Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label சத்திய இஸ்லாத்தை தழுவியோர். Show all posts
Showing posts with label சத்திய இஸ்லாத்தை தழுவியோர். Show all posts

அல் குர்ஆனில் குறை கண்டு பிடிக்க முடியாமல் இஸ்லாத்தை தழுவிய இளம் பெண்

அமெரிக்காவின் டாக்டர் பட்டம் பெற்ற இளம்வயதுப் பெண் ஒருவர் குர்ஆன் மஜீதை குறை கண்டுபிடிக்கும் நோக்கில் ஆராயத்தலைப்பட்டார்.

தனது ஆராய்ச்சியில் அதில் குறை கண்டுபிடிப்பதற்காக பெரும் முயற்சிகளையெல்லாம் மேற்கொண்டார். ஆனால், குறை காண விழைந்த அந்த இளம் டாக்டரை திருக்குர்ஆன் தன் வசம் இழுத்துக் கொண்டது.

ஆம்! அப்பெண்ணின் சிந்தனையில் வெகுநாட்களாக எழுந்துவந்த பல கேள்விகளுக்கு அந்த அருள்வேதத்தில் தெளிவான, திருப்தியான பதிலை பெற்றுக்கொண்டார். அதற்குப் பின் தாமதிப்பதற்கு அந்த இளம் டாக்டருக்கு எதுவும் தடையாக இல்லை. உடனே இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தனது பெயரை மரியா என்று சூட்டிக்கொண்டார்.

அந்த இருபத்தைந்து வயது இளம் பெண் டாக்டர் தனது நிலையைப்பற்றி தானே ஒரு அறிக்கையின் மூலம் வெளியிட்டுள்ளார். அதில்;

அமெரிக்காவில் கலிவலாண்ட் என்னும் பகுதியில் விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தேன். உயிரியல் கல்வியில் பட்டம் பெற்றேன். அதன்பின் மெடிகல் கல்லூரியில் சேர்ந்து அங்கு மேற்படிப்புக்கான முயற்சியியை செய்து வருகிறேன். எனினும் நான் பின்பற்றும் கோட்பாடுகளில் எனக்கு அமைதி ஏற்படவில்லை. மறைமுகமாக ஒரு விஷயம் என்னை தொந்தரவு செய்து வந்தது.

கிறிஸ்தவ மதத்தின் திரியோதனக் கொள்கையின் அடிப்படைப்பற்றி எனது உள்ளத்தில் பலவிதமான கேள்விக்கணைகள் எழுந்த வண்ணமாகவே இருந்தன. இதைவிடவும் கத்தோலிக்க, புராட்டஸ்டண்ட், ஆர்தொடக்ஸ் போன்ற பிரிவுகளாக கிறிஸ்தவத்த்தில் பல கொள்கைகள் ஏன் ஏற்பட்டது? அவையவைகளுக்கு தனித் தனிப்பட்ட கொள்கைகள் ஏன் உருவாகியுள்ளது? என்ற வினாக்கள் எழுந்து கொண்டிருந்தது. ஆனால், எனது நம்பிக்கை ஒரே இறைவன் மீது இருந்தது.

தவறுக்கும், உண்மைக்கும், சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் உள்ள வேறுபாடுகளை பிரித்துணரும் ஆற்றல் என்னிடம் இருந்தது. எனினும் இஸ்லாமைப்பற்றி, அது உண்மையாக அறிந்து கொள்ள வேண்டும். அதே சமயம், நான் அதை ஏற்று பின்பற்றப்பட வேண்டிய மார்க்கம்தான் என்ற நோக்கில் சிந்திக்க முன்வரவில்லை. ஏனெனில் இஸ்லாத்தைப்பற்றி அது ஒரு யுத்த மார்க்கம். கடினத்தை விரும்பும் மார்க்கம் எனவும், அதனைப் பின்பற்றும் முஸ்லிம்கள் கொலை, கொள்ளை, அநியாயம் போன்றவைகளை ஆதரிக்கும் பயங்கரவாதிகள் எனவும் தான் விளங்கி இருந்தேன்.

நான் பல்கலைக்கழகத்தில் நுழைந்தபின், குர்ஆனை குறை காணும் நோக்கத்துடன் இது சத்திய வேதமா? அல்லது அசத்தியமானதா? என்பதை அறிந்து கொள்வதற்காக தலைப்பட்டேன். பக்கங்களைப் புறட்டப்புறட்ட, உள்ளே செல்லச்செல்ல ஆச்சரியமான உற்சாகம் என்னுள் ஏற்படுவதை உணர்ந்தேன்.

இஸ்லாத்தின் கொள்கைகள் மிகவும் தெளிவானதாக, மிகவும் பிரகாசமானதாக, பரிசுத்தமானதாக இருப்பதைக் கண்டேன். அதிலுள்ள இறைக்கொள்கையும் அப்பழுக்கற்றதாக வணங்குவதற்கு தகுதியானவன் ஒரேயொரு இறைவன் தான் என்று உள்ளது. இந்த ஆராய்ச்சிக்குப்பிறகு என்னுள் அமைதியும், நிம்மதியும் ஏற்பட்டதை சொல்லாமல் இருக்க முடியாது. மேலும் என் உள்ளத்தின் ஆழத்தில் இதுவரை எந்தெந்த கேள்விகள் எழுந்து கொண்டிருந்ததோ அவைகள் அத்தனைக்கும் குர்ஆனில் தெளிவான பதிலைப் பெற்றுக்கொண்டேன்.

அதன்பின் பரிசுத்த குர்ஆனையும், மற்ற இஸ்லாமிய நூல்களையும் ஆராய்வதை விருப்பப் பாடமாக எடுத்துக்கொண்டேன். இஸ்லாத்தைப்பற்றி ஆழ்ந்து சிந்திப்பதற்காக எனது ஆராய்ச்சியை அதில் ஈடுபடுத்தினேன். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின், அவர்களது தோழர்களான ஸஹாபாக்களின் வரலாறுகளை ஆராய்ந்தேன்.


இஸ்லாம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மென்மையின் சிகரமாம் பெண்ணினத்திற்கு என்ன ஒரு உயர்வான அந்தஸ்தையும், உரிமைகளையும் கொடுத்திருக்கிறது என்பதை அறிந்து ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றுவிட்டேன். நான் வாழும் அமெரிக்காவில்கூட சிலபல ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் பெண்ணினத்தை மதிப்பது, சமஉரிமை தருவது என்ற பழக்கம் ஏற்படுத்தப்பட்டது.

அதன்பின் எனது ஆராய்ச்சியை விரிவுபடுத்தும் வகையில் கணவன் மனைவிக்கு நடுவில் குடும்ப வாழ்க்கைப்பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினேன். அதற்கு நிகராக அமெரிக்காவில் நடைபெற்றுவரும் குடும்ப வாழ்க்கையையும் ஒப்பிட்டுப் பார்க்க நாடினேன்.

எதிர்பாராத விதமாக கண்ணியமான இஸ்லாமியக் குடும்பத்துடன் ஒரு தொடர்பு ஏற்பட்டது. அவர்களின் வாழ்க்கை முறை, இல்லற வாழ்க்கையில் அமைந்திருந்த ஒழுக்க முறைகள், குழந்தைகளை பராமறிப்பது, அவர்கள்மீது அன்பு செலுத்துவது போன்றவைகளைப் பார்த்து அப்படியே அசந்து போனேன்.

கணவன் மனைவி இருவரும் ஒருவரையொருவர் அன்பு காட்டி வாழ்கிறார்கள். ஒவ்வொருவரும் தத்தமது கடமையை உணர்ந்து வாழ்கிறார்கள். கணவன் மனைவி, ஒருவர் மற்றொருவருக்குச் செய்யும் பணிகளை கண்ணியத்துடன் செய்து கொள்கிறார்கள். இந்நிலை அமெரிக்காவின் பெரும்பாலானக் குடும்பத்தில் காணப்படுவதில்லை.

இஸ்லாத்தில் பெண்களுக்கென தனிப்பட்ட சில சட்டதிட்டங்கள் இருக்கின்றன. அவைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தமானது எது? என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, பட்டென்று கிடைத்த பதில்; ‘பர்தா அணிவது! ஏனெனில், எனக்கு முழுமையான நம்பிக்கையும் பரிபூரணமான அமைதியாகவும் இருக்கிறது. பெண்கள் தங்கள் மேனி முழுவதையும் மறைத்து இருக்க வேண்டுமென்பது ஆண்களைவிட குறைந்தவர்கள் என்ற அர்த்தத்தில் அல்ல. மாறாக இது அவர்களைப் பாதுகாத்துக்கொள்ளவும், கண்ணியமாக வாழவும் செய்கிறது.

இவ்வாறே இஸ்லாம் தலாக் விடப்பட்ட பெண்ணுக்கு குறிப்பிட்ட காலம் வரை ஜீவனாம்சம் அளிக்கிறது. அந்த காலம் வரை (முன்னால்) கணவரின் இல்லத்தில் இருப்பதற்கும் அனுமதி வழங்குகிறது. இதைப்போன்ற சலுகை அமெரிக்காவிலும் செயல் படுத்தப்பட்டால், அமெரிக்காவில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் வீடிழந்து தெருத்தெருவாக அலைந்து திரியும் நிலை ஏற்படாது.

மேலும் இஸ்லாம், பெண்களின் அடிப்படை உரிமைகளையும் தெளிவுபடுத்திக் காட்டியுள்ளது. உதாரணத்திற்கு கூறவேண்டுமானால், பெண் தனது கணவரின் வீட்டையும், குழந்தைகளையும் பராமரிக்க வேண்டுமென பணிக்கிறது. ஏனெனில் குழந்தைகளின் கல்வியிலும், அவர்களை முறைப்படி வளர்ப்பதிலும் கவனம் செலுத்தி காலத்தை ஒதுக்குவதன் மூலம், அவர்களிடம் நல்ல பழக்க வழக்கங்களையும், அழகிய கலாச்சாரங்களையும் ஏற்படுத்த முடியும். அவ்வாறு இல்லாத குழந்தைகள் தான்தோன்றித்தனமாக, தன் மனம்போன போக்கைக் கொண்டதாகவே வளரும். தற்போது அமெரிக்காவில் அவ்விதமான குழந்தைகளைத்தான் காணமுடிகிறது.

அமெரிக்காவில் எவ்விதம் இஸ்லாமியப் பிரசாரத்தை மேற்கொள்ளலாம் என நினைக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு;

அமெரிக்கர்களுக்கு மத்தியில் இஸ்லாமிய மார்க்கத்தைப் பற்றிய அறிவு மிகவும் குறைவாகவே இருக்கிறது. மேலும் இஸ்லாத்தைப்பற்றி அது யுத்த மார்க்கம் எனவும், எப்போதும் சண்டைச் சச்சரவுகளை உருவாக்கும் மார்க்கம் எனவும், கொலை கொள்ளைகளைத் தூண்டும் மார்க்கம் எனவுமே எண்ணியுள்ளனர். அதனால் அவர்கள் இஸ்லாத்தை வாழ்க்கைத் திட்டத்தையுடையதாக எண்ணவே இல்லை. சமீப காலமாக இதில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

ஆகவே, அவர்களுக்கு இஸ்லாத்தின் அனைத்து அறிமுகங்களையும் எடுத்துக்கூறி அது அற்புதமான வாழ்க்கைத் திட்டத்தைக் கொண்ட மார்க்கம் என்பதை விளக்கி அவர்களின் உள்ளத்தில் பதிய வைக்க வேண்டிய கடமை நம்மவர்களுக்கு இருக்கிறது. மேலும் முஸ்லிம்களும் அனைத்து செயல்பாடுகளையும் இஸ்லாமிய அடிப்படையில் அமைத்து வாழ்ந்து காட்டுவதும் கடமையாகும் என்றார்.

நன்றி அனிஷா.. முஸ்லிம் பெண்கள்./ வைகறை facebook
0 comments

நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன்(Daniel Streich )

சுவிட்சர்லாந் நாட்டில் மஸ்ஜிதுகளில் கட்டப்படும் மினாராக்களுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு தலைமை வகித்த சுவிஸ் நாட்டின் அரசியல் தலைவர் டானியல் ஸ்ட்ரீக் – Daniel Streich- சுவிஸ் நாட்டில் மினாராக்கள் கட்டுவதை தடை செய்ய முழு காரணமாக இருந்த சுவிஸ் மக்கள் கட்சியின் முக்கிய உறுப்பினர் இஸ்லாத்தை தழுவியதாக செய்திகள் வெளிவந்தன எனிலும் அதுபற்றியமாறுபட்ட கருத்துகள் வெளிவந்தமையால் அந்த செய்தியை நாம் உடனடியாக தரவில்லை ஆனால் இப்போது .அவர் நேரடியாக சுவிட்சர்லாந் அரச தொலை காட்சியில் தோன்றி தான் இஸ்லாத்தை ஏற்றத்தையும் அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார்.

இஸ்லாத்தை ஏற்றமைகான காரணத்தை இவர் இப்படி குறிபிடுகின்றார்“Islam offers me logical answers to important life questions, which, in the end, I never found in Christianity,”- நான் கிறிஸ்தவத்தில் ஒரு போதும் காணாத வாழ்க்கை பற்றிய மிகவும் முக்கியமான வினாக்களுக்கு இறுதியாக இஸ்லாம் தர்க ரீதியான பதில்களை எனக்கு தந்துள்ளது என்று கூறியுள்ளார் -

இவரை பற்றி சுவிட்சர்லாந் அரச தொலை காட்சி இப்படி கூறியுள்ளது He was a true SVPer and Christian. He read the Bible and regularly went to church. Now Daniel Streich, military instructor and community council member, reads the Qur’an, prays five times a day and goes to a mosque! இவர் உண்மையான SVP உறுபினராகவும்,வழமையாக கிறிஸ்தவ ஆலையத்துக்கு செல்பவராகவும் பைபிளைபடிபவராகவும் இருந்த Daniel Streich என்ற இராணுவ கற்கைக்கான விரிவுரையாளர் சமூக கவுன்சில் உறுப்பினர்   இப்போது மஸ்ஜிதுக்கு செல்கிறார் ஒரு நாளைக்கு ஐந்து தடவைகள் தொழுகிறார் அல் குர்ஆன் படிக்கிறார் என்று குறிபிடுகிறது


இவர் சுவிட்சர்லாந்தில் மினாராக்கள் கட்டுவதை தடைச் செய்ய வேண்டுமென்றூம்மஸ்ஜிதுகளை பூட்டவேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்து பிரச்சாரத்தை வழி நடாத்தியவர் இவரின் மாற்றம் முழு மேற்கு நாடுகளிலும் பெரும் அதிர்வு அலைகளை எழுப்பி வருகின்றது என்பதுடன் இவருடன் இணைந்து இஸ்லாத்துக்கும் ,முஸ்லிம்களுக்கும் எதிரான பிரச்சாரம் செய்த கட்சியின் உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்திருபதாக தெரிவிக்க படுகின்றது
 
 
சுவிட்சர்லாந் நாட்டில் இலச்சம் முஸ்லிம்கள் வாழ்வதாக சுவிட்சர்லாந்தில் இஸ்லாமிய அமைப்பு கூறுகின்றது ஆனால் சுவிட்சர்லாந்தின் 2000 ஆண்டின் மக்கள் தொகை பதிவு 311000 என்று கூறுகின்றது இங்கு 100 கும் அதிகமான் மஸ்ஜிதுகள் இருகின்றன எனிலும்4  மஸ்ஜிதுகள் மாத்திரம் மினாராகளை கொண்டுள்ளது .
 
 
நாடு முழுவதும் ஸ்ட்ரீக் நடத்திய மினாராக்களுக்கெதிரான பிரச்சாரம் இஸ்லாத்திர்கெதிரான மக்களின் எதிர்ப்பை அதிகரித்தது. தனது கடந்த கால நடவடிக்கைகளுக்காக வெட்கப்படுவதாகவும்ஐரோப்பாவிலேயே மிக உயர்ந்த மஸ்ஜித் கட்டுவதற்கு தான் விரும்புவதாகவும் ஸ்ட்ரீக் தெரிவித்துள்ளார் .
 
 
சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் மினாராக்களை தடைச்செய்வது குறித்து விருப்ப வாக்கெடுப்பில் சுவிஸ் நாட்டவர்கள் மினாராக்களை தடைச் செய்ய ஆதரவாக வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமிய வரலாற்றில் ஆரம்பத்தில் இஸ்லாத்தை கடுமையாக எதிதவர்களால் தான் இஸ்லாம் அதிகம் வளர்ந்துள்ளது என்பதும் இஸ்லாத்தின் எதிரியாக இருந்தவர்கள்தான் அதிகம் இஸ்லாத்தை வளர்க்கும் பணிக்கு தமை அற்பணித்தார்கள் என்பதும் இஸ்லாமிய வரலாறு
 
 
நிச்சயமாக எவர்கள் "எங்கள் இறைவன் அல்லாஹ்வே" என்று கூறிபிறகு அதிலேயே நிலைத்து நிற்கிறார்களோஅவர்க்ளுக்கு பயமில்லைஅவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.( குர்ஆன்46:13)
 
From : Shaik  Dhawood

நன்றி - நீடூர் சீசன்ஸ் 
0 comments

நெதர்லாந்தில் அர்னோட் வேன் டோர்ன் (Arnoud van Doorn).சத்திய இஸ்லாத்தை ஏற்றார்

நெதர்லாந்தில் Geert Wilders என்பவர் தோற்றுவித்த Party for Freedom எனும் வலதுசாரி கட்சியின் உறுப்பினர் அர்னோட் வேன் டோர்ன் (Arnoud van Doorn). சமீபத்தில் இவர் இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார்.  கடந்த சனிக்கிழமையன்று (20-04-2013) மதீனாவிற்கும், ஞாயிறு அன்று (21-04-2013) மக்காவிற்கும் வருகை தந்த டோர்ன் தனது உம்ராவை நிறைவு செய்துள்ளார். அத்துடன் ஷேக் அப்துர் ரஹ்மான் அல் ஸுதைஸி உட்பட பல மார்க்க அறிஞர்களைச் சந்தித்து உரையாடியுள்ளார். சரி இதில் என்ன பெரிய பிரமாதம் இருக்கிறது?

இவரது பின்னணியைப் பற்றி சற்று தெரிந்து கொள்வது நல்லது. இறைத்தூதரை இழிவு படுத்தும் நோக்கில்ஃபித்னா எனும் திரைப்படத்தைத் தயாரித்த Geert Wilders-ன் Party for Freedom தலைவர்களில் ஒருவராவார் டோர்ன். விஷமத்தனமான இத் திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து சர்வதேச அளவில் எழுந்த மக்கள் எழுச்சியைக் கண்டு வியந்து போனார். "இந்த மனிதர் முஹம்மதுக்கு முஸ்லிம்களிடத்தில் அப்படி என்ன சிறப்பு?" என்று பெரும் ஆச்சரியம் அடைந்து அக் கேள்விக்கு விடை காணும் ஆய்வில் இறங்கி விட்டார்.

"அந்த ஒரு கேள்விக்கான தேடலே இன்று என்னை முஸ்லிம் ஆக்கியது" என்கிறார் டோர்ன். டட்ச் (Dutch) பாராளுமன்ற உறுப்பினரான இவர், தமது மன மாற்றத்தை தனது ட்விட்டர் பக்கம் மூலம் வெளியுலகத்திற்கு பகிரங்கமாக அறிவித்தார். "லாயிலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்!" எனும் அவரது டிவிட்டர் ஷஹாதா அரபி மொழியில் அமைந்திருந்தது. 46 வயதான டோர்னின் இந்த மனமாற்றம் நெதர்லாந்தில் பெரும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது.

விஷயம் மெல்ல வெளியே கசிந்து பல நாட்களாகியும் இவரின் கட்சி உறுப்பினர்கள் பலருக்கு இது ஒரு வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் ஒரு நகைச்சுவையாகவே இருந்தது. பின்னே? "I hate Islam" என்பது இவரது Party of Freedom கட்சியின் பகிரங்க அடிநாதம். அக்கட்சியைச் சேர்ந்த இவரே இப்போது "I follow Islam" என்றால்? சிரித்தார்கள்.
"இஸ்லாத்தைக் கடுமையாக வெறுக்கக் கூடிய நான் முஸ்லிம் ஆகி விட்டேன் என்பதை நம்ப மறுப்பர் என்பது எனக்கும் தெரியும். ஆனால், நான் கடந்த ஒரு வருடமாக பல முஸ்லிம் அறிஞர்களுடன் பல்வேறு சந்திப்புகளை நடத்தி, மனத்திலுள்ள சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்வதற்காக குர்ஆன், ஹதீஸ்களை முழுமையாக ஆராய்ந்து கொண்டிருந்தேன். அதை எனக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே அறிவர்!" என்கிறார் அல் ஜஸீராவிற்கு பேட்டியளித்த டோர்ன்.
மதீனா நகரின் மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில் தொழும் டோர்ன்மனம் மாறிய கையோடு, தனது மாநகர மேயருக்கு அதிகாரப்பூர்வமாகக் கடிதம் எழுதிக் கோரிக்கை விடுத்திருந்தார் டோர்ன். 'தமது பணி நேரத்தினூடாக தொழுது கொள்ள அனுமதி வேண்டும்' என்ற கோரிக்கை.
"இஸ்லாத்தைப் பற்றிய எதிர்மறை விமர்சனங்களை அதிகமதிகம் கேட்டவன் நான். இன்னமும் இஸ்லாத்தைக் கடுமையாக எதிர்த்துக் கொண்டிருக்கும் என் கட்சியினர், என்னைத் துரோகி என்றே அழைக்கின்றனர். நல்லது. மனதை விசாலமாக்கி, முன் முடிவுகளை கைவிட்டு, ஆராய்ந்து இம்முடிவை நான் தேர்ந்தெடுத்ததை அறிந்த பலரோ எனக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். மற்றவர்களைப் போலவே நானும் வாழ்க்கையில் இதுவரை மாபெரும் தவறுகளை இழைத்திருக்கிறேன். ஆனால், நான் செய்து வந்த தவறுகளிலிருந்து இப்போது நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதன் மூலம் என் பாதை தெளிவாகி விட்டதையும் இதில் நான் பயணிக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது என்பதையும் உணர்கிறேன்!" என்று தமது பேட்டியில் மேலும் கூறியுள்ளார்.
நாங்கள் எவ்வளவு மோசமாக இறைத்தூதர் மீது இல்லாததையும் பொல்லாததையும் இட்டுக் கட்டி ஒரு திரைப்படம் எடுத்து வெளியிட்டிருக்கிறோம்? என் மனம் இன்று புண்படுவது மாதிரி தானே அன்று உலக முஸ்லிம்களும் வேதனை அடைந்திருப்பர்?"
அவதூறு மற்றும் பொய்களை மட்டுமே முதலீடாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஃபித்னா திரைப்படம் பற்றி நினைத்தால் வெட்கித் தலைகுனிவதாகக் கூறும் டோர்ன், நபியவர்கள் மீது நடத்தப்படும் இதுபோன்ற மேற்கத்தியப் பொய்ப் பிரச்சாரங்கள் பற்றி உலகமெங்கும் சென்று எடுத்துரைக்கத் திட்டமிட்டுள்ளேன். இப்போது நினைத்தால் என்னால் வேதனையைத் தாங்க முடியவில்லை. நாங்கள் எவ்வளவு மோசமாக இறைத்தூதர் மீது இல்லாததையும் பொல்லாததையும் இட்டுக் கட்டி ஒரு திரைப்படம் எடுத்து வெளியிட்டிருக்கிறோம்? என் மனம் இன்று புண்படுவது மாதிரி தானே அன்று உலக முஸ்லிம்களும் வேதனை அடைந்திருப்பர்?" என்கிறார்.

இட்டுக் கட்டப்பட்ட தகவல்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஃபித்னா திரைப்படம் ஏற்படுத்திய அவநம்பிக்கையை போக்க, டொராண்ட்டோ (Toronto) நகரில் அமைந்துள்ள இஸ்லாமிய அழைப்பு மையமான Canadian Dawah Association – CDA வுடன் இணைந்து சர்வதேசத் திரைப்படம் ஒன்றினைத் தயாரிக்கப் போவதாகக் கூறுகிறார்.

"இம்முறை என் திரைப்படம் அப்பட்டமான உண்மையைப் பேசும். இஸ்லாத்தைப் பற்றியும் நபிகளாரின் சிறப்புப் பண்புகளையும் இது எடுத்துரைத்து, மேற்கத்திய நாடுகளிடையே பரப்பப் படும் இஸ்லாமோஃபோபியாவை அகற்றும்!" என்கிறார் உறுதியாக.

"உங்களது புனிதப் பயணம் எவ்வாறு இருந்தது?" என்ற கேள்விக்கு, "இதே இடத்திற்கு உம்ரா மற்றும் ஹஜ் செய்யச் செல்பவர்களை கிறுக்குப் பிடித்தவர்கள் (Lunatic) என்றெல்லாம் ஏளனம் செய்துள்ளேன். இப்படி கீழ்த்தரமாக பிறர் மனம் புண்படும்படி நடந்து கொண்ட நான், நபி (ஸல்) அவர்களின் கல்லறைக்கு அருகிலும் ரவ்தா ஷரீஃப்க்கு முன்பு நிற்கும் போதும் என்னுள் பொங்கிய உணர்வுகளை கட்டுப் படுத்த முடியவில்லை. இவ்விடங்களில் நான் தொழும் போது, சுவர்க்கத்தின் அருகே நெருங்கி விட்டது போன்ற தூய்மையானதொரு உணர்வு ஏற்பட்டிருந்தது. என் கண்கள் குளமாயின" 

"இறைத்தூதர் மீது இத்தனை அன்பை வைத்திருக்கும் உலக முஸ்லிம்களைப் போன்றே நானும் என்னை உணர ஆரம்பித்திருக்கிறேன். அதே நேரத்தில், இறைத்தூதர் பற்றி திட்டமிட்டு பரப்பப்படும் தவறான தகவல்களை நம்பி இஸ்லாத்தைக் கடுமையாக வெறுக்கும் சில மேற்கத்தியவர்களையும் நினைத்துப் பார்க்கிறேன். எங்களிடையே தான் எவ்வளவு அறியாமை? எத்தனை பாரபட்சம்? இவற்றை எல்லாம் நான் எப்படி களையப் போகிறேன்?" என்று கவலைப்படுகிறார் டோர்ன்.

"உலக அளவில் முஸ்லிம்களுக்கும் பிற மதத்தினருக்குமுள்ள இடைவெளியைக் குறைத்து அவர்களிடையே அமைதியும் நல்லிணக்கமும் ஏற்படச் செய்வேன். இஸ்லாம் பற்றிய தெளிவை எனக்கு உணர்த்திய இஸ்லாமிய அழைப்பு மையமான CDA வுடன் இணைந்து, அழைப்புப் பணியினை முழு மூச்சுடன் மேற்கொள்வேன்.  இஸ்லாத்தைப் பற்றியும், முஹம்மத் நபி (ஸல்) அவர்களைப் பற்றியும் உண்மைச் செய்திகளை உலகிற்கு எடுத்துச் சொல்ல, என்னுடைய வாழ்க்கையை இனி அர்ப்பணிப்பேன்!" என்று Okaz/Saudi Gazette க்கு அளித்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

- அபூ ஸாலிஹா
நன்றி - அழைப்புப்பணி 

0 comments

சுல்தான்பேட்டை கிளையில் குடும்பத்துடன் இஸ்லாத்தை ஏற்ற தாமோதரன்

புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 29-04-2013 அன்று தாமோதரன் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை தன் குடும்பத்துடன் ஏற்றுக் கொண்டு தனது பெயரை ஜாகிர் என மாற்றிக் கொண்டார்…அல்ஹம்துலில்லாஹ் ....வல்ல இறைவன் இவர்களுக்கு நல்லருள் புரிவானாக !!!

தகவல் - tntj.net 
0 comments

பைபிலின் முரண்பாடுதான் என்னை இஸ்லாத்தை படிக்கத் தூண்டியது.


யூஷா எவன்ஸ் இஸ்லாத்தை தழுவிய வரலாறு.
இன்றைய உலகில் இஸ்லாத்திற்கு எதிரான வன்முறைகளுக்கும், சவால்களுக்கும் மத்தியில் நாளுக்கு நாள் மக்கள் இஸ்லாத்தின் பக்கம் கவரப்படுவதானது இஸ்லாத்தின் மேல் காழ்ப்புணர்வுடன் செயல்படக் கூடிய கயவர்களுக்கு இஸ்லாம் மீது ஒரு விதமான பயத்தை (இஸ்லாம் Fபோபியா) ஏற்படுத்தியுள்ளது. ஹொலிவுட் நடிகர்கள், விஞ்ஞானிகள் இன்னும் பல பிரபல முக்கியஸ்தர்கள் கூட இஸ்லாத்தை ஏற்பதும் இவர்களுக்கு இஸ்லாம் மீதான பயத்தை அதிகரிக்க செய்துள்ளது.
பிரித்தானியாவில் மாத்திரம் வருடத்திற்கு சுமார் 5000ம் பேர் இஸ்லாத்தை தழுவுகின்றார்கள் என்பது வரலாறு சொல்லும் உண்மையாகும். இவ்வாறு உலகில் பல பாகங்களிலும் மாற்று மத அன்பர்கள் இஸ்லாத்தை தேடிப் படித்து அதன் மீது ஏற்படும் கவர்ச்சி காரணமாக இஸ்லாத்தை தழுவிக் கொள்கின்றார்கள். அந்த வகையில் குர்ஆனின் வார்த்தைகளினால் கவர்ந்திழுக்கப்பட்டு இஸ்லாத்தைத் தழுவிய சகோதரர் யூஷா எவன்ஸின் வரலாறு மாற்று மதத்தவர்களுக்கு மட்டுமல்ல குர்ஆன் மனிதர்களுக்கு புரியாது என்று வாதிடுவோர்களுக்கும், வெறுமனே மார்க்கம் காட்டித் தராத சடங்குகளுக்கும் சம்பிரதாயங்களுக்கும் மாத்திரம் குர்ஆனை ஓதுவோருக்கும் ஒரு விழிப்புணர்வு உண்டு பண்ணும் பாடமாய் அமைகின்றது.
யூஷா எவன்ஸ் அமெரிக்காவின் தெற்கு கரோலினாவின் Gக்ரின் வில்லி பகுதியைச் சேர்ந்தவர். சிறு வயதிலேயே தாய் குடும்பத்தை விட்டுப் பிரிந்ததினால் தாத்தா, பாட்டியின் கவனிப்பில் மிகுந்த கட்டுப்பாட்டோடும், கடவுள் பக்தியுடனும் எவன்ஸ் வளர்க்கப்பட்டார்.
கிருத்தவத்தை விரும்பி தன்னை அதனுடனேயே இணைத்துக் கொண்ட எவன்ஸ் தனது 12- 13 வயதிலேயே தேவாலயத்தில் இளைஞர் சேவைகளுக்காக தன்னை இணைத்துக் கொண்டார். தனது 17 வயது முழுமையாக இருக்கும் நிலையில் பொப் ஜோன்ஸ் பல்கலைக் கழகத்தில் புத்தக ஆராய்ச்சியில் ஈடுபடும் 17 வயதுடைய ஒரு நண்பருடன் நட்பு வைத்திருந்தார். கிருத்துவத்தில் ஊறிப்போயிருந்த எவன்ஸ் ஒரு முறை தன் நண்பனின் ஒரே ஒரு கேள்விக்கு நிலை குலைந்து போனார். அங்கு தான் அவருடைய வாழ்க்கை திருப்பமடையத் துவங்கியது.
நண்பர் – நீ பைபிலை படித்திருக்கிறாயா?
எவன்ஸ் – (ஆச்சரியத்துடன்) அதைத் தானே நாம் தேவாலயத்தில் செய்து வருகின்றோம்.
நண்பர் – இல்லை இல்லை நீ பைபிலை முழுவதுமாக படித்துள்ளாயா?
(பதிலில்லாமல் எவன்ஸ் திகைத்து நின்றார்)
மீண்டும் நண்பர் – பைபிலை இறைவனின் வார்தை என்று கூறும் நாம் ஏன் இன்னும் அதனை முழுமையாகப் படிக்காமல் இருக்கின்றோம்?
தன் நண்பர் கேட்ட கேள்வி எவன்ஸை மிகவும் சிந்தனைக்கு உள்ளாக்கியது. பைபிலை முழுமையாக படிக்க முழு முயற்சியில் இறங்கினார் எவன்ஸ். Genesis (The first Book Old Testament)  ல் இருந்து படிக்கத் துவங்கினார். அங்கு தான் அதிர்ச்சிகளும், குழப்பங்களும் அவருக்காகவே காத்திருந்தாற் போல் இருந்தன. பைபிலை தொடந்து வாசித்த எவன்ஸ் இது வரை காலமும் நபிமார்கள் புனிதமானவர்கள், முன்மாதிரியானவர்கள் என பாதிரியார்களினால் தனக்கு போதிக்கப்பட்டதையும், பைபிலில் நூஹ் (அலை) அவர்கள் ஒரு குடிகாரர், லூத் (அலை), தாவுத்  (அலை) அவர்கள் ஆகியோர்களை மோசமானவர்கள் என்று சித்தரிக்கப்பட்டுள்ளதையும் ஒப்பிட்டுப் பார்த்து, இந் நபிமார்கள் மனிதர்களுக்கு முன்மாதிரியாக இருப்பதற்கு கொஞ்சம் கூட தகுதியற்றவர்கள் என்ற முடிவுக்கு வந்தார். Old Testament முழுதும் பல முரண்பாடுகளைக் கண்ட எவன்ஸ் தனக்கு ஏற்பட்ட குழப்பத்தை பாதிரியார்களிடம் சென்று விபரித்தார். பைபிலில் முரண்பாடுகளைக் காணும் எவருக்குமே தன் சந்தேகத்திற்கான நிவர்த்தி இதுவரைக்கும் கிடைக்கவும் இல்லை. இனிமேலும் கிடைக்கப் போவதுமில்லை.
எல்லா பாதியார்களும் கூறும் பதில்தான் எவன்சுக்குகம் விடையாகக் கிடைத்தது. ‘இது நம்பிக்கை சார்ந்த விடயம் கடவுளை உள்ளுணர உணர வேண்டும். கேள்வி கேட்க்கக் கூடாது. மார்க்கத்திற்கு முரணான மத்ஹபு மற்றும் தரீக்காக்களில் ஊறிப் போன உலமாக்களிடத்தில் கூட ஒரு அமல் குறித்து மக்கள் மார்க்கத் தீர்ப்பு கேட்டால் கேள்வி எதுவும் கேட்கக் கூடாது என்று கூறி நழுவிச் செல்வதை நாமும் பார்க்கக் கிடைக்கின்றது. 
அது போல் தான் இந்தப் பாதிரியாரும் எவன்சுக்கு பதிலளித்தார். அது மட்டுமன்றி கேட்ட கேள்விக்கு பதிலளிக்கத் தெரியாமல் அந்த இடத்தை விட்டு அவர் தப்பிக்கும் வண்ணமாக ஜீஸஸ் பற்றியுள்ள New Testament படிக்கும் படி எவன்சுக்கு ஏவினார்.
எவன்சும் அதனைப் படிக்க ஆரம்பித்தார். மக்களால் அறியப்படாத Mathew, Mark, Luke, John ஆகியோரால் எழுதப்பட்ட New Testament ஐ கடவுளின் வார்த்தை என்று கூறுவது நியாயமா? என்பதே இவரின் குழப்பத்தின் ஆரம்பமாக இருந்தது.
ஈஸா (அலை) அவர்கள் மூவரில் ஒருவர் கடவுளின் மகன் என்றெல்லாம் இதுவரை அறிந்த எவன்ஸ் New Testament ல் ஈஸா (அலை) அவர்கள் தன்னை அவ்வாறு சிறப்பித்துக் கூறாததையும், பழைய ஏற்பாடு முழுதும் ஒரே ஒருவன் தான் கடவுள் என்றிருப்பதனையும் கண்டு மேலும் அவர் குழப்பம் அடைந்தார். மீண்டும் பாதிரியாரிடம் சென்று ஒட்டுமொத்த பைபிலும் முன்னுக்குப் பின் முரணாகத் தெரிகின்றது என்று எவன்ஸ் கூறிய போது குழந்தையை சமாளிப்பதைப் போல் எவன்சையும் கேள்வி எதுவும் கேட்ட’லாகாது என்று சமாளித்து விட்டார் பாதிரியார்.
பாதிரியார்கள் சொன்னதை மந்திரமாக ஏற்பதற்கு இனியும் தயாரில்லாத எவன்ஸ் பைபிலைப் பற்றி அறிந்த பேராசிரியர் ஒருவரிடம் தன் சந்தேகங்கள் நியாயம் தானா? என்று கேட்ட சமயத்தில் பைபில் பல காலங்களில் பலரால் மாற்றப்பட்டு வந்துள்ளது. அதனால் அது தூய்மைத் தன்மையை இழந்து விட்டது. வெறுமனே நம்பிக்கையினால் மாத்திரமே முழுமைப்படுத்தப்பட்டுள்ளது. என அப்பேராசிரியர் எவன்சுக்குக் கூறினார்.
அறிவைக் கொடுத்த இறைவன் அதனால் சிந்திக்கும் திறனையும் கொடுத்துள்ளான் என்பதை உணர்ந்த எவன்ஸ் பல காலங்களில் பலரால் மாற்றப்பட்ட ஒரு நூல் ஒரு போதும் கடவுளின் வார்த்தையாக இருக்காது என்பதை தீர்க்கமாக முடிவெடுத்து தாமாக விரும்பி இணைந்த கிருத்தவத்தை விட்டு வெளியேறி விட்டார்.
அப்போது எவன்சுக்கு வயது 17 ஐயும் தாண்டவில்லை.
பைபில் கடவுளின் வார்த்தையாக இல்லாவிட்டால் எதுதான் கடவுளின் வார்த்தை? என்ற தேடலில் ஈடுபட்டார் எவன்ஸ். கேட்டதையெல்லாம் நம்பிய எவன்ஸ். இனிமேலும் கண்டதை படித்தும் ஏமாற விரும்பவில்லை. எந்த மதத்தைப் படித்தாலும், அது பைபிலைப் போல் பொய் சொல்கின்றதா? என்ற எச்சரிக்கையுடன் படித்தார். ஜுடாயிசம், இந்துஸம், Bபுத்திசம், முதற்கொண்டு பகவத் கீதை, மந்திரம் எல்லாவற்றையும் படித்த எவன்ஸ் அவற்றில் ஒன்று கூட மனித அறிவுக்கு ஒத்துவரவில்லை என்பதை அறிந்தார். ஆனால் இத்தனை மதங்களிலும் தேடலில் ஈடுபட்ட எவன்ஸ் இஸ்லாத்தைப் பற்றி மாத்திரம் அலட்டிக் கொள்ளவில்லை.
காரணம் இஸ்லாம் மிகச் சிரிதாகவே அறியப்பட்ட காலம் என்பது அவரது எண்ணமாக இருந்தது. தான் இறைவனைப் பற்றி அறிய ஆவல் கொண்டும் இறைவன் தனக்கு ஒரு வழியையும் ஏற்படுத்தவில்லையே என தவறாக எண்ணி கடவுள் மீது கோபம் கொண்டார். ஈற்றில் வெறுத்துப் போய் தன் 17 வயதிலேயே மார்க்கத் தேடலுக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டார்.
ஒரு முறை நூலகத்தில் படித்துக் கொண்டிருந்த அவருக்கு இஸ்லாம் பற்றிய ஒரு புத்தகம் கிடைத்தது. “முஸ்லிம்கள் பாலை வனத்தில் இருக்கின்ற ஒரு பெட்டியின் உள்ளே வாழ்கின்ற அல்லாஹ் என்ற Moon God ஐ வணங்குகின்றார்கள். முஸ்லிம்கள் என்றாலே அரபியர்கள் தான். பெண்களை அடிமைப்படுத்துபவர்கள். முஸ்லிம்கள் அல்லாத யாரைக் கண்டாலும் கொலை செய்ய அவர்களுக்கு அனுமதியுண்டு. அதற்குப் பெயர் ஜிஹாத். அப்படி அவர்கள் செய்தால் அவர்களுக்கு சுவர்க்கமும், 70 கன்னிகளும் கிடைப்பார்கள்.“ என்று அதிலிருந்தது.
அப்படியே அந்தப் புத்தகத்தை வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார் எவன்ஸ்.
இஸ்லாத்தைப் பற்றி அறிய வந்த ஒருவனுக்கு அது பற்றிய அறிவை இறைவன் வழங்காமலா இருப்பான்?
இஸ்லாத்தின் வாசத்தை நுகர்கின்றார் எவன்ஸ்.
ஒரு முறை எவன்சின் நண்பர் ஒருவர் சில கேள்விகளை கேட்டார்.
நண்பர் – இஸ்லாத்தைப் பற்றி என்ன நினைக்கின்றாய்?
எவன்ஸ் – நினைப்பதற்கு என்ன உள்ளது? நான் பார்த்த மதங்களிலேயே மிகவும் மோசமானது அதுதான்.
நண்பர் – உனக்குத் தெரியுமா நான் ஒரு முஸ்லிம்?
எவன்ஸ் – நீ ஆபிரிக்க அமெரிக்கன் அல்லவா? முஸ்லிம் என்றாலே அரபியர் தானே? (எவன்ஸ் நூலகத்தில் தான் படித்த செய்தியை மையமாக வைத்து கேட்கின்றார்)
நண்பர் – நான் உனக்கு சிலரை அறிமுகப் படுத்துகின்றேன். அவர்கள் இஸ்லாத்தைப் பற்றி உனக்குக் கூறுவார்கள். என்று கூறிவிட்டு, ஜும்மாவுக்கு செல்லவிருந்த நண்பர் எவன்சையும் பள்ளிக்கு அழைத்துச் சென்றார்.
என்ன ஆச்சரியம். அவர் பணிவிடை செய்து வந்த தேவாலயமும், பள்ளிவாயலும் ஒரே தெருவிலேயே அமைந்திருந்தன. அங்கே ஜும்மாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. நாட்காலியில் அமர்ந்த எவன்ஸ் தனக்கு முன் பல ஆண்களும், தனக்குப் பின் பல பெண்களும் இருப்பதைக் கண்டு, ஜிஹாத் நடைபெறப் போகின்றதோ? என்று உள்ளுக்குள் பயமுற்றிருந்தார்.
இஸ்லாத்தை அறியாததின் காரணமாகவும், சிலர் தெரிந்தும் ஏற்றுக் கொள்ளாத பிடிவாதப் போக்கின் காரணமாகவும் இன்றும் சிலர் பள்ளிவாயல் ஜிஹாதுக்கான இடம் என்று தவறுதலாக புரிந்து பள்ளிகள் மீது தமது அடாவடித் தனங்களை அவிழ்த்து விடுகின்றார்கள் என்பது நாம் இன்று இலங்கையில் கண் முன் காணும் கசப்பான உண்மையாகும்.
இது போல் தான் எவன்சும் தனது தவறான எண்ணத்தின் காரணமாக இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் தவறாக நினைத்திருந்தார். அப்போது எவன்சுக்கு பள்ளியில் இமாம் ஆற்றிய ஜும்மா உரை ஆரம்பத்தில் பயத்திற்கு மேல் பயத்தை உண்டாக்கினாலும், அதே உரை தான் அவரின் உள்ளத்தை பெரிதும் ஆக்ரோஷித்தது. ஒரே ஒரு குர்ஆன் வசனமே அந்த உரையின் மையக் கருத்தாகும்.
ஜும்மா உரை முடிந்தவுடன் மக்கள் தொழுகைக்காக எழுந்து நின்றார்கள். இதனைக் கண்ட எவன்ஸ், யாரைத் தொழப் போகின்றீர்கள்? என்று அவர்களிடம் கேட்ட போது, உலகையும், அதிலுள்ள அனைத்தையும் படைத்தானே அவனையே! பைலிலும் இறைவன் என்று இவனையே கூறப்படுகின்றது.
தொழுகை ஆரம்பித்தது, குர்ஆனின் வசனங்களினால் மனதளவில் ஈர்க்கப்பட்டார் எவன்ஸ். மற்ற மத நூல்களையெல்லாம் தெளிவாக ஆராய்ந்த எவன்ஸ், இஸ்லாத்தை மட்டும் ஒரே ஒரு புத்தகத்தை வைத்து முடிவெடுத்ததை நினைத்து வெட்க்கப்பட்டார். எவன்ஸ் அங்கிருந்த இமாமிடம் இருந்த திருமறைக் குர்ஆனின் ஆங்கில மொழி பெயர்ப்பை கேட்டுப் பெற்றுக் கொண்டார். அன்றிரவே குர்ஆனைப் படிக்கத் தொடங்கினார். அதில் ஈஸா (அலை) அவர்கள் பற்றி தெளிவாக அறிந்து கொண்டதுடன், பைபிலில் மோசமாக சித்தரிக்கப்பட்ட நபிமார்கள் உண்மையில் இறையச்சத்துடன் தான் வாழ்ந்து காட்டியுள்ளார்கள். இவர்களே பின்பற்றத் தகுதியானவர்கள் குர்ஆன் தான் நேரான வழிகாட்டி என்ற தீர்க்கமான முடிவுக்கு வந்தார். மூன்று நாட்களில் குர்ஆனைப் படித்த அவர் தானும் குர்ஆனைப் பின்பற்றி நபியவர்கள் காட்டிய வழிப் பிரகாரம் இவ்வுலகில் வாழவேண்டும் என்ற என்ற எண்ணம் அவருக்குள் உத்வேகமாய்ப் பிறந்தது. குர்ஆனைப் போல் ஒரு வேதத்தைக் கொண்டுவரும்படி இறைவன் விடுக்கும் சவால்களையும், கடவுளின் விளக்கங்களையும், அறிவுப் போதனைகளையும் படித்தவுடன் அம்மாற்றத்தினால் எவன்ஸின் உள்ளமும், கண்களும் அழத் தொடங்கின.
யூஷா எவன்ஸ் அடுத்த ஜும்மா நாளிலேயே புனித இஸ்லாமிய மார்க்கத்தில் நுழைந்து தன்னை ஒரு உண்மை முஸ்லிமாக மாற்றிக் கொள்கின்றார். அல்ஹம்து லில்லாஹ்.
ஆங்கில மொழியில் தற்காலத்தில் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்து வருபவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கதொரு பிரச்சாரகராக யுஷா எவன்ஸ் தனது பணியை முன்னெடுத்து வருகின்றார். பல்கலைக் கழகங்களில் விரும்பி அழைக்கப்படும் ஒரு பிரச்சாரகராகவும் இவர் திகழ்கின்றார். இவருடைய பிரச்சாரத்தின் காரணமாக பலர் தூய இஸ்லாத்தை நோக்கி வந்துள்ளார்கள் என்பது கவனிக்கத் தக்கதாகும்.
இமாம்களுக்கும், அறிஞர்களுக்கும் மாத்திரம் தான் திருமறைக் குர்ஆன் புரியும் என்று வாதிடுபவர்கள் யுஷா எவன்ஸ் போன்ற பலர் குர்ஆனைப் படித்து, புரிந்து இஸ்லாத்தில் நுழைவதை வைத்தே அனைவரும் இந்த திருமறைக் குர்ஆன் தெளிவாக விளங்கும், புரிய முடியும் என்பதை இனிமேலாவது உணர்வார்களா?
நன்றி - rasminmisc 
0 comments

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger