுமிச்சம் பழ மூடிகளையோ வைக்கலாம்.
16. கொத்தமல்லிக் கீரை, கறிவேப்பிலை இவைகளை ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்தால் ஒரு வாரத்திற்கு பசுமை மாறாமல் இருக்கும்.
17. பிரிட்ஜின் காய்கறி ட்ரேயின் மீது ஒரு கெட்டித் துணி விரித்து பச்சைக் காய்கறிகளைப் பாதுகாத்தால் வெகு நாள் அழுகிப் போகாமல் இருக்கும்.
18. சப்பாத்தி மாவின் மேல் சிறிது எண்ணெயைத் தடவி பின் ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் நான்கு நாட்கள் ஃபிரஷாக இருக்கும்.
19. பொரித்த அப்பளம், சிப்ஸ், பிஸ்கட் போன்றவை அதிக நாட்கள் முறுமுறுப்பாக இருக்க வேண்டுமானால் அவற்றை ஒரு பாலிதீன் கவரில் போட்டு ஃபிரிஜ்ஜில் வைக்க வேண்டும்.
20. அதிக ஸ்டார்கள் உள்ள பிரிட்ஜை வாங்கினால், மின்சாரத்தை அதிக அளவு மிச்சப்படுத்தும்.
0 comments

பர்தாதான் பெண்களுக்கு பாதுகாப்பு

இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டு பெண்கருத்து!




 உடலை மறைத்தால்தான் ஆண்களின் தொல்லைகளிலிருந்து தப்பிக்க முடியும். ஆண்களிடம் குலைந்து பேசக்கூடாது. அப்போதுதான் பாதுகாப்பாக ஒரு பெண் இருக்க முடியும் என இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டுப் பெண்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 

இந்தியாவில் தற்போது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. 

இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று நவீன கால பெண்களின் ஆடை முறைகளே. பெண்கள் தங்களின் உடலை இஸ்லாம் சொல்லும் முறைப்படி மறைத்தால் மட்டுமே இது போன்ற குற்றங்களை பெருமளவில் குறைக்க முடியும். 

அதேபோல் பெண்கள் ஆண்களிடம் குழைந்து பேசுவதை தவிற்பதன் மூலம் இதுபோன்ற குற்றங்களை தடுக்க முடியும் என குர்ஆன் மனித சமுதாயத்திற்கு வழிகாட்டுகின்றது.

 "நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்" அல்குர் ஆன் (33.32) 

குர்ஆனின் இந்தக் கூற்றை மெய்ப்பிக்கும் வண்ணமாக இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம் அல்லாத வெளிநாட்டுப் பெண்கள் இந்திய வாலிபர்களின் தொல்லை தாங்க முடியாமல் உடலை மறைப்பதன் மூலமும், குழைந்து பேசுவதை தவிற்பதன் மூலமும் எங்களை நாங்கள் பாதுகாத்துக் கொள்கின்றோம் என தெரிவித்துள்ளனர். 

இந்திய வாலிபர்களால் தொல்லைக்கு ஆளான வெளிநாட்டுப் பெண்களை சந்தித்து அவர்கள் பட்ட தொல்லைகள், அதை தவிற்க அவர்கள் மேற்கொள்ளும் வழிமுறைகளை பேட்டி எடுத்து தி வீக் (The Week) பத்திரிக்கை கடந்த வாரம் வெளியிட்டுள்ளது. 

அதில்... 

நெதர்லாந்தைச் சேர்ந்த 26 வயது பெண் அன்னிமிகி ஸ்பிட்சி, டெல்லியில் படித்துக்கொண்டு இருகின்றார். அவர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்... நான் மேற்கத்திய பாணியில் (அறைகுறை) ஆடைகள் அணிந்து செல்லும்போது ஆண்களின் தொல்லைக்கு ஆளானேன். ஒரு முறை பழைய டெல்லியில் சாலையை கடக்க முயன்றபோது ஒருவன் என்னை தொட்டு சில்மிஷம் செய்தான். நான் பேருந்தில் பயணிக்கும்போது வேண்டும் என்றே என்னை உரசுவது, பிறகு, “சாரி” சொல்வது ஆண்களுக்கு வாடிக்கையாய் போய்விட்டது. இதைத் தடுக்க நான் இப்போதெல்லாம் உடலை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணிகின்றேன். வெளியில் போகும்போது ஸ்கார்ப்ஃபை அணிந்து செல்கின்றேன். இப்போது என்மீதான ஆண்களின் பார்வையை தடுக்க முடிகின்றது. ஓரளவிற்கு பாதுகாப்பை உணரமுடிகின்றது எனத் தெரிவித்துள்ளார். 

இவரைப்போல் பாதிக்கப்பட்ட லிஸ் கிரீன் என்ற இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண்மனி கூறுகையில்... 

ஆண்களின் தொல்லைகளிலிருந்து தப்பிக்க நான் இபோது ஆண்களிடம் குழைந்து பேசுவது இல்லை. கடுமையாகவே நடந்துகொள்கின்றேன். ஆண்களைப் பார்த்து புன்னகை புரிவதில்லை. இதன் மூலம் நாம் பாதுகாப்பாக இருந்துகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார். 

இஸ்லாம் மனித குலத்திற்கு நடைமுறைப்படுத்த கூடிய சிறந்த நடைமுறையையே வழங்குகின்றது. பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையிலிருந்து தீர்வை வழங்குகின்றது. பாதிக்கப்பட்ட இந்த பெண்கள் முஸ்லிம்கள் இல்லை. 

இவர்கள் ஆண்களின் தொல்லைகளை அனுபவித்து அதில் இருந்து தப்பிக்க இஸ்லாம் சொல்லும் தீர்வைத்தான் தேர்ந்தெடுக்கின்றனர். 

இப்படி பிரச்சனைகளை சந்திக்காத, அல்லது இதுபோன்ற கேவலத்தை விரும்புபவர்கள்தான் இஸ்லாம் சொல்லும் தீர்வை எதிர்க்கின்றனர். ஆண்களின் பாலியல் தொல்லையிலிருந்து தற்காத்துக் கொள்ள மானம் உள்ள எவரும் இஸ்லாம் சொல்லும் உடலை மறைத்தல், ஆண்களிடம் கண்டிப்புடன் பேசுதல் போன்ற தீர்வைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். அனைத்து பிரச்சனைகளுக்கும் இஸ்லாம் சொல்லக்கூடிய தீர்வுகள்தான் சரியானவை என்பதை மேற்கண்ட நிகழ்வுகள் உண்மைப்படுத்திக் கொண்டுள்ளன. 

முற்போக்கு சிந்தனை என்ற பெயரில் பெண்களை ஒரு காமப் பொருளாக பார்க்கவே இவர்கள் பெண்களின் மானத்தைக் காக்கும் பர்தா முறையை எதிர்க்கின்றார்கள். 

பர்தா எதிர்ப்பு என்பது ஆண்களின் காம இச்சையின் வெளிப்பாடே தவிர ஒழுக்கமுள்ள மனிதனின் பண்பாகாது. எனவே பெண்கள் பர்தா அணிவதை வலியுறுத்துவோம். பெண்களின் மானம் காக்கும் பண்பாளர்களாவோம்.
0 comments

இந்திய இராணுவத்தின் இரட்டை நிலை!


இந்திய இராணுவத்தின் இரட்டை நிலை!

இஜாஸ் அஹ்மத் மிர்ஸா
2012 ஆகஸ்ட் 29 அன்று பெங்களூரிலிருந்து காவல்துறையினர் பிடித்துச் சென்ற முஸ்லிம் இளைஞர்கள் 12 பேரில் ஒருவர்தாம் இஜாஸ் அஹ்மத் மிர்ஸா. பத்திரிகையாளர்கள், விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர்கள் உள்பட முக்கியப் பிரமுகர்கள் சிலரைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிக் கொண்ருந்தனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பயங்கரவாதத் தடைச் சட்டப் பிரிவுகளின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோர் உயர்கல்வி மணவர்கள். நல்ல வேலையில் உள்ளவர்கள். இவர்களில் பத்திரிக்கையாளரான முதியுர்ரஹ்மான் சீத்தீகி, உயர்கல்வி பயின்று வரும் முஹம்மது யூசுப் நள்பந்தி ஆகியோருக்கு எதிராகக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய தேசியப் புலனாய்வு அமைப்பால் (என்.ஐ.ஏ) முடியவில்லை. எனவே நீதிமன்றம் அவ்விருவரையும் குற்றச்சாட்டிலிருந்து வ்இடுவித்தது. இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். போதிய ஆதாரங்களைத் தாக்கல் செய்ய இயலாததால் இஜாஸ் அஹ்மத் மிர்ஸா ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

மத்திய அரசின் இராணுவப் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் (D.R.D.O )கீழ் செயல்படுகின்ற சென்டர் ஃபார் ஏர்போன் சிஸ்டத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றி வந்தார் இஜாஸ். மாநிலக் காவல்துறையினர், புலனாய்வு அமைப்பினர் ஆகியோரின் கடும் விசாரணைகளுக்குப் பிறகு மட்டுமே ஒருவருக்கு இந்தத் துறையில் வேலை கிடைக்கும். முஸ்லிம் என்றால் கேட்கவே வேண்டாம். இதில் சேர்ந்த பிறகு அவர் எச்சரிக்கை மிகுந்த பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவார். இவ்வாறு இருக்கும்போது, இஜாசுக்கு பயங்கரவாதத் தொடர்பு இருக்கிறது என்ற பெங்களூரு காவல் துறையினரின் வாதம் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது.

ஜாமீன் பெற்று இஜாஸ் வெளிவந்த அதே நாளில், அவர் இராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனப் பணியிலிருந்து நீக்கப்படும் உத்தரவினை சென்டர் ஃபார் ஏர்போன் சிஸ்டத்தின் இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கை (CABS/1001/482/Adm) தெரிவித்தது. நாட்டின் பாதுகாப்பு ஆய்வுக்காகத் தம் இளமையை அர்ப்பணித்த ஓர் இளைஞரிடம் தேசம் நடந்து கொள்ளும் முறைதானா இது. இளைஞர் ஒருவரை தவறாக வழக்கில் சிக்க வைத்தல்; அது நிரூபணமாகும் முன்பே அவரைப் பணியிலிருந்து நீக்குதல் என்பது அப்பட்டமான பாகுபாடும் அநீதியுமாகும். ஸம்ஜாதா எக்ஸ்பிரஸ், மாலேகான், மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட இராணுவ அதிகாரி கர்னல் புரோஹித்துக்கு இதுவரை தொடர்ந்து சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது என்ற செய்தி வெளியானதும் இந்தப் பின்னணியில்தான்.

மாலேகான்:குண்டுவெடிப்பு  முக்கிய சதியாளர் லெப்டினென்ட் கர்னல் புரோஹித்!

இஜாஸை பணியிலிருந்து நீக்கியதும் புரோஹித்துக்கு இப்போதும் சம்பளம் வழங்கிக் கொண்டிருக்கும் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே அந்தோணியின் துறைதான். மதச்சார்பற்ற கொள்கையில் உறுதியாக இருப்பவர் என்ற பாராட்டைப் பெற்றவர் அந்தோணி. ஆனால், நிரபராதி என பொது சமூகமும், மனித உரிமை ஆர்வலர்களும் ஆணையிட்டுச் சொல்கின்ற, குற்றவாளி என எந்தப் புலனாய்வு அமைப்பாலும் நிரூபிக்கப்படாத இஜாஸ் அஹ்மத் மிர்ஸாவை நீக்கியதற்கான நியாயத்தை அந்தோணி மக்களிடம் கூற வேண்டிய நிலை வரும். இஜாஸ் அடையாளம் மட்டுமே. பாதுகாப்புத் துறை இரட்டை நிலையைக் கைவிட வேண்டும். அது நடக்குமா என்பதை என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே அந்தோணி
இதில் ஆறுதல் தரும் செய்தியாக. பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்கு எவ்வித ஆதாரமும் இல்லாததால் நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்துள்ள பெங்களூரு பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் இளம் விஞ்ஞானி இஜாஸ் அஹ்மத் மிர்ஸாவுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என பிரஸ் கவுன்சில் தலைவர் நீதியரசர் மார்கண்டேய கட்ஜு பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே அந்தோணியை வலியுறுத்தியுள்ளார்.

நன்றி: சமரசம் http://www.samarasam.net/01-15_Apr_13/index.htm#9 )
நன்றி - வலையுகம் 

0 comments

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger