Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label பொது பலசேனா. Show all posts
Showing posts with label பொது பலசேனா. Show all posts

பொது பல சேனாவை விசாரனைக்கு உட்படுத்த வேண்டும்

bodu
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்.
அமைதியான நாட்டுக்குள் பிரச்சினைகளை உண்டாக்கி, நாட்டு மக்களின் ஐக்கியத்தை துண்டாட நினைக்கும் பொது பல சேனா என்ற பிரிவினைவாத இயக்கத்தை அரசு தடை செய்வதுடன் அந்த இயக்கத்தின் அமைப்பாளர்கள் தொடர்பில் விரிவான விசாரனையும் நடத்த வேண்டும் என ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கின்றது.
யுத்தத்திற்கு பின்னரான இலங்கையில் அமைதியும், சுபீட்சமும் நிலை பெற்றுள்ள இவ்வேலையில் கடந்த சில மாதங்களாக இனவாதத்தை மக்கள் மத்தியில் பரப்பி சிறுபான்மை மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கும் விதத்தில் தனது செயல்பாடுகளை அமைத்துக் கொண்டுள்ள பொது பல சேனாவை அரசாங்கம் விசாரனைக்கு உட்படுத்த வேண்டும். என ஜமாத்தின் தலைவர் ஆர்.எம் ரியாழ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இயங்கும் அல்-ஜிஹாத், அல்-கைதா, தௌஹீத் ஜமாஅத் அமைப்புக்கள் தொடர்பில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது பல சேனா அறிக்கை வெளியிட்டுள்ளது.
யுத்தத்தை வெற்றி கொண்டு நாட்டை அமைதியாக வழி நடத்தி வரும் அரசை கொச்சைப் படுத்தும் விதமாக அல்-ஜிஹாத், மற்றும் அல்-கைதா போன்ற ஆயுதம் தாங்கும் போராட்டக் குழுக்கள் இலங்கையில் இருப்பதாக பொது பல சேனா கருத்து வெளியிட்டுள்ளது. இது அரசின் நம்பகத் தன்மையை கெடுக்கும் செயல்பாடாகும்.
உண்மையில் அல்-ஜிஹாத் மற்றும் அல்-கைதா போன்ற இயக்கங்கள் இலங்கையில் இயங்குமாக இருந்தால் அவற்றுக்கு எதிராக அரசாங்கம் கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் எமக்கு எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது.
ஆனால் தாங்கள் இலங்கை நாட்டின் உத்தியோகப் பூர்வமற்ற பொலிசார் என்று கூறிக் கொண்டு சட்டத்தை மதிக்காமல் சட்டத்தை தனது கையில் எடுத்து செயல்படும் பொது பல சேனா எனும் அமைப்பே இலங்கையில் பயங்கரவாத செயல்களில் ஒரு வருடகாலமாக பகிரங்கமான செய்ல்பட்டு வருவதனால் அவ்வமைப்பையும் அதன் அங்கத்தவர்களையும் அரசாங்கம் தடை செய்து உத்தரவிட வேண்டும் என்று அராங்கத்திற்கு கோரிக்கை வைக்கின்றோம்.
தவ்ஹீத் ஜமாஅத் அமைப்புக்களை விசாரனைக்கு உட்படுத்த வேண்டும் என்று பொது பல சேனா கோரிக்கை வைக்கின்றது. உண்மையில் விசாரிக்கப்பட வேண்டியவர்கள் யார்? தவ்ஹீத் ஜமாஅத் அமைப்புக்களா? அல்லது பொது பல சேனாவா? என்பது அரசுக்கும் நாட்டு மக்களுக்கும் தெளிவாகத் தெரிந்த விஷயமாகும்.
இலங்கையில் செயல்படும் தவ்ஹீத் அமைப்புக்களில் எவரும் நாட்டின் இறையான்மைக்கு எதிராக எச்சந்தர்ப்பத்திலும் செயல்படவில்லை. இதே நேரம் அரசின் சுமையை குறைக்கும் விதமாக பலவிதமான சமுதாயப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றார்கள் என்பது நிதர்சனமான உண்மையாகும்.
கடந்த ஒரு மாதங்களாக பொது பல சேனாவின் செயலாளர் கலபடவத்தே ஞானசார தேரர் அமெரிக்காவில் இருந்தார். இவரும் இவருடைய குழுவினரும் அமெரிக்காவுக்கு சென்றது ஏன்? என்பது பற்றி அரசு விரிவான விசாரனை ஒன்றை நடத்த வேண்டும். அதே நேரம் இவர்களுக்கு பின்புலமாகவிருந்த பிரச்சினைகளுக்கு தூண்டுதலாக இருப்பவர்கள் விஷயத்திலும் அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அரசைக் கேட்டுக் கொள்கின்றோம்.
0 comments

இலங்கையில் இயங்கும் அல்-ஜிஹாத், அல்-கைதா, பஹாத், தௌஹீத் ஜமாஅத் அமைப்புக்கள் தொடர்பில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: பொது பலசேனா

இலங்கையில் இயங்கிவரும் முஸ்லிம் அடிப்படையான இயக்கங்களான அல்-ஜிஹாத், அல்-கைதா, பஹாத் மற்றும் தௌபீக் ஜமாஅத் போன்ற அமைப்புக்கள் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்து அதனோடு தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டுமென பொது பலசேனா தெரிவித்தது.



பாகிஸ்தான் ‘‘பாபுல்’’ விற்பனையை தடை செய்ய வேண்டும் இல்லாவிட்டால் எமது சிங்கள இளைஞர்கள் சிந்திக்க முடியாத மன நோயாளர்களாக மாறிவிடுவார்கள் என்றும் அவ் அமைப்பு தெரிவித்தது.

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே பொதுபலசேனா இவ்வாறு தெரிவித்தது.

இங்கு உரையாற்றிய இவ் அமைப்பின் தலைவர் கிரம விமலஜோதி தேரர்,

பொதுபலசேனாவை பயங்கரவாத அமைப்பு என்றும் முஸ்லிம்கள் அச்சத்துடன் வாழ்கின்றார்களென்றும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

ஆனால் முஸ்லிம்களல்ல, இன்று சிங்கள பௌத்தர்களே அச்சத்துடன் வாழும்நிலைமை உருவாகியுள்ளது.

கிழக்கில் பௌத்த விஹாரைகள் புத்தர் சிலைகள் சிதைக்கப்படுகின்றன.

எமது புராதனச் சின்னங்கள் அழிக்கப்படுகின்றன.

அது மட்டுமல்ல, சிங்களவரின் தொழில் செய்யும் உரிமையையும் முஸ்லிம் அடிப்படைவாதிகள் பறிக்க முயல்கின்றனர்.

அண்மையில் புல்மோட்டையில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.

இதன்போது இது அல்லாஹ் முஸ்லிம்களுக்கு கொடுத்த கொடை என்றும் புல்மோட்டை கனிய வள திணைக்களத்தில் தொழில் புரியும் உரிமை முஸ்லிம்களுக்கு மட்டுமே இருப்பதாகவும் எனவே சிங்கள தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டுமென்றும்போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

எனவே முஸ்லிம்களல்ல, இன்று சிங்கள பௌத்தர்களே அச்சத்துடன் வாழும்நிலை உருவாகியுள்ளது.

1970களிலிருந்து சிங்கள இனத்தை அழிக்கும் சூட்சுமமான திட்டங்களை முஸ்லிம் அடிப்படைவாதிகள் நாட்டுக்குள் முன்னெடுத்து வருகின்றனர்.

அது இன்று பாகிஸ்தானியர் ஊடாக கிழக்குக்கு கொள்கலன்களின் 30,000 கர்ப்பத் தடை ஊசி மருந்துகளை கொண்டுவரும் நிலைக்கு உயர்ந்துள்ளது.

பாபுல்

பாடசாலைகளை அண்டிய பகுதிகளில் போதையை உருவாக்கும் பாகிஸ்தானிய பாபுல் விற்பனை செய்யப்படுகின்றது.

சிங்கள இளைஞர்களை இலக்கு வைத்தே இதன் விற்பனை இடம் பெறுகிறது.

இதனால் எமது இளைஞர்கள் எதிர்காலத்தில் சிந்திக்க முடியாத மனநோயாளிகளாக மாறிவிடுவார்கள்.

எனவே பாபுல் விற்பனையை தடை செய்ய வேண்டும். மற்றும் துறைமுகம் விமான நிலையங்கள் ஊடாக வரும் பொருட்களை சுங்க அதிகாரிகள் கடும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

இல்லாவிட்டால் சிங்கள இனம் அழிந்துவிடும் என்றும் கிரம விமலஜோதி தேரர் தெரிவித்தார்.

கலகொட அத்தே ஞானசார தேரர்

நாட்டுக்குள் இயங்கிவரும்முஸ்லிம் அடிப்படைவாத சக்திகள் தொடர்பில் பாராளுமன்றத்தை அவசரமாகக் கூட்டி விவாதமொன்றை நடத்த ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இந்த அரசாங்கத்தை ஹக்கீமோ அல்லது முஸ்லிம் அமைச்சர்களோ ஏற்படுத்தவில்லை.

இன்று வடக்கில் ரிஷாட் பதியுதீன் காடுகளை அழித்து முஸ்லிம்களை பலாத்காரமாக குடியேற்றுகின்றார் என்றும் ஞானசார தேரர் தெரிவித்தார்.

நன்றி - இலங்கை முஸ்லிம் 
.

0 comments

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger