லெப்பைக்குடி காட்டிலிருந்து ஓர்
மடல்....
இறைவன் ஒருவருக்கு உதவி புரிய முடிவெடுத்துவிட்டால் அறியாத புறத்திலிருந்து உரியவருக்கு சென்றடையும் என்ற சொல்லை நிரூபித்த நிகழ்வு...........!!
லெப்பைக்குடி காட்டில் நடந்த உண்மை சம்பவம்.............!!
லெப்பைக்குடி காட்டில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளல்லாம் என்று இந்த விஷயத்தை நான் இங்கு பதிவிடுகின்றேன்.
எங்கள் ஊரில் உள்ள தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பாக சில நாட்களுக்கு முன்பு யார் இவர்? என்ற தலைப்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்ந்த எளிமையான வாழ்க்கை முறை பற்றி விளக்கி சுமார் 2000 கைப்பிரதிகள் அச்சிட்டு மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் விநியோகிக்க முடிவெடுக்கப்பட்டது. அதில் ஒரு பகுதியாக எங்கள் ஊரிலிருந்து மேற்கே சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் திருச்சியிலிருந்து சென்னை செல்லும் NH 45 நெடுஞ்சாலை ஒரு சுங்கசாவடி [Toll Gate] உள்ளது.
அந்த சுங்கச்சாவடி [Toll Gate] யில் சென்னை மார்க்கமாக திருச்சிக்கும், திருச்சி மார்க்கமாக சென்னைக்கும் செல்லும் பேருந்துகள் அங்கு நின்று தான் தான் செல்லமுடியும். அதனால் தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்த சகோதரர்கள் கைப்பிரதிகள் விநியோகம் செய்வதற்கு அந்த பகுதியை தேர்வு செய்து அந்த சுங்க சாவடியை கடக்கும் அனைத்து வாகனங்களில் உள்ளவர்களுக்கும் நோட்டீஸ் விநியோகம் செய்தனர்,
அவ்வாறு விநியோகம் செய்த பேருந்தில் பயணித்த ஒரு மாற்று மத சகோதரர் அந்த நோட்டிசை வாங்கி மடித்து தன் பையில் வைத்து கொண்டு அவர் ஊர் போய் சேர்ந்து விட்டார். அதன் பிறகு தான் அந்த சுவாரஸ்யமான சம்பவம் நடந்ததுள்ளது.
அவரது சட்டைப் பையில் இருந்த கைப்பிரதியை எதார்த்தமாக பார்வையிட்ட அவரது மனைவி எங்கள் ஊர் தவ்ஹீத் ஜமாஅத் கிளைத் தலைவரின் மொபைல் நம்பர் அந்த நோட்டீசில் இருந்ததை பார்த்துவிட்டு அவரை தொடர்பு கொண்டு தனது கணவர் வேறொரு பெண்ணிடம் தவறான உறவு வைத்திருப்பதாகவும் பலமுறை சொல்லியும் அவர் திருந்த வில்லை என்றும் அதனால் நான் எனது குழந்தைகளுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டு இருந்ததாகவும், நீங்கள் விநியோகம் செய்த நோட்டீஸில் முஹம்மத் நபி [ஸல்] அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் அருமையான தீர்வு சொல்லி இருப்பதாகவும் அச்சிடப்பட்டு இருந்ததை படித்து தன் பிரச்சனைக்கு இஸ்லாத்தில் தீர்வு உள்ளதா என்று மேலும் வினவியுள்ளார்.
நம் கிளை தலைவரும் அந்த பெண்ணிற்கு இஸ்லாம் கூறும் ஒரு சில விசயங்களை தொலைபேசியிலே விவரித்து அந்தப் பெண்ணின் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை தவறு என்று புரியவைத்து அந்த முயற்சியை இறைவனின் உதவியோடு கைவிட வைத்துள்ளார். மேலும் அந்த பெண்ணின் கணவரிடம் பேசி பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்த முயற்சி செய்வதாகவும் வாக்குறுதி அளித்து அதற்க்குண்டான முயற்சியல் தவ்ஹீத் சகோதரர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
இத்தனைக்கும் அந்த பெண்ணின் சொந்த ஊர் எங்கள் ஊரிலிருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, எந்த எதிர்ப் பார்ப்பும் இல்லாமல் நம் சகோதரர்கள் செய்த அந்த உன்னத அழைப்பு பனி எங்கோ உள்ள ஒரு குடும்பத்தில் ஏற்பட இருந்த மிகப்பெரும் அசம்பாவிதத்தை தவிர்க்க உதவியாக இருந்துள்ளது, இந்த விஷயத்தை கேள்விப்பட்டதும் அன்று நோட்டீஸ் விநியோகம் செய்த சகோதரர்களுக்கு சந்தோசமும்.மேலும் அதிகமாக அழைப்பு பணிகள் செய்ய வேண்டும் என்ற ஊக்கமும் ஏற்பபட்டுள்ளத,.
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே....
இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் லப்பைகுடிகாடு கிளை.
ஜஸாகல்லாஹ் ஹய்ரன் : Alim Hussain & சங்கை ரித்வான் பக்கம்.

மின்னஞ்சல் மூலமாக சகோதரர் முகவை சம்சுதீன்
Post a Comment