Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label பயனுள்ள தகவல்கள். Show all posts
Showing posts with label பயனுள்ள தகவல்கள். Show all posts

கின்னஸ் புத்தகம் உருவான விதம்.

உலகிலேயே மிகவும் பெரியது. மிகவும் சிறியது ஆகிய விவரங்கள் இதில் அடங்கியிருந்தன. மேலும் அவ்வாண்டு வெளியான புத்தகங்களில் அமோக விற்பனையான புத்தகம் என்ற பெருமையும் கின்னஸ் புத்தகத்திற்குக் கிடைத்தது.

1955 August அன்று தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது சாதனை புரிந்தவர்களைப் பற்றிய செய்திகளோடு புத்தகம் வெளிவந்தது. தொடர்ந்து ஆண்டுதோறும் வெளிவரும் கின்னஸ் புத்தகம் இடையில் 1957, 1959 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மட்டும் வெளிவரவில்லை. இதற்கான காரணம் தெரியவில்லை. தனிப்பட்ட நபரின் எந்த ஒரு புதிய சாதனையையும் கின்னஸ் புத்தகத்திற்கு அனுப்பலாம். இதற்கான தகுந்த
கின்னஸ் புத்தகம்” எப்படி உருவானது தெரியுமா உங்களுக்கு?

1951ம் வருடம் ஒரு நாள் மாலைப்பொழுது, அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ‘கின்னஸ் வாட் சாலை என்ற அமைப்பிற்கு நிர்வாக இயக்குநராக இருந்தவர் ‘சர்க்யூ பீவர்’. இவர் வேட்டையாடுவதற்காக ஒரு நதிக் கரையோரம் சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஆகாயத்தில் ஒரு நீண்ட கோடு போல ஏராளமான பறவைகள் பறந்து சென்று கொண்டிருந்தன. அவர், உடனே அவற்றை சுட எண்ணி, குனிந்து தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்தார்.எடுத்து நிமிர்ந்தவர் அந்தப் பறவைக்கூட்டம் கண்ணுக்கே தெரியாத தொலைவுக்குச் சென்று விட்டதை அறிந்தார். வியப்பில் உறைந்து போனார். என்ன ஒரு வேகம்! ‘கோல்டன் பிளவர்’ என்ற பறவையினம் அவை.

அப்போதுதான் அவருக்கு ஒரு சிந்தனை பளிச்சிட்டது. ஒருவேளை உலகிலேயே மிகவும் வேகமாகப் பறக்கும் பறவையினம் இவையாகத்தான் இருக்குமோ என்று எண்ணினார். பலரிடம் பல புத்தகங்களிலும் விடை தேடினார். பலன்தான் இல்லை.

இது குறித்து நாமே ஒரு புத்தகம் வெளியிட்டால் என்ன என்று யோசித்தார். அவர் உடனே லண்டன் சென்றார். அங்கு அரசாங்கத்திற்காக புள்ளி விவரங்கள் சேகரிக்கும் நோரிஸ் மைக் வைக்ட்டர், ரோஸ் மைக் வைக்ட்டர் என்ற இரட்டைச் சகோதரர்களைச் சந்தித்தார்.
தனது புதிய புத்தக யோசனையை தெரிவித்தார். அவர்களும் ஒத்துழைப்புதர முன்வந்தனர். மூவரின் உழைப்பில் பிறந்ததுதான் கின்னஸ் புத்தகம். முதல் கின்னஸ் புத்தகம் 1955ம் ஆண்டு ஆகஸ்ட் 27ல் 198 பக்கங்களுடன் அவர்களால் வெளியிடப்பட்டது.

ஆதாரங்களைக் காட்டவேண்டும் எப்படி? என பார்ப்போம்.

சாதனையாளரின் சாதனை பற்றிய பத்திரிகை செய்திகள், பார்வையாளர்களாக இருந்த பொறுப்பானவர்களின் கையெழுத்துத் தொகுப்பு, இவை உண்மைதான் என்று ஒரு பொறுப்பான நிறுவனத்தின் தலைவர் வழங்கும் உறுதிமொழி.

இவ்வளவும் அனுப்ப வேண்டும். புதிய சாதனை முந்தைய சாதனையை முறியடிப்பதற்காக இருந்தால் அந்தச் செய்தியும் சாதனையாளர் பற்றிய தகவலும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும்.

கின்னஸ் புத்தகத்தில் சாதனை நிகழ்ச்சிகளை வெளியிடுவார்களே தவிர, யாரையும் சாதனை புரியத் தூண்டமாட்டார்கள். கின்னஸ் புத்தகம் பற்றிக் கூட கின்னஸ் புத்தகத்தில் 1974ல் இடம் பெற்றது.அது உலகிலேயே அதிகமாக விற்பனையான புத்தகம் என்ற வரிசையில்தான். முதலில் ஆங்கிலத்தில் மட்டுமே வெளிவந்த புத்தகம் விரைவிலேயே 35 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

நன்றி -  கருப்பு ரோஜாக்கள்
0 comments

ஒரு பொருள் எந்த நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்பதை பார்க்கவேண்டுமா?

பார்கோடு என்பதற்கு பட்டைக் குறியீடு என்று பெயர். 1948 ஆம் ஆண்டு அமெரிக்காவின் பெர்னார்டு சில்வர் மற்றும் நோர்மன் ஜோசப் உட்லேண்ட் ஆகியோரது முயற்சியால் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சில்லரைக் கடைகளில் கிடைக்கும் தீன்பண்டங்கள் முதல் விலையுயர்ந்த பொருட்கள் வரை இந்த பார்கோடு குறியீட்டின் மூலமே முறைபடுத்தப்பட்டிருப்பதை நாம் காண்கிறோம்.

இந்த பார்கோட்டை வைத்து ஒரு பொருள் எந்த நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்பதை இலகுவாக அடையாளம் காண்பதுடன் எமது சந்தேகத்தையும் தீர்த்துக் கொள்ளலாம். இதற்கிணங்க அதில் முதல் மூன்று எண்கள் 690.691,692 என்றால் அது சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருள் என்று அர்த்தம். அதேபோல் உலகிலுள்ள நாடுகளின் பார்கோட்டை எண்களை பார்ப்போமேயானால்,

00-13: USA & Canada, 20-29: In-Store Functions 30-37: France 40-44: Germany 45: Japan (also 49) 46: Russian Federation 471: Taiwan 474: Estonia 475: Latvia 477: Lithuania 479: Sri Lanka 480: Philippines 482: Ukraine 484: Moldova 485: Armenia 486: Georgia 487: Kazakhstan 489: Hong Kong 49: Japan (JAN-13) 50: United Kingdom 520: Greece 528: Lebanon 529: Cyprus 531: Macedonia 535: Malta 539: Ireland 54: Belgium & Luxembourg 560: Portugal 569: Iceland 57: Denmark 590: Poland 594: Romania 599: Hungary 600 & 601: South Africa 609: Mauritius 611: Morocco 613: Algeria 619: Tunisia 622: Egypt 625: Jordan 626: Iran 64: Finland 690-692: China 70: Norway 729: Israel 73: Sweden 740: Guatemala 741: El Salvador 742: Honduras 743: Nicaragua 744: Costa Rica 746: Dominican Republic 750: Mexico 759: Venezuela 76: Switzerland 770: Colombia 773: Uruguay 775: Peru 777: Bolivia 779: Argentina 780: Chile 784: Paraguay 785: Peru 786: Ecuador 789: Brazil 80 – 83: Italy 84: Spain 850: Cuba 858: Slovakia 859: Czech Republic 860: Yugoslavia 869: Turkey 87: Netherlands 880: South Korea 885: Thailand 888: Singapore 890: India 893: Vietnam 899: Indonesia 90 & 91: Austria 93: Australia 94: New Zealand 955: Malaysia 99: Coupons
0 comments

பிரிட்ஜ் பராமரிப்பு பற்றி உபயோகமான தகவல் !!


 1. பிரிட்ஜை சமையலறையில் வைக்கக் கூடாது. புகை பட்டு நிறம் போய்விடும்.

2. பிரிட்ஜை அடிக்கடி திறக்கக் கூடாது, திறந்தால் உடனே மூடிவிட வேண்டும். இது மின்சார‌த்தை மிச்ச‌ப்ப‌டுத்த‌ உத‌வும்.3. பின்பக்கம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்கக் கூடாது. அந்த வலையில் தண்ணீர் படக் கூடாது. பின்புறம் படியும் ஒட்டடையை மெதுவாக தென்னந்துடைப்பம் மூலம் அகற்ற வேண்டும். 
4. பிரிட்ஜை துடைக்கும்போது ஈரத்துணி அல்லது ஃபோர்ம் போன்றவற்றைக் கொண்டு துடைக்கக் கூடாது. உலர்ந்த துணி கொண்டு துடைக்க வேண்டும்.
5. வெளியூர் செல்லும்போது ஃபிரிட்ஜைக் காயவைத்துச் செல்ல வேண்டும். மாதமிருமுறை ஃபிரிட்ஜுக்கு விடுமுறை கொடுக்கவும்.
6. பிரீசரில் உள்ள ஐஸ் தட்டுகள் எடுக்க வரவில்லை எனில் கத்தியைக் கொண்டு குத்தக் கூடாது. அதற்குப் பதில் ஒரு பழைய காஸ்கட்டைப் போட்டு அதன்மேல் வைத்தாலோ அல்லது சிறிது கல் உப்பைத் தூவி வைத்து அதன் மேல் ஐஸ் தட்டுக்களை வைத்தாலோ சுலபமாக எடுக்க வரும்.
7. பிரிட்ஜ்ஜிலிருந்து வித்தியாசமாக ஓசை வந்தால் உடனடியாக ஒரு மெக்கானிக்கை அழைத்து சரி பார்க்க வேண்டும்.
8. அதிகப்படியான பொருட்களை அடைத்து வைக்கக் கூடாது. ஒவ்வொரு பொருளுக்கும் காற்று செல்வதற்கு ஏற்ப சிறிது இடைவேளி விட்டு வைக்க வேண்டும்.
9. பிரிட்ஜுக்குக் கண்டிப்பாக நில இணைப்புகள் (Earth) கொடுக்க வேண்டும்.
10. பிரிட்ஜை காற்றோட்டம் உள்ள அறையில் மட்டுமே வைக்க வேண்டும். பிரிட்ஜின் உள்ளே குறைந்தப் பொருள்களை வைத்தால் மின்சாரம் குறைவு என்பது தவறான கருத்தாகும்.
11. பிரிட்ஜின் உட்பகுதியை சுத்தம் செய்யும் போது கண்டிப்பாக சோப்புகளை உபயோகப்படுத்தக் கூடாது. இது உட்சுவர்களை உடைக்கும். மாறாக சோடா உப்பு கலந்த வெந்நீரை உபயோகிக்கலாம்.
12. உணவுப் பொருட்களைச் சூட்டோடு வைக்காமல் குளிர வைத்த பின்தான் வைக்க வேண்டும். வாழைப்பழத்தை எக்காரணத்தை கொண்டும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.
13. பச்சைக் காய்கறிகளை பாலிதீன் கவர்களில் போட்டு வைக்கவும். பிரிட்ஜில் வைக்கும் பாட்டில்களை அடிக்கடி சுத்தம் செய்து வெய்யிலில் காய வைத்து உபயோகிக்க வேண்டும்
14. பச்சை மிளகாய் வைக்கும்போது அதன் காம்பை எடுத்து விட்டுத் தான் வைக்க வேண்டும். பிரிட்ஜில் வைக்கும் உணவுப் பொருட்களை மூடி வைக்க வேண்டும்.
15. பிரிட்ஜிலிருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க அதனுள் எப்போதும் சிறிது புதினா இலையையோ, அடுப்புக்கரி ஒன்றையோ அல்லது சாறு பிழிந்த எலுமிச்சம் பழ மூடிகளையோ வைக்கலாம்.
16. கொத்தமல்லிக் கீரை, கறிவேப்பிலை இவைகளை ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்தால் ஒரு வாரத்திற்கு பசுமை மாறாமல் இருக்கும்.
17. பிரிட்ஜின் காய்கறி ட்ரேயின் மீது ஒரு கெட்டித் துணி விரித்து பச்சைக் காய்கறிகளைப் பாதுகாத்தால் வெகு நாள் அழுகிப் போகாமல் இருக்கும்.
18. சப்பாத்தி மாவின் மேல் சிறிது எண்ணெயைத் தடவி பின் ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் நான்கு நாட்கள் ஃபிரஷாக இருக்கும்.
19. பொரித்த அப்பளம், சிப்ஸ், பிஸ்கட் போன்றவை அதிக நாட்கள் முறுமுறுப்பாக இருக்க வேண்டுமானால் அவற்றை ஒரு பாலிதீன் கவரில் போட்டு ஃபிரிஜ்ஜில் வைக்க வேண்டும்.
20. அதிக ஸ்டார்கள் உள்ள பிரிட்ஜை வாங்கினால், மின்சாரத்தை அதிக அளவு மிச்சப்படுத்தும்.
0 comments

ஏகத்துவ காலர் ட்யூன்களை அறிமுகப்படுத்திய ஏர்டெல் நிறுவம்

ஏகத்துவ எழுச்சியில் மற்றுமொரு மைல்கல்!
ஏகத்துவ காலர் ட்யூன்களை ஏற்கனவே பிஎஸ்என்எல் மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியிருந்தன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அதைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தின் முன்னணி செல்ஃபோன் நிறுவனங்களான ஏர்டெல் நிறுவனமும் ஏகத்துவ காலர் ட்யூன்களை அறிமுகப்படுத்தியுள்ளது இது பிறமத மக்கள் மத்தியில் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எடுத்துவைக்க உதவும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ஏகத்துவ காலர் ட்யூன்களை பெற….
ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக இருக்கக் கூடியவர்கள் கீழ்க்கண்ட தலைப்புகளில் உங்களுக்கு விருப்பமான ஏகத்துவ காலர் ட்யூனுக்கு உண்டான எண்ணை உங்களது செல்பேசியிலிருந்து டயல் செய்தால் உங்களுக்கு ஏகத்துவ காலர் ட்யூன்கள் ஆக்டிவேட் செய்யப்படும்.
காலர் ட்யூன் பெயர்ஆல்பம்எண்
அல்லாஹ் தேவைகளற்றவன்Arthamulla Islam5432112620174
அல்லாஹ்வுக்கு ஓய்வில்லைArthamulla Islam5432112620175
தர்கா வழிபாடு இஸ்லாத்தில் இல்லைArthamulla Islam5432112620176
ஏகத்துவம் 1Arthamulla Islam5432112620177
ஏகத்துவம் 2Arthamulla Islam5432112620178
ஏகத்துவம் 3Arthamulla Islam5432112620179
இறைதூதர்கள்Arthamulla Islam5432112620180
இஸ்லாமிய கடமைArthamulla Islam5432112620181
இஸ்லாமிய மார்க்கம்Arthamulla Islam5432112620182
கடமைகள்Arthamulla Islam5432112620183
மறுமைArthamulla Islam5432112620184
மறுமை 1Arthamulla Islam5432112620185
மறுமை 2Arthamulla Islam5432112620186
முஹம்மது நபி 1Arthamulla Islam5432112620187
முஹம்மது நபி 2Arthamulla Islam5432112620188
முஹம்மது நபி 3Arthamulla Islam5432112620189
முஹம்மது நபி 4Arthamulla Islam5432112620190
ஓரிறைக் கொள்கைArthamulla Islam5432112620191
வட்டிArthamulla Islam5432112620192
யாரையும் பெறவில்லைArthamulla Islam5432112620193
எத்தனையோ பாடல்களையும், தேவையற்ற வீணான சினிமா வசனங்களையும் தங்களது காலர் ட்யூன்களாக வைத்து சீரழியும் சமுதாய மக்களை இஸ்லாமிய மார்க்கம் குறித்து சிந்திக்கத் தூண்டும் விதத்தில் இந்த ஏகத்துவ காலர் ட்யூன்கள் பயன்படும். இதை நமது சகோதரர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி ஏகத்துவ அழைப்புப்பணி செய்ய வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
நன்றி - TNTJ.NET 
0 comments

டவுன் சின்ட்ரோம் குழந்தைகளை கருவிலேயே கண்டறிய புதிய வழி

டவுன் சின்ட்ரோம் (மன நலிவு நோய்) நோயினை கருவிலேயே கண்டறிவதற்கான நவீன முறையொன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
பிறக்கவுள்ள குழந்தையிடம் டவுன் சின்ட்ரோம் நோய்க்கான அறிகுறி காணப்படுகிறதா என்பதைக் கண்டறிவதற்கு தற்போது கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகள் சற்று பாரதூரமானவை என்று கருதப்படுகின்றது.

இப்போது கண்டறியப்பட்டுள்ள புதிய நடைமுறையில், தாயின் இரத்தத்தை பரிசோதிப்பதன் மூலம் அதனைக் கண்டுபிடித்துவிட முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.குறிப்பாக, கர்ப்பப்பையில் கரு கலைந்துபோகக்கூடிய அபாயம் இருப்பதாக நம்பப்படுகின்றது.
தாயின் இரத்தத்தில் காணப்படும் முற்றாக வளர்ந்த கருவின் டிஎன்ஏ தகவல்கள் அடங்கிய அணுக்களை இந்த முறைமூலம் பரிசோதிக்க முடியும்.
லண்டன் கிங்ஸ் காலேஸ் மருத்துவமனையில் 1000 பெண்களிடத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் மூலம், இந்த முறை 99 வீதத்துக்கும் அதிகப்படியாக சரியான முடிவைக் காட்டும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த இரத்தப் பரிசோதனை முறை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பரீட்சார்த்தமாக 20 ஆயிரம் பெண்களிடத்தில் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை முஸ்லிம் 
0 comments

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger