மின்னஞ்சலின்[Email] தந்தை ஓர் தமிழர் உங்களுக்கு தெரியுமா?

மின்னஞ்சலை [Email] கண்டுபிடித்தவர் யார் ? யாராவது வெளிநாட்டுக்காரர்தான் என்று நினைத்திருப்பீர்கள். நீங்கள் நினைத்தது உண்மைதான். அவர் வெளிநாட்டில் வசிக்கும் ஒரு தமிழர்.
அதுவும் தனது 14வயதில் மின்னஞ்சலை(Email) லை கண்டுபிடித்துச் சாதனை செய்தவர் அவர் பெயர் சிவா அய்யாதுரை. இப்போது அவருக்கு வயது 48.
அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாணத்தில் உள்ள நெவார்க் என்ற ஊரைச் சேர்ந்தவர் சிவா அய்யாதுரை.
அவருடைய அம்மா மீனாட்சிக்குச் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பரமன்குறிச்சி.அப்பா யுனிலீவர் நிறுவனத்தில் உற்பத்தித்துறைத் தலைவராக இருந்தவர்.
இவருக்கு 7 வயது இருக்கும் போது இவரது குடும்பத்தினர் அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாணத்திற்க்கு குடிபெயர்ந்தனர்.
பள்ளியில் படிக்கும் பொழுதே FORTRAN, COBOL, PL/1, SNOBOL, BASIC, ஆகிய 5 மொழிகளை கற்றார்.
பின்பு, 1978 இல் "யுனிவர்சிட்டி ஆஃப் மெடிஸின் அண்ட் டென்ஸ்ட்ரி"யில் கம்ப்யூட்டர் புரோகிராம் பணியில் சேர்ந்தார்.
அப்போது அங்கே உள்ள அலுவலகத்தில் உள்ள எல்லா தகவல் பரிமாற்றங்களும் காகிதத்தில் எழுதப்பட்டு அதன் மூலமே நடந்தன.
இது மனித உழைப்பையும், நேரத்தையும் அதிகமாக எடுத்துக் கொண்டதால், இந்தத் தகவல் தொடர்பு பணியைக் கம்ப்யூட்டர்மயமாக்க முடிவெடுத்தார்.
தொடர்ந்து பலநாட்கள் தூக்கம் இல்லாமல், கடுமையாக உழைத்து தகவல் தொடர்புக்கான கம்ப்யூட்டர் புரோகிராமை தனது 14 வது வயதில் உருவாக்கினார்.
இதுவே இ-மெயில்(E-MAIL) என்று அழைக்கப்பட்டது.
"சுமித்சோனியன் தேசிய அமெரிக்க வரலாற்று அருங்காட்சியகம்"1982 ல் இவரது கண்டுபிடிப்பை அங்கீகரித்தது.
இதன் மூலம் தமிழனின் பெருமையை உலகறியட்டும்.
நன்றி - tamizibot 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger